இதயம்
இதயம் என்று பைபிள் சொல்லும்போது நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை, அதாவது நம் யோசனைகள், விருப்பங்கள், குணங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றை, குறிக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?
சங் 49:3; நீதி 16:9; லூ 5:22; அப் 2:26
இதையும் பாருங்கள்: உபா 15:7; சங் 19:8
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லூ 9:46-48—முதலிடம் பெற அப்போஸ்தலர்கள் துடித்ததை இயேசு தெரிந்துகொண்டு அவர்களுடைய எண்ணத்தைத் திருத்தினார்
-
நம் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்வது ஏன் முக்கியம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 6:5-7—இதயத்தில் மோசமான எண்ணங்கள் இருந்ததால் மனிதர்கள் வன்முறையில் இறங்கினார்கள், அதனால் கடவுள் பெருவெள்ளத்தைக் கொண்டுவந்தார்
-
1ரா 11:1-10—சாலொமோன் ராஜா தன் இதயத்தைப் பாதுகாக்காமல் போய்விட்டார்; அவர் கல்யாணம் செய்திருந்த மற்ற தேசத்துப் பெண்கள் அவருடைய இதயத்தை யெகோவாவைவிட்டு வழிவிலகச் செய்துவிட்டார்கள்
-
மாற் 7:18-23—கடவுளுடைய பார்வையில் ஒருவரைத் தீட்டுப்படுத்தும் எல்லாமே இதயத்திலிருந்துதான் வருகின்றன என்று இயேசு சொன்னார்
-
நம் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
சங் 19:14; நீதி 3:3-6; லூ 21:34; பிலி 4:8
இதையும் பாருங்கள்: எஸ்றா 7:8-10; சங் 119:11
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
எபே 6:14-18; 1தெ 5:8—மார்புக் கவசம் எப்படி ஒருவருடைய நிஜமான இதயத்தைப் பாதுகாக்குமோ அப்படித்தான் நீதியும் விசுவாசமும் அன்பும் ஒருவருடைய அடையாளப்பூர்வ இதயத்தைப் பாதுகாக்கும் என்று பவுல் சொல்கிறார்
-
நம் இதயத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று நாம் எப்படித் தெரிந்துகொள்வது?
இதையும் பாருங்கள்: நீதி 6:12-14
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2நா 25:1, 2, 17-27—அமத்சியா ராஜா கொஞ்சக் காலம் யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களைச் செய்துவந்தார், ஆனால் முழு இதயத்தோடு செய்யவில்லை; பிற்பாடு, தலைக்கனத்தோடு யெகோவாவின் பேச்சை மீறியதால் மோசமான விளைவுகளைச் சந்தித்தார்
-
மத் 7:17-20—மரம் கெட்டதாக இருந்தால் அதன் கனிகளும் கெட்டதாக இருக்கும், அதேபோல் நம் இதயம் மோசமாக இருந்தால் நம் செயல்களும் மோசமாக இருக்கும் என்று இயேசு விளக்கினார்
-
நமக்கு ஏன் நல்ல இதயம் தேவை, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இதையும் பாருங்கள்: சங் 119:97, 104; ரோ 12:9-16; 1தீ 1:5
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2ரா 20:1-6—எசேக்கியா ராஜா மரணப் படுக்கையில் இருந்தபோது, அவ்வளவு காலம் அவர் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததற்காக இரக்கம் காட்டச் சொல்லி யெகோவாவிடம் கதறி அழுதார்
-
மத் 21:28-32—என்ன செய்யப்போவதாகச் சொல்கிறோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பதுதான் நமக்கு எப்படிப்பட்ட இதயம் இருக்கிறது என்பதைக் காட்டும்; இரண்டு மகன்களைப் பற்றிய ஒரு உதாரணத்தின் மூலம் இதை இயேசு விளக்கினார்
-
யெகோவா நம் இதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது ஏன் ஆறுதல் தருகிறது?
இதையும் பாருங்கள்: 1சா 2:3
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 16:1-13—யெகோவா வெளித்தோற்றத்தைப் பார்ப்பதில்லை, ஒருவருடைய இதயத்தைத்தான் பார்க்கிறார் என்பதை சாமுவேல் தீர்க்கதரிசி புரிந்துகொண்டார்
-
2நா 6:28-31—மனிதனின் இதயத்தில் இருப்பதை யெகோவா ரொம்ப சரியாகத் தெரிந்துகொண்டு இரக்கம் காட்டுகிறார் என்பதை ஆலய அர்ப்பண விழாவில் சாலொமோன் செய்த ஜெபம் காட்டுகிறது
-