உத்தமம்
உத்தமம் என்றால் என்ன?
சங் 18:23-25; 26:1, 2; 101:2-7; 119:1-3, 80
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லேவி 22:17-22—“குறையில்லாத” மிருகங்களை மட்டும்தான் தனக்குப் பலி கொடுக்க வேண்டுமென்று யெகோவா சொன்னார்; “குறையில்லாத” என்பதற்கான எபிரெய வார்த்தையை “முழுமையான” என்றும் மொழிபெயர்க்கலாம்; அது, “உத்தமம்” என்பதற்கான எபிரெய வார்த்தையோடு நெருங்கிய தொடர்புடையது; அப்படியென்றால், உத்தமம் என்பது யெகோவாவுக்கு முழுமையான பக்தியைக் காட்டுவதை உட்படுத்துகிறது என்று தெரிகிறது
-
யோபு 1:1, 4, 5, 8; 2:3—ஒருவர் உத்தமராக இருக்க வேண்டுமென்றால் யெகோவாமேல் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்க வேண்டும், அவரை முழு இதயத்தோடு வணங்க வேண்டும், அவருக்குப் பிடிக்காததை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதையெல்லாம் யோபுவின் வாழ்க்கை காட்டுகிறது
-
நாம் ஏன் உத்தமமாக நடந்துகொள்ள வேண்டும்?
சங் 7:8, 9; 25:21; 41:12; நீதி 10:9; 11:3
இதையும் பாருங்கள்: மாற் 12:30
உத்தமமாக நடக்க எது நம்மைத் தூண்டும்?
இதையும் பாருங்கள்: நீதி 27:11; 1யோ 5:3
நாம் எப்படி உத்தமத்தை வளர்த்துக்கொண்டு, அதைக் கட்டிக்காக்கலாம்?
இதையும் பாருங்கள்: உபா 5:29; ஏசா 48:17, 18
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோபு 31:1-11, 16-33—யோபு ஒழுக்கக்கேடாக நடக்கவில்லை, மற்றவர்களை அன்போடும் கண்ணியத்தோடும் நடத்தினார், யெகோவாவை மட்டும்தான் வணங்கினார், சிலை வழிபாட்டுக்கும் பொருளாசைக்கும் அவர் இடம் கொடுக்கவில்லை; இப்படி, அவர் ஒரு உத்தமர் என்பதை நிரூபித்துக் காட்டினார்
-
தானி 1:6-21—தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தார்கள், உணவு விஷயத்தில்கூட! அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் யெகோவாவை வணங்காதபோதும், அவர்கள் உத்தமமாக நடந்துகொண்டார்கள்
-
ஒருவர் அடுத்தடுத்து பல பாவங்களைச் செய்துவிட்டால், அவரால் மறுபடியும் உத்தமமாக நடக்க முடியுமா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1ரா 9:2-5; சங் 78:70-72—தாவீது மனம் திருந்தியபோது யெகோவா அவரை மன்னித்தார்; அவரை ஒரு உத்தமராகப் பார்த்தார்
-
ஏசா 1:11-18—தன் மக்கள் ஏராளமான பாவங்களைச் செய்திருந்ததாக யெகோவா சொன்னார்; ஆனாலும், அவர்கள் மனம் திருந்தி தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால் அவர்களை மன்னிப்பதாகச் சொன்னார்
-