Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்திருங்கள், உறுதியாய் நிலைத்திருங்கள், திடன் கொள்ளுங்கள்

விழித்திருங்கள், உறுதியாய் நிலைத்திருங்கள், திடன் கொள்ளுங்கள்

பாட்டு 174

விழித்திருங்கள், உறுதியாய் நிலைத்திருங்கள், திடன் கொள்ளுங்கள்

(1 கொரிந்தியர் 16:13)

1. விழிப்பாய் நிலைத்து நிற்பீர்

திடன்கொண்டு போர் செய்வீர்.

அஞ்சாத ஆண்மை வளர்ப்பீர்,

வெற்றி நிச்சயம் காண்பீர்.

மகாகிதியோன் இயேசுவின்கீழ்,

பாளையத்தில் மீதியானியர்,

போர் முழக்கம் கேட்கும் விரைவில்,

பகைவர் தோற்றோடுவர்.

2. விழிப்பாய்த் தெளிந்து நிற்பீர்,

எப்போதும் கீழ்ப்படிவீர்.

அவரவர் நிலைநின்று இயேசு

சொல்வதைக்கேட்டு.

அவர் மாதிரியில் காண்போமே,

யாவின்தயைப்பெற வழியை.

ஒரேசேனையாய் சேவிப்போமே,

காப்போமே உத்தமத்தை.

3. விழிப்பாய்ப் பொறுமை காப்பீர்,

யாவுக்கே காத்திருப்பீர்.

சர்வமும் இயக்குகிறார்,

தாமதிக்கவேமாட்டார்.

கிதியோனின் முந்நூறவர்போல்

நம் தலைவரின் ஆணைபெறு.

கீழ்ப்படிவீர் போர்விதிகட்கு,

தேவ நாமம் போற்றுவீர்.

4. விழிப்பாய் ஒற்றுமை காப்பீர்,

நற்செய்தியைத் தற்காப்பீர்.

தேவராஜ்ய ஒழுங்கிற்குக்

கட்டுப்படுவோம் நன்கு.

தேவ மக்களோடார்ப்பரிப்போம்,

“‘யா’வின்வாள்,கிதியோன்வாள்!” என்போம்.

விழித்திருந்துதிடன்கொள்வீர்!

முற்றுப்பெறத் தொடர்வீர்!