Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கீழ்ப்படிதல்

கீழ்ப்படிதல்

நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?

யாத் 19:5; உபா 10:12, 13; பிர 12:13; யாக் 1:22

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 15:17-23—யெகோவாவுக்குக் கீழ்ப்படியாததால் சவுல் ராஜாவை சாமுவேல் தீர்க்கதரிசி கடுமையாகக் கண்டித்தார்; கீழ்ப்படிதல் எவ்வளவு முக்கியம் என்றும் சொன்னார்

    • எபி 5:7-10—இயேசு கடவுளுடைய பரிபூரண மகனாக இருந்தபோதும் பூமியில் தான் பட்ட கஷ்டங்கள் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்

கடவுளுடைய பேச்சை மீறும்படி அதிகாரிகள் சொல்லும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

அப் 5:29

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • தானி 3:13-18—உயிரே போய்விடும் என்று தெரிந்தபோதும்கூட உண்மையுள்ள மூன்று எபிரெய வாலிபர்கள் நேபுகாத்நேச்சார் செய்துவைத்த சிலையை வணங்க மறுத்துவிட்டார்கள்

    • மத் 22:15-22—யெகோவாவின் பேச்சை மீறச் சொல்லாதவரை அரசாங்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தன்னைப் பின்பற்றியவர்களிடம் இயேசு சொன்னார்

    • அப் 4:18-31—பிரசங்கிப்பதை நிறுத்தச் சொல்லி அதிகாரிகள் கட்டளையிட்டபோதும் அப்போஸ்தலர்கள் தொடர்ந்து தைரியமாகப் பிரசங்கித்தார்கள்

யெகோவாவின் கட்டளைகளுக்கு எப்போதுமே கீழ்ப்படிய வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

உபா 6:1-5; சங் 112:1; 1யோ 5:2, 3

இதையும் பாருங்கள்: சங் 119:11, 112; ரோ 6:17

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எஸ்றா 7:7-10—கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியும் விஷயத்திலும் அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் விஷயத்திலும் நல்ல முன்மாதிரி வைப்பதற்காக உண்மையுள்ள குருவான எஸ்றா தன் இதயத்தைத் தயார்படுத்தினார்

    • யோவா 14:31—தன் தகப்பனுடைய கட்டளைப்படியே நடந்ததற்கான காரணத்தை இயேசு சொன்னார்

யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் கீழ்ப்படிய எது நம்மைத் தூண்ட வேண்டும்?

கீழ்ப்படிவது எப்படி நம் விசுவாசத்தைக் காட்டும்?

ரோ 1:6; 10:16, 17; யாக் 2:20-23

இதையும் பாருங்கள்: உபா 9:23

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 6:9-22; எபி 11:7—பேழையை எப்படிக் கட்ட வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்தாரோ அதை ‘அப்படியே செய்வதன்’ மூலம் நோவா தன் விசுவாசத்தைக் காட்டினார்

    • எபி 11:8, 9, 17—ஊர் நகரத்தைவிட்டு யெகோவா போகச் சொன்னபோதும் சரி, மகனைப் பலி கொடுக்கச் சொன்னபோதும் சரி, கீழ்ப்படிவதன் மூலமாக ஆபிரகாம் தன் விசுவாசத்தைக் காட்டினார்

தனக்குக் கீழ்ப்படிகிறவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிக்கிறார்?

எரே 7:23; மத் 7:21; 1யோ 3:22

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லேவி 26:3-6—நாம் கீழ்ப்படிந்து நடந்தால் ஆசீர்வாதங்களை அள்ளித் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்

    • எண் 13:30, 31; 14:22-24 —காலேப் தனக்குக் கீழ்ப்படிந்ததால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார்

கீழ்ப்படியாதவர்களுக்கு என்ன நடக்கும்?

ரோ 5:19; 2தெ 1:8, 9

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 2:16, 17; 3:17-19—ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் பேச்சை மீறினார்கள்; அதனால் பூஞ்சோலையையும், பரிபூரணத்தையும், முடிவில்லாத வாழ்வையும் இழந்தார்கள்

    • உபா 18:18, 19; அப் 3:12, 18, 22, 23—மோசேயைவிட உயர்ந்த தீர்க்கதரிசி ஒருவர் வருவார் என்றும், அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யெகோவா முன்கூட்டியே சொன்னார்

    • யூ 6, 7—கலகக்கார தேவதூதர்களும் சோதோம் கொமோராவில் வாழ்ந்த மக்களும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாததால் அவருடைய கோபத்தைக் கிளறினார்கள்

நாம் ஏன் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

ஆதி 49:10; மத் 28:18

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோவா 12:46-48; 14:24—தனக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று இயேசு சொன்னார்

சபையில் இருக்கும் கண்காணிகளுக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவருக்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?

பிள்ளைகள் ஏன் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

நீதி 23:22; எபே 6:1; கொலோ 3:20

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 37:3, 4, 8, 11-13, 18—தன்னுடைய அண்ணன்கள் தன்னை வெறுத்தபோதும் இளம் யோசேப்பு தன் அப்பாவின் பேச்சைக் கேட்டு அவர்களைப் பார்க்கப் போனார்

    • லூ 2:51—இயேசு பரிபூரணமாக இருந்தபோதும், பாவ இயல்புள்ள தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்

வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் நம்மைப் பார்க்காதபோதும் நம் முதலாளிக்குக் கீழ்ப்படிவது ஏன் நல்லது?

கிறிஸ்தவர்கள் ஏன் அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும்?