Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் எப்படிப்பட்ட ஆட்களாய் இருக்கவேண்டும்?

நாம் எப்படிப்பட்ட ஆட்களாய் இருக்கவேண்டும்?

பாட்டு 177

நாம் எப்படிப்பட்ட ஆட்களாய் இருக்கவேண்டும்?

(2 பேதுரு 3:11)

1. யெகோவாவின் நாளைமனதில் கொண்டிருப்போம்.

அவரையும் குமாரனையும் சார்ந்திருப்போம்.

இருள் வந்தது பகல்நெருங்கிற்று.

முடிவுகிட்டே சாத்தானுலகுக்கு.

ஜெபிப்பதில் எப்போதும் விழிப்பாயிருப்போம்.

ஜெபத்தில் நாம் மும்முரமாய் ஈடுபடுவோம்.

முழு இருதயத்தோடு ஜெபம் செய்வோம்.

தேவன் மட்டும் தரும் மனசமாதானம் காண்போம்.

2. நம் மகிழ்ச்சி அமைதி உலகம் காணவே.

எல்லாரும் அறியகாட்சிப் பொருளாவோமே.

எப்படிப்பட்டோராயிருக்கவேண்டும்?

என்ன பரிசுத்த நடத்தைவேண்டும்?

ராஜ்ய பிறப்பை நம்பிக்கையுடன் சொல்லுவோம்.

புதியவானம், பூமிகுறித்துப்பேசுவோம்.

இதில் நீதிவாசமாயிருக்கும் என்போம்.

நற்செய்தியை அறிவிப்பதில் சிறந்திருப்போம்.

3. தேவநியமங்கள் சிறந்தபலன்தருமே.

அதற்கிசைய வாழ்க்கைப்போக்கை அமைப்போமே.

கிறிஸ்து பாவக்கறையைப்போக்கினாரே.

தேவ சமாதானத்தில் மகிழ்வோமே.

கறையில்லாமல் பிழையில்லாமல் இருப்போம்.

யெகோவாவின் ஊழியராய் விடுவிக்கப்பட்டோம்.

அவரை நம் நண்பராய் கொண்டிருப்போமே.

கடைசிவரை உதவிபராமரிப்பாரே.