Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 16

நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி பேசுவது

நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி பேசுவது

யோபு 16:5

சுருக்கம்: பிரச்சினைகளைப் பற்றியே பேசாமல், அவை எப்படிச் சரியாகும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். கேட்பவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பேசுங்கள்.

எப்படிச் செய்வது?

  • கேட்பவர்களை நல்ல கண்ணோட்டத்தில் பாருங்கள். யெகோவாவை வணங்குகிற எல்லாருமே அவருக்குப் பிரியமாக நடக்கத்தான் விரும்புகிறார்கள் என்று நம்புங்கள். சிலசமயங்களில் நீங்கள் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கலாம்; ஆனால், அப்படிச் செய்வதற்குமுன் முடிந்தவரை அவர்களை மனதாரப் பாராட்டுங்கள்.

  • எதிர்மறையான தகவல்களை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். பிரயோஜனமாக இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துங்கள். மொத்தத்தில், நீங்கள் பேசுவது நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி இருக்க வேண்டும்.

  • கடவுளுடைய வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். மனிதர்களுக்காக யெகோவா என்ன செய்திருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் வலியுறுத்துங்கள். கேட்பவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் தரும் விதத்தில் பேசுங்கள்.