ஆறுதல்
நாம் சோர்ந்துபோகும்போது பைபிள் தரும் ஆறுதல்
ஒரு பிரச்சினையைச் சரிசெய்யவோ ஒரு நியமிப்பைச் செய்யவோ நம்மால் முடியாது என்று நினைப்பது
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யாத் 3:11; 4:10—பார்வோனிடம் பேசவும் கடவுளுடைய மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவரவும் தன்னால் முடியாது என்று மோசே நினைத்தார்
-
எரே 1:4-6—பிடிவாதம் பிடித்த மக்களிடம் யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியைச் சொல்ல தனக்கு வயதும் அனுபவமும் இல்லை என்று எரேமியா நினைத்தார்
-
-
ஆறுதலான வசனங்கள்:
-
ஆறுதலான பைபிள் பதிவு(கள்):
-
யாத் 3:12; 4:11, 12—தான் கொடுத்த நியமிப்பைச் செய்ய உதவி செய்வதாக யெகோவா மோசேக்குத் திரும்பத் திரும்ப உறுதியளித்தார்
-
எரே 1:7-10—பயப்பட வேண்டாம் என்றும், கஷ்டமான நியமிப்பைச் செய்ய உதவி செய்வதாகவும் எரேமியாவுக்கு யெகோவா உறுதியளித்தார்
-
கவலை
பாருங்கள்: “கவலை”
துன்புறுத்தல்
பாருங்கள்: “துன்புறுத்தல்”
நம்முடைய பாவங்களையும் பலவீனங்களையும் நினைத்து நொந்துபோவது
பாருங்கள்: “ஏமாற்றம்”
பயந்து நடுங்குவது; மிரண்டுபோவது
பாருங்கள்: “பயம்”
பொறாமை; வயிற்றெரிச்சல்
பாருங்கள்: “பொறாமை; வயிற்றெரிச்சல்”
மற்றவர்கள் நம்மை மோசமாக நடத்தியதை நினைத்து நினைத்து வேதனைப்படுவது
பாருங்கள்: “மோசமாக நடத்தப்படுவது”
மற்றவர்கள் நம்மைக் காயப்படுத்தும்போதோ, நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக நடந்துகொள்ளும்போதோ, ஒருவேளை நமக்குத் துரோகம் செய்யும்போதோ ஏற்படும் ஏமாற்றம்
பாருங்கள்: “ஏமாற்றம்”
மனக்கசப்பு; வெறுப்பு
பிரச்சினைகள் அடுத்தடுத்து வரும்போது சிலர் வெறுப்படைகிறார்கள்
இதையும் பாருங்கள்: சங் 142:4; பிர 4:1; 7:7
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆறுதலான வசனங்கள்:
-
ஆறுதலான பைபிள் பதிவு(கள்):
-
ரூ 1:6, 7, 16-18; 2:2, 19, 20; 3:1; 4:14-16—கடவுளுடைய மக்களிடம் திரும்பிப் போனபோது நகோமிக்கு உதவி கிடைத்தது, நகோமியும் மற்றவர்களுக்கு உதவி செய்தாள்; அதனால், அவளுக்கு மறுபடியும் சந்தோஷம் கிடைத்தது
-
யோபு 42:7-16; யாக் 5:11—யோபு விசுவாசத்தோடு சகித்திருந்தார்; அதனால், யெகோவா அவருக்கு ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுத்தார்
-
மற்றவர்களால் மோசமாக நடத்தப்படும்போது சிலர் மனக்கசப்படைகிறார்கள்
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 1:6, 7, 10, 13-16—அன்னாளை பெனின்னாள் மோசமாக நடத்தினாள், தலைமைக் குருவான ஏலியும் அன்னாளைத் தவறாகப் புரிந்துகொண்டார்; அதனால், அவள் மனமுடைந்துபோனாள்
-
யோபு 8:3-6; 16:1-5; 19:2, 3—யோபுவின் மூன்று நண்பர்கள், ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அநியாயமாக அவர்மேல் குற்றம் சுமத்தினார்கள்; அதனால், யோபு இன்னும் நொந்துபோனார்
