Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 17

புரியும்படி பேசுவது

புரியும்படி பேசுவது

1 கொரிந்தியர் 14:9

சுருக்கம்: நீங்கள் சொல்லும் விஷயத்தைப் புரிந்துகொள்ள கேட்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

எப்படிச் செய்வது?

  • தகவலை நன்றாகத் தெரிந்து வைத்திருங்கள். சொல்லப்போகும் விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், அதை எளிமையாகவும் சொந்த வார்த்தைகளிலும் விளக்க முடியும்.

  • சின்னச் சின்ன வாக்கியங்களையும் எளிமையான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நீளமான வாக்கியங்களைப் பயன்படுத்தலாம் என்றாலும், முக்கியக் குறிப்புகளை ஒருசில வார்த்தைகளிலும் சின்னச் சின்ன வாக்கியங்களிலும் சொல்வது நல்லது.

  • தெரியாத வார்த்தைகளை விளக்குங்கள். கேட்பவர்களுக்குத் தெரியாத வார்த்தைகளை முடிந்தவரை தவிருங்கள். ஒருவேளை அவர்களுக்குத் தெரியாத ஒரு வார்த்தையை, பைபிள் கதாபாத்திரத்தை, பழங்கால அளவையை, அல்லது பழங்கால வழக்கத்தைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டுமென்றால், அதன் அர்த்தத்தை விளக்குங்கள்.