யெகோவாவால் போதிக்கப்படுதல்
பாட்டு 91
யெகோவாவால் போதிக்கப்படுதல்
1. சத்திய ஒளி தருகிற
யெகோவா நம்போதகர்.
ஆட்டை மென்மையாய்
நடத்தும் தெய்வீக நடத்துனர்.
எல்லாரும் அறியவேண்டும்,
அவர் மகா உன்னதர்.
சாந்தமுள்ளோரை தூண்டிடும்
போதனை அளிக்கிறவர்.
பூமியில் கிறிஸ்து இயேசுவே
மிகப் பெரும் போதகர்.
பிதாபோதித்ததை சொல்லி
ராஜ்யத்தை விளக்கினார்.
கோழி குஞ்சுகள் சேர்த்தல்போல்
அன்பாய் உதவ நாடினார்.
செம்மறிபோன்ற மக்களை
இன்றும் அவர் போதிக்கிறார்.
2. யெகோவா தந்த மேய்ப்பர்கள்
உட்பார்வை கொண்டவர்கள்.
கல்விமானின் நாவைக் கொண்டு
நேர்மையைக் காண்பிப்பார்கள்.
திடனற்றோரைத் தேற்றுவர்,
புத்திமதி கொடுப்பர்.
யெகோவாவும் மகிழ்ந்திட
சத்தியத்தையே போதிப்பர்.
யெகோவாவே கற்பிக்கிறார்;
குமாரன் நடத்தவே.
சத்தியம் இதயம் எட்டவே;
ஆம், நமக்கு சிலாக்கியமே.
சத்தியத்தை வாஞ்சிப்போரிடம்
நம் உள்ளம் பொங்கபேசுவோம்.
நாம் கற்றதை அறிவிப்போம்,
தேவனை வணங்கச்செய்வோம்.
3. “யெகோவா தேவனைப்
பற்றிகற்றுக்கொள்ள வாருங்கள்,”
போதிக்கும் வேலை பாருங்கள்,
மீட்பின் வாக்குறுதிகள்.
வாய்மூலம், அச்சுத்தாள்
மூலம் ராஜ்யசெய்தி சொல்லவே;
பூலோகஜாதி ஜனத்தார்
எல்லாரும் கேட்கின்றனரே.
உடன் ஊழியர்களாக
நாம் முன்னேறிட வேண்டுமே.
தற்போதைய சத்தியத்துடன்
நாம் இசைந்திருப்போமே.
கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு
ஆட்சியில் உயிர்த்தெழுவர்.
பூமியில் பூரண ஜீவன்பெற
போதனை பெறுவர்.