Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரக்கம்

இரக்கம்

இரக்கத்தில் வேறு என்ன குணங்களும் அடங்கியிருக்கின்றன?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 51:1, 2—தாவீது ராஜா இரக்கத்துக்காக யெகோவாவிடம் கெஞ்சியபோது, தன்னை மன்னிக்கும்படியும் பாவத்திலிருந்து சுத்தப்படுத்தும்படியும் கேட்டார்

    • லூ 10:29-37—ஒரு யூதனுக்குக் கருணையும் கரிசனையும் காட்டிய சமாரியனைப் பற்றிச் சொல்வதன் மூலம் இரக்கத்தைப் பற்றி இயேசு பாடம் கற்றுக்கொடுத்தார்

எல்லா மனிதர்களுக்குமே ஏன் இரக்கம் தேவை?

சங் 130:3; பிர 7:20; 1யோ 1:8

இதையும் பாருங்கள்: 1ரா 8:46-50

யெகோவா இரக்கம் காட்டுபவர் என்று எப்படிச் சொல்லலாம்?

யாத் 34:6; நெ 9:17; சங் 103:8; 2கொ 1:3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோபு 42:1, 2, 6-10; யாக் 5:11—யெகோவா யோபுவுக்கு இரக்கம் காட்டினார், யோபுவும் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்று சொல்லிக்கொடுத்தார்

    • லூ 15:11-32—கீழ்ப்படியாத ஒரு மகன் திருந்தி வந்தபோது அவனுடைய அப்பா எப்படி நடந்துகொண்டார் என்று சொல்வதன் மூலம் யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி இயேசு கற்றுக்கொடுத்தார்

யெகோவா ஏன் நமக்கு இரக்கம் காட்டுகிறார்?

ரோ 5:8; 1யோ 4:9, 10

இதையும் பாருங்கள்: தீத் 3:4, 5

பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற கிறிஸ்துவின் பலி எப்படி நமக்கு உதவுகிறது?

இரக்கம் காட்டும்படி நாம் ஏன் கடவுளிடம் கேட்க வேண்டும், அவர் இரக்கம் காட்டுவதற்காக நாம் ஏன் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும்?

லூ 11:2-4; எபி 4:16

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 51:1-4—தாவீது குற்றவுணர்ச்சியால் தவித்தபோது, மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் இரக்கத்தைக் கேட்டுக் கெஞ்சினார்

    • லூ 18:9-14—மனத்தாழ்மையோடு தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்கிறவர்களுக்கு யெகோவா இரக்கம் காட்டுகிறார் என்பதைப் புரிய வைக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்

மோசமான பாவங்களைச் செய்தவர்கள்கூடத் தங்களுக்கு இரக்கம் கிடைக்கும் என்று ஏன் எதிர்பார்க்கலாம்?

உபா 4:29-31; ஏசா 55:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 33:9-13, 15—படுமோசமான ராஜாவாக இருந்த மனாசே மனம் திருந்தி, இரக்கத்துக்காகக் கடவுளிடம் கெஞ்சினார்; அவர் மறுபடியும் ராஜாவானார்; உண்மையிலேயே மனம் திருந்தியிருந்ததைச் செயல்களில் காட்டினார்

    • யோனா 3:4-10—வெட்டு, குத்து, கொலை என்றிருந்த நினிவே மக்கள் மனம் திருந்தினார்கள், கடவுளுடைய இரக்கத்தைப் பெற்றார்கள்

யெகோவாவின் இரக்கத்தைப் பெற நம் பாவங்களை ஒத்துக்கொள்வதும் நம் வழிகளை மாற்றிக்கொள்வதும் ஏன் முக்கியம்?

யெகோவா நமக்கு இரக்கம் காட்டினாலும் நம் பாவத்தின் விளைவுகளிலிருந்தோ தண்டனையிலிருந்தோ நம்மால் முழுமையாகத் தப்பிக்க முடியாது

நாம் ஏன் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும்?

நாம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டாவிட்டால் யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் என்னவாகும்?

மத் 9:13; 23:23; யாக் 2:13

இதையும் பாருங்கள்: நீதி 21:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 18:23-35—நாம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டாவிட்டால் யெகோவா நமக்கு இரக்கம் காட்ட மாட்டார் என்பதைப் புரிய வைக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்

    • லூ 10:29-37—இரக்கம் காட்டாதவர்களை இயேசுவுக்கும் யெகோவாவுக்கும் பிடிக்காது, இரக்கம் காட்டிய சமாரியனைப் போன்றவர்களைத்தான் அவர்களுக்குப் பிடிக்கும்; இதைப் புரிய வைக்க இயேசு ஒரு கதையைச் சொன்னார்

இரக்கம் காட்டுகிறவர்களை யெகோவா எப்படி நடத்துகிறார்?