ராஜ்ய ஊழியர்களே, முன் செல்வீர்!
பாட்டு 43
ராஜ்ய ஊழியர்களே, முன் செல்வீர்!
1. ராஜ்யசெய்தி சொல்ல முன்செல்வீர்;
எல்லாருக்குமே சொல்வீர்.
அயலாரிடம் அன்புகாட்டி,
சாந்தமக்கள் உதவி,
நம்ஊழியத்தை அலங்கரிப்போம்;
சீராக ஆடை அணிவோம்.
நம்ஊழியம் அருமையானதே;
யெகோவாவைத் துதிப்போமே.
(பல்லவி)
2. புதிய ஊழியரே முன்செல்வீர்;
உம்பரிசை நோக்குவீர்.
விட்டொழித்தவற்றை மறப்பீர்;
தேவபெலம் பெறுவீர்.
தேவசெய்தி கொண்டுசெல்வோரே,
உலகத்தாராயில்லையே.
உலக வழி விட்டோடுவீர்;
தேவஊழியராயிருப்பீர்.
(பல்லவி)
3. மீதிபேர், “வேறே ஆடுகளே,”
ஒன்றாக முன் செல்வோமே.
ஆண், பெண், முதியோர்,
இளையோரே, சத்தியபாதை
செல்வோமே. ஊழியம் பரிசுத்தமானது;
நாம் மதிக்கவேண்டியது.
சத்தியம் நேசிப்போரைத் தேற்றிடும்;
தேவனைக் கனப்படுத்தும்.
(பல்லவி)
முன்னே செல்வோம்,
ராஜ்யசெய்தி எங்கும் பரப்பிடுவோம்.
முன்னேபோவோம், யெகோவாபக்கம்
உண்மையாயிருப்போம்.