மனிதரைப் பார்க்கிலும் தேவனுக்கே கீழ்ப்படிதல்
பாட்டு 2
மனிதரைப் பார்க்கிலும் தேவனுக்கே கீழ்ப்படிதல்
1. தேவவிருப்பம் செய்கிறோம்,
உலகைபின் விட்டோம்.
அவிசுவாசிக்கு விந்தையே,
பொருட்படுத்தோமே.
தேவனுக்கே கீழ்ப்படிவோம்,
உறுதி பூண்டுள்ளோம்.
நம் வாழ்க்கை, செயல்யாவுமே,
அவரைச் சுற்றியே.
2. செலுத்துவோம் “இராயன்”பங்கை,
ஆளுவோர்க்குரியதை.
தேவனைக் கனப்படுத்தும்,
மெய்யரெனக் காட்டும்.
கிரயத்தால் கொள்ளப்பட்டோம்,
நம் சொந்தம் துறந்தோம்.
கர்த்தர் அறிவுரை ஏற்போம்,
தேவனைச் சேவிப்போம்.
3. தேவனுக்குத் துதி சேர்த்தால்,
அமைதியாய் வாழ்ந்தால்,
நாம் அக்கிரமத்தில் நடவோம்,
சண்டையில் கலவோம்.
உன்னதர் கடமை செய்வோம்,
தேவாட்சி சேவிப்போம்.
அவராட்சியே மெய் என்போம்,
அஞ்சாசாட்சி சொல்வோம்.
4. முதலிடம் ஊழியத்திற்கே,
பின்வாங்க மாட்டோமே.
தாகமுள்ளோர் தேவவார்த்தை
ருசிக்க வேண்டுமே.
மனிதர் தலையிட்டாலும்,
செய்வது தெரியும்:
கீழ்ப்படிதல் தேவனுக்கே,
கைவிடமாட்டாரே!