கல்யாணம்; திருமணம்
கல்யாண ஏற்பாடு எப்படி ஆரம்பமானது?
ஒரு கிறிஸ்தவர் யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும்?
ஞானஸ்நானம் எடுத்த தங்களுடைய மகனோ மகளோ ஞானஸ்நானம் எடுக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 24:1-4, 7—பொய்த் தெய்வங்களை வணங்கிய கானானியர்கள் மத்தியிலிருந்து அல்ல, யெகோவாவை வணங்கியவர்கள் மத்தியிலிருந்து ஒரு பெண்ணைத் தன் மகன் ஈசாக்குக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் ஆபிரகாம் உறுதியாக இருந்தார்
-
ஆதி 28:1-4—கானானியப் பெண்ணை அல்ல, யெகோவாவை வணங்கும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யச் சொல்லித் தன் மகன் யாக்கோபிடம் ஈசாக்கு சொன்னார்
-
தன்னை வணங்காத ஒருவரைத் தன் ஊழியர் கல்யாணம் செய்யும்போது யெகோவா எப்படி உணருகிறார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1ரா 11:1-6, 9-11—யெகோவா கொடுத்த எச்சரிப்பை மதிக்காமல் மற்ற தேசத்துப் பெண்களை சாலொமோன் கல்யாணம் செய்தார், அவர்களுடைய பேச்சைக் கேட்டு பொய்த் தெய்வங்களை வணங்கினார்; அதனால், யெகோவாவுக்கு சாலொமோன்மேல் பயங்கர கோபம் வந்தது
-
நெ 13:23-27—யெகோவாவை வணங்காத பெண்களைக் கல்யாணம் செய்திருந்தவர்கள்மேல் யெகோவா பயங்கரமாகக் கோபப்பட்டது போலவே நெகேமியாவும் கோபப்பட்டார்; அவர்களைக் கண்டித்துத் திருத்தினார்
-
யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிற... நல்ல பெயர் எடுத்திருக்கிற... ஒருவரைக் கல்யாணம் செய்வது ஏன் ஞானமானது?
இதையும் பாருங்கள்: எபே 5:28-31, 33
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 25:2, 3, 14-17—நாபால் பணக்காரனாக இருந்தான், அதேசமயத்தில் முரடனாகவும் ரொம்ப மோசமானவனாகவும் இருந்தான்; அதனால், அபிகாயிலுக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாத கணவனாக இருந்தான்
-
நீதி 21:9—பொருத்தமில்லாத ஒருவரைக் கல்யாணம் செய்தால் நம் சந்தோஷமும் சமாதானமும் பறிபோய்விடும்
-
ரோ 7:2—ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகும்போது, பாவ இயல்புள்ள தன் கணவரின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறாள் என்று பவுல் சொன்னார்; அதனால், ஞானமுள்ள பெண்கள் தங்களுடைய துணையை ரொம்ப கவனமாகத் தேர்ந்தெடுப்பார்கள்
-
கல்யாணத்துக்குத் தயாராவது
ஒருவர் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்பே தன் எதிர்கால குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள தயாராவது ஏன் முக்கியம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
நீதி 24:27—கல்யாணம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பே ஒரு ஆண் கடினமாக வேலை செய்ய வேண்டும்; அப்போதுதான், தன் எதிர்கால குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளத் தயாராக முடியும்
-
கல்யாணம் செய்யும் எண்ணத்தோடு பழகும் இரண்டு பேர், வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொள்வதும் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதும் ஏன் முக்கியம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ரூ 2:4-7, 10-12—ரூத் எவ்வளவு கடினமாக வேலை செய்தாள்... நகோமியிடம் எப்படி நடந்துகொண்டாள்... யெகோவாமேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தாள்... என்பதையெல்லாம் போவாஸ் கவனித்தார்; நம்பகமானவர்களிடம் அவளைப் பற்றிக் கேட்டும் தெரிந்துகொண்டார்; இப்படி, ரூத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்
-
ரூ 2:8, 9, 20—போவாஸ் எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்... அவருக்கு எவ்வளவு தாராள மனசு இருந்தது... யெகோவாமேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்... என்பதையெல்லாம் ரூத் கவனித்தாள்; இப்படி, போவாஸைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள்
-
ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்யும் எண்ணத்தோடு பழகும்போதும், நிச்சயமான பிறகும் ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
நீதி 5:18, 19—கல்யாணமானவர்கள் மட்டும்தான் காதல் உணர்வை நெருக்கமான விதத்தில் வெளிக்காட்ட வேண்டும்
-
உன் 1:2; 2:6—சூலேமியப் பெண்ணும் அவளுடைய காதலனும் கண்ணியமான விதத்தில் பாசத்தை வெளிக்காட்டினார்கள், காமத் தீயில் பற்றியெரியவில்லை
-
உன் 4:12; 8:8-10—சூலேமியப் பெண் கற்போடும் சுயக்கட்டுப்பாட்டோடும் நடந்துகொண்டாள்; வேலியடைக்கப்பட்ட தோட்டம்போல் இருந்தாள்
-
ஒரு ஆணும் பெண்ணும் ஏன் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும்?
கணவரின் பொறுப்புகள்
கணவர்களுக்கு என்ன முக்கியமான பொறுப்புகளை யெகோவா கொடுத்திருக்கிறார்?
குடும்பத்தைத் தலைமை தாங்கி நடத்தும் விஷயத்தில் கணவர்கள் யாருடைய உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும்?
