யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தரும்
பாட்டு 9
யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியம் தரும்
1. யெகோவா ஆசீர்வதிக்கிறாரே
ஒன்றாய்ச் சேவிக்கையிலே.
ஞானவார்த்தை இதயம் ஊன்றினால்,
மிகுவோம் மகிழ்ச்சியால்.
2. துன்புறுத்தல், பகைபெருகவே,
இவை நாம் சகிப்போமே.
தேவஇரக்கம் எங்கும் காண்கிறோம்,
தைரியமாக சந்திப்போம்.
3. நாம் செய்யவேண்டியவற்றைச் செய்தால்,
சரியானதைச் செய்தால்,
உண்மையுள்ள யெகோவாதேவனே
நம்பேரில் மகிழ்வாரே.
4. வணக்கத்தில் வைராக்கியம்காட்டுவோம்.
ஆசீர்வாதங்கள் காண்போம்!
தம் அன்பார்ந்த தயவைக் காட்டுவார்,
வேதனைகளைக் கூட்டார்.