அர்ப்பணிப்பு
யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பதற்கான சரியான காரணம் என்ன?
உபா 6:5; லூ 10:25-28; வெளி 4:11
இதையும் பாருங்கள்: யாத் 20:5
கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால் பைபிள்மேல் நமக்கு என்ன நம்பிக்கை இருக்க வேண்டும்?
சங் 119:105; 1தெ 2:13; 2தீ 3:16
இதையும் பாருங்கள்: யோவா 17:17; எபி 4:12
பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க யெகோவா என்ன ஏற்பாட்டைச் செய்திருக்கிறார், அதிலிருந்து பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
முன்பு செய்த தவறுகளிலிருந்து மனம் திருந்தியிருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லூ 19:1-10—வரி வசூலிப்பவர்களின் தலைவனான சகேயு மனம் திருந்தினான், அதனால் மக்களிடம் அபகரித்ததையெல்லாம் அவர்களிடமே திருப்பிக் கொடுத்தான்
-
1தீ 1:12-16—தன்னுடைய மோசமான வாழ்க்கையை விட்டுவிட்டதைப் பற்றியும், கடவுளும் இயேசுவும் காட்டிய இரக்கத்தினால் தனக்கு மன்னிப்பு கிடைத்ததைப் பற்றியும் பவுல் சொன்னார்
-
தவறு செய்வதை நிறுத்துவதோடு வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்?
கடவுள் விரும்புகிறபடி அவருக்குச் சேவை செய்ய, எப்படிப்பட்ட ஒழுக்கநெறிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்?
1கொ 6:9-11; கொலோ 3:5-9; 1பே 1:14, 15; 4:3, 4
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1கொ 5:1-13—பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவரை சபையிலிருந்து நீக்கிவிடும்படி கொரிந்து சபைக்கு பவுல் சொன்னார்
-
2தீ 2:16-19—சதை அழுகல் நோயைப் போல் பரவும் விசுவாசதுரோகிகளின் பேச்சைத் தவிர்க்கும்படி பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தார்
-
கடவுளுடைய ஊழியர்கள் ஏன் இந்த உலக அரசாங்கங்களுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோவா 6:10-15—ஒரு பெரிய கூட்டத்துக்கு இயேசு அற்புதமாக உணவு கொடுத்தார்; அந்த மக்கள் அவரை ராஜாவாக்க நினைத்தார்கள்; ஆனால், இயேசு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டார்
-
யோவா 18:33-36—தன்னுடைய அரசாங்கத்துக்கும் மனித அரசாங்கங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று இயேசு சொன்னார்
-
கடவுளுக்குச் சேவை செய்ய அவருடைய சக்தி நமக்கு எப்படி உதவி செய்யும்?
இதையும் பாருங்கள்: அப் 20:28; எபே 5:18
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
அப் 15:28, 29—விருத்தசேதனம் சம்பந்தமாக ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுப்பதற்குக் கடவுளுடைய சக்தி எருசலேமிலிருந்த ஆளும் குழுவை வழிநடத்தியது
-
கடவுளுக்குச் சேவை செய்யும் விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?
அர்ப்பணம் செய்த கிறிஸ்தவர்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?
மத் 28:19, 20; அப் 2:40, 41; 8:12; 1பே 3:21
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மத் 3:13-17—தன்னுடைய அப்பாவின் விருப்பத்தைச் செய்வதற்காக இயேசு வந்தார், அதை எல்லாருக்கும் காட்டுவதற்காக ஞானஸ்நானம் எடுத்தார்
-
அப் 8:26-39—யெகோவாவை வணங்கிவந்த ஒரு எத்தியோப்பிய அதிகாரி, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்ட பிறகு ஞானஸ்நானம் எடுத்தார்
-