Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 15

உறுதியாகப் பேசுவது

உறுதியாகப் பேசுவது

ரோமர் 8:38, 39

சுருக்கம்: நீங்கள் சொல்வது உண்மை என்றும், முக்கியம் என்றும் உறுதியாக நம்புவதைக் காட்டுங்கள்.

எப்படிச் செய்வது?

  • நன்றாகத் தயாரியுங்கள். முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்; அவை உண்மை என்பதை பைபிள் எப்படி நிரூபிக்கிறது என்றும் புரிந்துகொள்ளுங்கள். ஒருசில எளிமையான வார்த்தைகளில் அவற்றை விளக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். கேட்பவர்களுக்கு அவை எப்படி உதவி செய்யும் என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள்.

  • பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். பிரசுரங்களிலுள்ள வார்த்தைகளை அப்படியே சொல்வதற்குப் பதிலாக, சொந்த வார்த்தைகளில் பேசுங்கள். சொல்லும் விஷயத்தை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகள் காட்ட வேண்டும்.

  • ஊக்கமாகவும் போலித்தனம் இல்லாமலும் பேசுங்கள். போதுமான சத்தத்தோடு பேசுங்கள். கேட்பவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்; உங்கள் கலாச்சாரத்தில் அநாகரிகமாகக் கருதப்பட்டால் மட்டும் அதைத் தவிருங்கள்.