கல்யாணம் செய்யாமல் இருப்பது
கல்யாணமாகாமல் இருப்பது ஒரு வரம் என்று ஏன் சொல்லலாம்?
கல்யாணம் செய்யச் சொல்லி நாம் ஏன் யாரையும் வற்புறுத்தக் கூடாது?
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
ரோ 14:10-12—சகோதர சகோதரிகளை நியாயந்தீர்ப்பது ஏன் தவறு என்று பவுல் விளக்குகிறார்
1கொ 9:3-5—கல்யாணம் செய்துகொள்ளும் உரிமை பவுலுக்கு இருந்தது; ஆனாலும், கல்யாணம் செய்யாமல் இருந்ததால் யெகோவாவுக்கு இன்னும் நிறைய சேவை செய்ய அவரால் முடிந்தது
கல்யாணம் செய்துகொண்டால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கல்யாணமாகாதவர்கள் நினைக்கலாமா?
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
நியா 11:30-40—யெப்தாவின் மகள் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்தாள்
அப் 20:35—இயேசு கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு உதவிகள் செய்ததால் சந்தோஷமாக இருந்தார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன
1தெ 1:2-9; 2:12—கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்த பவுல், ஊழியத்தில் தனக்குக் கிடைத்த சந்தோஷமான, திருப்தியான பலன்களைப் பற்றிச் சொன்னார்
கடவுளுடைய மற்ற ஊழியர்களைப் போலவே கல்யாணமாகாதவர்களும் ஏன் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்?
1கொ 6:18; கலா 5:19-21; எபே 5:3, 4
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
நீதி 7:7-23—ஒழுக்கக்கேடான ஒரு பெண் விரித்த வலையில் விழுந்த வாலிபனுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதைப் பற்றி சாலொமோன் விளக்கினார்
உன் 4:12; 8:8-10—ஒழுக்கமாக நடந்துகொண்டதற்காக சூலேமியப் பெண் பாராட்டப்படுகிறாள்
ஒருவர் எப்படிப்பட்ட சமயத்தில் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுப்பது நல்லது?
இதையும் பாருங்கள்: 1தெ 4:4, 5