மன்னிக்கிறவர்களாய் இருங்கள்
பாட்டு 110
மன்னிக்கிறவர்களாய் இருங்கள்
1. யெகோவாஅன்புள்ளவரே,
பாவநிலை கண்டாரே.
மகன் மீட்கும் பொருளானார்,
அவரை அனுப்பினார்.
மனந்திரும்புவோமானால்,
மன்னிப்பு கேட்போமானால்,
பலியின் நன்மையைக் காண்போம்.
மன்னிப்பைப் பெற்றிடுவோம்.
2. தேவனைப் பின்பற்றுவோரே,
பிறரை மன்னிப்போரே,
அன்பிரக்கம் காண்பிப்போரே,
மன்னிப்பு பெறுவாரே.
அபூரணமனிதர் நாம்,
சொல் தவறுகிறோம் நாம்.
பாவச் செயல் செய்கிறோமே,
மன்னிப்பவசியமே.
3. துயர்நாட்கள் தவிர்ப்பது
பிறரை மன்னிப்பது.
அன்பைப் பிரதிபலிப்போமே.
இது தேவ குணமே.
மனப்பூர்வமாய் மன்னிப்போம்.
நம் முதிர்ச்சி காண்பிப்போம்.
பிறரைப் புரிந்துகொள்வோம்.
சமாதானம் பெறுவோம்.
4. மன்னித்தல் ஒரு நற்பண்பு,
வளர்க்க வேண்டிய பண்பு,
பகை, கோபம் நீக்கிடுமே.
நம்மைத் தற்காத்திடுமே.
உன்னதரே மன்னிக்கிறார்.
நல்மாதிரியாகிறார்.
நாமும் உண்மையாய் மன்னிப்போம்.
அவர்தயை போற்றுவோம்.