Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 7

துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசுவது

துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசுவது

லூக்கா 1:3

சுருக்கம்: கேட்பவர்கள் சரியான முடிவுக்கு வர, நம்பகமான அத்தாட்சிகளைக் குறிப்பிடுங்கள்.

எப்படிச் செய்வது?

  • நம்பகமான தகவல்களைப் பயன்படுத்துங்கள். கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் பேசுங்கள். முடிந்தவரை, அதிலிருந்து நேரடியாக வாசியுங்கள். ஒரு அறிவியல் உண்மையை, ஒரு செய்தியை, ஒரு அனுபவத்தை, அல்லது வேறொரு அத்தாட்சியைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது நம்பகமான, சமீபத்திய தகவல்தானா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ளுங்கள்.

  • தகவல்களைச் சரியாகப் பயன்படுத்துங்கள். வசனங்களை அவற்றின் சூழமைவுக்கும், பைபிளிலுள்ள மற்ற வசனங்களுக்கும், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வெளியிட்டிருக்கும் பிரசுரங்களுக்கும் இசைவாக விளக்குங்கள். (மத். 24:45) வேறு புத்தகங்களைப் பயன்படுத்தும்போது, அங்கே கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தை அல்லது எழுத்தாளர் சொல்ல நினைத்த கருத்தை மட்டும் சொல்லுங்கள்.

  • அத்தாட்சியை வைத்து நியாயங்காட்டிப் பேசுங்கள். ஒரு வசனத்தை வாசித்த பிறகோ, ஒரு பிரசுரத்திலுள்ள தகவலைச் சொன்ன பிறகோ, சாதுரியமான கேள்விகளைக் கேளுங்கள். அல்லது, உதாரணங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, சொல்லவரும் குறிப்பைத் தெளிவாக விளக்குங்கள். அப்போதுதான், கேட்பவர்கள் தாங்களாகவே யோசித்துச் சரியான முடிவுக்கு வருவார்கள்.