Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 4

வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது

வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது

மத்தேயு 22:41-45

சுருக்கம்: ஒரு வசனத்தை வாசிப்பதற்கு முன்பு, கேட்பவர்களின் மனதைத் தயார்படுத்துங்கள்.

எப்படிச் செய்வது?

  • அந்த வசனத்தை ஏன் வாசிக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அந்த வசனத்தில் என்ன முக்கியக் குறிப்பைக் காட்ட விரும்புகிறீர்கள் என்பதைக் கேட்பவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை அறிமுகப்படுத்துங்கள்.

  • பைபிளைத்தான் ஆதாரமாக வைத்துப் பேசுகிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். கடவுள் நம்பிக்கையுள்ள ஆட்களிடம் பேசும்போது, பைபிளை கடவுளுடைய வார்த்தை என்று சொல்லுங்கள். இப்படி, கடவுள் சொல்லியிருக்கும் ஞானமான விஷயங்கள்தான் பைபிளில் இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்.

  • வசனத்தின் மேல் ஆர்வத்தைத் தூண்டுங்கள். ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அதற்கு அந்த வசனம் பதில் தரும் என்று சொல்லுங்கள். அல்லது, ஒரு பிரச்சினையைச் சொல்லிவிட்டு, அதைத் தீர்ப்பதற்கு அந்த வசனம் உதவும் என்று சொல்லுங்கள். அல்லது, ஒரு நியமத்தைச் சொல்லிவிட்டு, அதைப் புரிந்துகொள்ள அந்த பைபிள் பதிவு உதவும் என்று சொல்லுங்கள்.