படைப்பு யெகோவாவின் மகிமையை வெளிப்படுத்துகிறது
பாட்டு 79
படைப்பு யெகோவாவின் மகிமையை வெளிப்படுத்துகிறது
1. யெகோவாவே நான் நன்கறிவேனே
வானங்கள் உம் மகிமை சொல்லுமே.
பகல் இரவு பேசுகிறதே.
வார்த்தையின்றி அறிவைத்தருமே.
பகல் இரவு பேசுகிறதே.
வார்த்தையின்றி அறிவைத் தருமே.
2. சூரியன் சந்திரன் விண்மீன்கள் படைத்தீர்
சமுத்திரத்திற்கு எல்லைக் குறித்தீர்.
உம்படைப்பை மனிதர் காண்பரே.
துதிக்குப் பாத்திரர் நீர் ஒருவரே.
உம் படைப்பை மனிதர் காண்பரே.
துதிக்குப் பாத்திரர் நீர் ஒருவரே.
3. உம் கற்பனைகள் பூரணம், சத்தியம்.
கட்டளைகளைப் பெற்றோம் உம்மிடம்.
பசும்பொன்னிலும் மேன்மையானதே.
ஞானமடைய பற்றிக்கொள்வோமே!
பசும் பொன்னிலும் மேன்மையானதே.
ஞானமடைய பற்றிக் கொள்வோமே!