Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 8

உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது

உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது

மத்தேயு 13:34, 35

சுருக்கம்: திறமையாகக் கற்றுக்கொடுப்பதற்கு எளிமையான உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்; அவை கேட்பவர்களின் மனதைத் தொட வேண்டும், முக்கியமான குறிப்புகளைப் புரியவைக்க வேண்டும்.

எப்படிச் செய்வது?

  • எளிமையான உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். இயேசுவைப் போலவே, முக்கியமான விஷயங்களை விளக்குவதற்குச் சாதாரணமான விஷயங்களைப் பயன்படுத்துங்கள், கடினமான விஷயங்களை விளக்குவதற்கு எளிமையான விஷயங்களைப் பயன்படுத்துங்கள். தேவையில்லாத விவரங்களைச் சொல்லி உதாரணத்தைச் சிக்கலாக்காதீர்கள். உதாரணத்திலுள்ள விவரங்கள், நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடத்துக்குப் பொருத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், பொருந்தாத விவரங்களை யோசித்து யாரும் குழம்பிப்போக மாட்டார்கள்.

  • கேட்பவர்களை மனதில் வையுங்கள். கேட்பவர்கள் வழக்கமாகச் செய்கிற அல்லது ஆர்வம் காட்டுகிற விஷயங்களோடு சம்பந்தப்பட்ட உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் உதாரணங்கள் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாமல் அல்லது புண்படுத்தாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • முக்கியக் குறிப்பைக் கற்றுக்கொடுங்கள். சின்னச் சின்ன விவரங்களுக்கெல்லாம் உதாரணங்களைச் சொல்லாதீர்கள்; முக்கியக் குறிப்புகளுக்கு மட்டும் சொல்லுங்கள். கேட்பவர்கள் உங்களுடைய உதாரணத்தை மட்டுமல்லாமல், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தையும் ஞாபகம் வைக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.