Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பாக்கள்

அப்பாக்கள்

அப்பாவின் பொறுப்புகள் என்ன?

உபா 6:6, 7; எபே 6:4; 1தீ 5:8; எபி 12:9, 10

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 22:2; 24:1-4—ஆபிரகாம் ஈசாக்கை உயிருக்கு உயிராக நேசித்தார்; யெகோவாவை வணங்கும் ஒரு பெண்ணை ஈசாக்குக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்காகத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்

    • மத் 13:55; மாற் 6:3—இயேசு “தச்சனுடைய மகன்” என்றும் “தச்சன்” என்றும் அழைக்கப்பட்டார்; அப்படியென்றால், யோசேப்பு தன் மகனுக்குத் தச்சு வேலையைக் கற்றுக்கொடுத்திருந்தார் என்று தெரிகிறது

அப்பாவுக்கு அன்பும் மதிப்பும் காட்டுவது ஏன் அவசியம்?

யாத் 20:12

இதையும் பாருங்கள்: மத் 6:9

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஓசி 11:1, 4—ஒரு அப்பா தன் பிள்ளைகளுக்குக் கற்றுத்தந்து அவர்களைக் கவனித்துக்கொள்வது போல யெகோவா தன் மக்களை ரொம்பப் பாசமாகக் கவனித்துக்கொள்கிறார்; இப்படி, ஒரு அப்பாவாக நல்ல முன்மாதிரி வைப்பதன் மூலம் குடும்பத்தில் அப்பாக்களுக்கு இருக்கும் பங்கைக் கவுரவப்படுத்துகிறார்

    • லூ 15:11-32—பாவம் செய்துவிட்டு மனம் திருந்துகிறவர்களை மன்னிக்கும் அன்பான அப்பாதான் யெகோவா என்பதைக் காட்ட இயேசு இந்தக் கதையைச் சொன்னார்; இப்படி, அப்பாக்களுக்கு ஒரு மதிப்பான பங்கு இருப்பதைக் காட்டினார்