“யெகோவா என் பக்கம்”
பாட்டு 125
“யெகோவா என் பக்கம்”
1. என் இதயம் யெகோவாவில்
சார்ந்து இருக்கிறதே.
அவர் வழியில் நடக்க
நான் விரும்புகிறேனே.
ஆனால் வாழ்க்கைப் பாதையிலே
துன்ப சூழல் உண்டாகும்.
தேவன் எப்போதும் என்பக்கம்.
கவர்ந்ததவர் அன்பும்!
(பல்லவி)
2. இப்போதும் சோதனை
உண்டு என் விசுவாசத்திற்கு.
என்னைச் சூழ்ந்து சாத்தான்
கூட்டம் மொய்க்கும் தேனீக்கள் போன்று.
தெய்வீக பாதுகாப்பின் கீழ்
அதை வெற்றிக்கொள்வேனே.
தேவன் பெயர் நேசிப்போரை
அவர் நேசிக்கிறாரே.
(பல்லவி)
3. யெகோவாவே தம் தேசத்தின்
எல்லைகள் கூட்டினாரே;
அவர் சித்தம் செய்வதற்கு
பலர் திரண்டனரே.
அவர்களை ஆதரித்து
களிகூருகிறாரே.
அவர்களோடு சேர்ந்து
நான் ஆர்வமாயிருப்பேனே.
(பல்லவி)
யெகோவாதேவன் என்பக்கம்;
அவரை என்றென்றும் துதிப்பேன்.