முன்னேறு!
பாட்டு 123
முன்னேறு!
1. முன்னேறு, முன்னேறு, முதிர்ச்சியடை!
தேவசித்தத்தின்பிரகாரம் திறமையடை.
ஊழியத்தில் முன்னேறமுயற்சிப்பீரே;
உன்னை ஆசீர்வதிப்பாரே.
யாவர்க்கும் சேவையில் இடமுண்டு,
இயேசுசெய்த வேலையில் பங்குண்டு.
எப்போதும் விழாதபடி காத்துக் கொள்.
நீதியின் பக்கம் நிலைகொள்.
2. முன்னேறு, முன்னேறு, சாட்சிபகரு!
ஜனங்களுக்கு நித்திய நற்செய்தி பகரு.
நம் ராஜா யெகோவாவுக்கு துதிசெய்.
வீடுவீடாய்ப் பிரசங்கம் செய்.
பகைவருக்குப் பயப்படாதே.
பிறர்க்கு சொல்வதில் பின்வாங்காதே.
தேவனின் ராஜ்யம் சமீபம் என்று சொல்.
எங்கும் அவர் சத்தியத்தை சொல்.
3. முன்னேறு, முன்னேறு, என்றும்
தொடர்ந்து மிகுந்த சேவைக்கு திறமையில் வளர்ந்து!
தேவ ஆவி உன்னை என்றும் தூண்டட்டும்,
ஆனந்தம் காணச்செய்யட்டும்.
உண்மைசகோதரரில் அன்புகொள்.
வாரந்தோறும் கூட்டத்தில் பங்குகொள்.
எல்லாருமே முன்னேறிட உதவு.
ஒன்றாகப் பிரகாசித்திடு.