Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 1

பொருத்தமான முன்னுரை

பொருத்தமான முன்னுரை

அப்போஸ்தலர் 17:22

சுருக்கம்: உங்களுடைய முன்னுரையில் கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுங்கள், எதைப் பற்றிப் பேசப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், அந்த விஷயத்தை அவர்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதை விளக்குங்கள்.

எப்படிச் செய்வது?

  • ஆர்வத்தைத் தூண்டுங்கள். கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியை, வாக்கியத்தை, அனுபவத்தை, அல்லது செய்தியைத் தேர்ந்தெடுங்கள்.

  • எதைப் பற்றிப் பேசப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறீர்கள், எதற்காகப் பேசப்போகிறீர்கள் என்பதை முன்னுரையிலேயே தெளிவாகச் சொல்லுங்கள்.

  • அந்த விஷயம் ஏன் முக்கியம் என்பதை விளக்குங்கள். உங்களுடைய முன்னுரையில், கேட்பவர்களின் தேவைகளை மனதில் வைத்துப் பேசுங்கள். நீங்கள் சொல்லப்போகும் விஷயம் அவர்களுடைய வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசுங்கள்.