வெளிப்படுகிற கடவுளுடைய “நித்திய நோக்கம்”
பாட்டு 99
வெளிப்படுகிற கடவுளுடைய “நித்திய நோக்கம்”
1.அவரவர் நிலையில்
என்றும் முன் செல்வீரே.
யெகோவாதம் ஊழியர்களை
நடத்துகிறாரே.
மெய்வணக்கம் ஸ்தாபித்தார்,
சொல் நிறைவேற்றவே.
திரள்கூட்டம் தோன்றி
அவர் சித்தம் செய்கிறதே.
2. பேரரசர் யெகோவா
நம்பிக்கை தந்தாரே.
பயந்துமன இருளில்
இனித் தடவோமே.
அமைதியில் வாழ்வது
அவர் நித்திய நோக்கம்.
போர்கள் நீக்குவார்
குமாரன் ஆளுகையின்மூலம்.
3. தம்நோக்கம் வெளிப்பட
ஈடுபாடு வேண்டும்.
ஜீவபாதையில் முன்செல்ல
கவனமும் வேண்டும்.
யெகோவாவின் நோக்கமும்
வெற்றி அடைந்திடும்.
அவர்பேர் போற்றி
ஞானமாய் நடந்திடவேண்டும்.