கணவன் தன் மனைவியைப் புரிந்து நடந்துகொள்வதும் அவளை அன்பாக நடத்துவதும் ஏன் முக்கியம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 21:8-12—சாராள் தந்த ஆலோசனை ஆபிரகாமுக்குப் பிடிக்காவிட்டாலும் அவளுடைய பேச்சைக் கேட்கும்படி யெகோவா அவரிடம் சொன்னார்
-
நீதி 31:10, 11, 16, 28—இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் திறமைசாலியான மனைவியின் ஞானமான கணவர் அவளைக் கட்டுப்படுத்துவதும் இல்லை, குறை சொல்வதும் இல்லை; அதற்குப் பதிலாக, அவளை நம்புகிறார், பாராட்டுகிறார்
-
எபே 5:33—கணவர் தன்மேல் அன்பு வைத்திருப்பதை மனைவி உணரும் விதத்தில் கணவர் நடந்துகொள்ள வேண்டும் என்று பவுல் சொல்கிறார்
-
மனைவியின் பொறுப்புகள்
மனைவிகளுக்கு என்ன முக்கியமான பொறுப்புகளை யெகோவா கொடுத்திருக்கிறார்?
குடும்பத்தில் மனைவியின் பங்கு எந்த விதத்திலாவது மதிப்புக் குறைந்ததா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
நீதி 1:8; 1கொ 7:4—குடும்பத்தில் மனைவிகளுக்கும் அம்மாக்களுக்கும் ஓரளவு அதிகாரத்தைக் கடவுள் கொடுத்திருக்கிறார்
-
1கொ 11:3—யெகோவாவின் ஏற்பாட்டில் அவரைத் தவிர மற்ற எல்லாருக்குமே யாராவது தலையாக இருப்பதாக பவுல் விளக்கினார்
-
எபி 13:7, 17—சபையைத் தலைமை தாங்கி நடத்த நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆண்களும் சரி, பெண்களும் சரி, கீழ்ப்படிய வேண்டும், அடிபணிந்து நடக்கவும் வேண்டும்
-
கணவர் விசுவாசியாக இல்லாத சூழ்நிலையில் கிறிஸ்தவ மனைவி எப்படி யெகோவாவைச் சந்தோஷப்படுத்தலாம்?
ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவருக்கு ஏன் மதிப்புமரியாதை காட்ட வேண்டும்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 18:12; 1பே 3:5, 6—சாராள் தன் கணவருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டினாள்; தன் மனதில்கூட அவரை ‘என் எஜமான்’ என்று சொன்னாள்
-
எப்படிப்பட்ட மனைவியை பைபிள் பாராட்டுகிறது?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 24:62-67—அம்மாவைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து மீண்டுவர தன் கணவர் ஈசாக்குக்கு ரெபெக்காள் உதவினாள்
-
1சா 25:14-24, 32-38—இரக்கம் காட்டும்படி மனத்தாழ்மையோடு தாவீதிடம் கெஞ்சிக் கேட்டதால், தன்னுடைய முட்டாள் கணவரின் உயிரையும் தன் வீட்டாரின் உயிரையும் அபிகாயிலால் காப்பாற்ற முடிந்தது
-
எஸ்தர் 4:6-17; 5:1-8; 7:1-6; 8:3-6—கடவுளுடைய மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, ராஜாவாக இருந்த தன் கணவரை எஸ்தர் ராணி இரண்டு தடவை போய்ப் பார்த்தாள்; அவர் கூப்பிடாதபோதும் தன் உயிரைப் பணயம் வைத்து அப்படிச் செய்தாள்
-
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது
கல்யாண வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எந்த நியமங்கள் ஒரு தம்பதிக்கு உதவும்?
பண விஷயத்தில் சரியான முடிவுகளை எடுக்க எந்த நியமங்கள் ஒரு தம்பதிக்கு உதவும்?
லூ 12:15; பிலி 4:5; 1தீ 6:9, 10; எபி 13:5
இதையும் பாருங்கள்: “பணம்”
அம்மா, அப்பா, மாமனார், மாமியார் போன்ற குடும்பத்தாரின் விஷயங்களில் சரியான முடிவுகளை எடுக்க எந்த நியமங்கள் ஒரு தம்பதிக்கு உதவும்?
தாம்பத்திய உறவு விஷயத்தில் எந்த நியமங்கள் ஒரு தம்பதிக்கு உதவும்?
துணையிடம் இருக்கும் குறைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக அவரிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பார்ப்பது ஏன் முக்கியம்?
கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக உடனடியாகவும் அன்பாகவும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது ஏன் நல்லது?
ஆவேசப்படுவது, கத்துவது, கண்டபடி திட்டுவது, அடிப்பது, உதைப்பது போன்ற எதையுமே கிறிஸ்தவர்கள் ஏன் செய்யக் கூடாது?
கருத்து வேறுபாடு வரும்போது, கணவனுக்கும் சரி, மனைவிக்கும் சரி, என்ன குறிக்கோள் இருக்க வேண்டும்?
கல்யாண வாழ்க்கையில் ஒரு தம்பதி யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கும்போது என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள்
செக்ஸ் பற்றியும் திருமணத்தைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது?
கிறிஸ்தவர்களுக்கு ஒரே கணவன் அல்லது ஒரே மனைவிதான் இருக்க வேண்டும் என்று ஏன் சொல்லலாம்?
ஒரு ஆணும் பெண்ணும்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று எப்படிச் சொல்லலாம்?
திருமணமான ஒரு தம்பதி ஏன் எப்போதும் சேர்ந்து வாழ வேண்டும்?
எந்த ஒரே காரணத்துக்காக தம்பதிகள் விவாகரத்து செய்யலாம் என்று பைபிள் சொல்கிறது?
சரியான காரணம் இல்லாமல் விவாகரத்து செய்வதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
துணை இறந்துவிட்டால், உயிரோடு இருக்கும் கணவனோ மனைவியோ வேறொருவரைக் கல்யாணம் செய்துகொள்ளலாமா?