Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 10

குரல் வேறுபாடு

குரல் வேறுபாடு

நீதிமொழிகள் 8:4

சுருக்கம்: குறிப்புகளைத் தெளிவாகச் சொல்வதற்கும், கேட்பவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் உங்கள் குரலின் சத்தத்திலும் ஏற்றத்தாழ்விலும் வேகத்திலும் வேறுபாடு காட்டுங்கள்.

எப்படிச் செய்வது?

  • சத்தத்தில் வேறுபாடு காட்டுங்கள். முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்கும், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுவதற்கும் உங்கள் சத்தத்தைக் கூட்டுங்கள். பைபிளிலுள்ள நியாயத்தீர்ப்புச் செய்திகளை வாசிக்கும்போதும் சத்தத்தைக் கூட்டுங்கள். ஆனால், பயத்தையோ கவலையையோ தெரிவிப்பதற்கு அல்லது எதிர்பார்ப்பைத் தூண்டுவதற்கு உங்கள் சத்தத்தைக் குறையுங்கள்.

  • ஏற்றத்தாழ்வில் வேறுபாடு காட்டுங்கள். ஏதோ ஒன்றின் அளவை அல்லது தூரத்தைச் சொல்வதற்கோ, உற்சாகத்தைக் காட்டுவதற்கோ உங்கள் குரலை ஏற்றுங்கள். ஆனால், வேதனையை அல்லது கவலையைத் தெரிவிப்பதற்கு உங்கள் குரலை இறக்குங்கள்.

  • வேகத்தில் வேறுபாடு காட்டுங்கள். சந்தோஷத்தை வெளிக்காட்டுவதற்கு, நீங்கள் பேசும் வேகத்தைக் கூட்டுங்கள். முக்கியமான குறிப்புகளைச் சொல்லும்போது வேகத்தைக் குறையுங்கள்.