-
-
ஆறுதலான வசனங்கள்:
-
ஆறுதலான பைபிள் பதிவு(கள்):
-
1சா 1:9-11, 18—மனதில் இருந்ததையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிய பிறகு, அன்னாளின் மனம் லேசானது
-
யோபு 42:7, 8, 10, 17—யோபு தன் மூன்று நண்பர்களையும் மன்னித்த பிறகு, யெகோவா அவரை ஆசீர்வதித்தார்
-
யெகோவாவுக்குப் பிரயோஜனமாக இருக்கிறோமா என்று சந்தேகப்படுவது
பாருங்கள்: “சந்தேகம்”
வயதாவதால் அல்லது வியாதியால் நிறைய செய்ய முடியாமல்போவது
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2ரா 20:1-3—வியாதிப்பட்டு சாகும் நிலையில் இருந்ததால் எசேக்கியா ராஜா ரொம்பவே வேதனைப்பட்டு அழுதார்
-
பிலி 2:25-30—தனக்கு உடம்பு சரியில்லாமல்போனது சபையில் இருந்தவர்களுக்குத் தெரிந்துவிட்டதை நினைத்து எப்பாப்பிரோதீத்து மனச்சோர்வடைந்தார்; தன் நியமிப்பைச் சரியாகச் செய்யாமல் போய்விட்டதாக அவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று கவலைப்பட்டார்
-
-
ஆறுதலான வசனங்கள்:
-
ஆறுதலான பைபிள் பதிவு(கள்):
-
2சா 17:27-29; 19:31-38—பர்சிலாவை உயர்வாக மதித்ததால் தன்னோடு வரும்படி ராஜா அவரை எருசலேமுக்கு அழைத்தார்; ஆனால் பர்சிலா, தனக்கு வயதாகிவிட்டதால் வர முடியாது என்று அடக்கத்தோடு மறுத்துவிட்டார்
-
சங் 41:1-3, 12—தன் உடல்நிலை ரொம்ப மோசமானபோதும் யெகோவா தனக்கு உதவி செய்வார் என்று தாவீது ராஜா உறுதியாக நம்பினார்
-
மாற் 12:41-44—தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் நன்கொடையாகக் கொடுத்துவிட்ட ஒரு ஏழை விதவையை இயேசு பாராட்டினார்
-
வாட்டி வதைக்கும் குற்றவுணர்ச்சி
எஸ்றா 9:6; சங் 38:3, 4, 8; 40:12
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2ரா 22:8-13; 23:1-3—திருச்சட்டம் வாசிக்கப்பட்டதைக் கேட்ட பிறகு யோசியா ராஜாவும் அவருடைய மக்களும் தாங்கள் மிகப் பெரிய தவறு செய்திருந்ததைப் புரிந்துகொண்டார்கள்
-
எஸ்றா 9:10-15; 10:1-4—சிலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல், வேறு நாட்டைச் சேர்ந்த பெண்களைக் கல்யாணம் செய்திருந்ததால், எஸ்றாவும் மற்றவர்களும் குற்றவுணர்ச்சியால் ரொம்பவே வேதனைப்பட்டார்கள்
-
லூ 22:54-62—இயேசுவைத் தெரியாது என்று பேதுரு மூன்று முறை சொன்னார், பிறகு குற்றவுணர்ச்சியால் கதறி அழுதார்
-
-
ஆறுதல் தரும் வசனங்கள்:
-
இதையும் பாருங்கள்: ஏசா 38:17; மீ 7:18, 19
-
ஆறுதலான பைபிள் பதிவு(கள்):
-
2நா 33:9-13, 15, 16—யூதாவின் ராஜாக்களிலேயே மனாசே ரொம்ப மோசமானவராக இருந்தார்; ஆனாலும் அவர் மனம் திருந்தினார், யெகோவா அவருக்கு இரக்கம் காட்டினார்
-
லூ 15:11-32—யெகோவா தாராளமாகவும் முழுமையாகவும் மன்னிக்கிறவர் என்பதைப் புரிய வைக்க ஊதாரி மகனின் கதையை இயேசு சொன்னார்
-