Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 20

பொருத்தமான முடிவுரை

பொருத்தமான முடிவுரை

பிரசங்கி 12:13, 14

சுருக்கம்: நீங்கள் பேசி முடிக்கும்போது, கற்றுக்கொண்ட விஷயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்ளுங்கள்.

எப்படிச் செய்வது?

  • முடிவுரையை நீங்கள் பேசும் முக்கிய விஷயத்தோடு சம்பந்தப்படுத்திக் காட்டுங்கள். முக்கியக் குறிப்புகளையும் மையப்பொருளையும் திரும்பச் சொல்லுங்கள் அல்லது வேறு வார்த்தைகளில் சொல்லுங்கள்.

  • கேட்பவர்களின் மனதைத் தூண்டுங்கள். கேட்பவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்; அதைச் செய்வதற்கு என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன என்றும் சொல்லுங்கள். நம்பிக்கையோடும் உறுதியோடும் பேசுங்கள்.

  • முடிவுரையை எளிமையாகவும் சுருக்கமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். முடிவுரையில் முக்கியக் குறிப்புகளைப் புதிதாகச் சேர்க்காதீர்கள். கடைசியாக ஒரு தடவை, கேட்ட விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி ஒருசில வார்த்தைகளில் அன்போடு கேட்டுக்கொள்ளுங்கள்.