படிப்பு 11
ஆர்வத்துடிப்பு
ரோமர் 12:11
சுருக்கம்: ஆர்வத்துடிப்போடு பேசுவதன் மூலம் கேட்பவர்களின் மனதைத் தூண்டி, அவர்களைச் செயல்பட வையுங்கள்.
எப்படிச் செய்வது?
-
தகவல் உங்கள் இதயத்தைத் தொட வேண்டும். என்ன பேசலாம் என்று தயாரிக்கும்போது, நீங்கள் சொல்லும் செய்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். தகவலை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தால்தான் இதயத்திலிருந்து பேச முடியும்.
-
கேட்பவர்களைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் வாசிக்கப்போகும் அல்லது கற்றுக்கொடுக்கப்போகும் விஷயங்கள் மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். எப்படிச் சொன்னால் கேட்பவர்களுக்கு அவற்றின்மேல் மதிப்புக் கூடும் என்றும் யோசித்துப் பாருங்கள்.
-
வார்த்தைகளுக்கு உயிர் கொடுங்கள். சலிப்புத்தட்டுவது போலப் பேசாதீர்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதற்காக நீங்கள் பயன்படுத்தும் சைகைகளும் முகபாவனைகளும் இயல்பாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.