Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்பம்

குடும்பம்

யெகோவாதான் குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்

பெற்றோர்; அப்பா அம்மா

அப்பாக்கள்

பாருங்கள்: “அப்பாக்கள்

அம்மாக்கள்

பாருங்கள்: “அம்மாக்கள்

கணவன், மனைவி

பாருங்கள்: “கல்யாணம்; திருமணம்

மகன்களும் மகள்களும்

குடும்பத்தில் பிள்ளைகளுக்கு இருக்கும் பொறுப்புகள் என்ன?

லேவி 19:3; நீதி 1:8; 6:20; எபே 6:1

இதையும் பாருங்கள்: நீதி 4:1

பிள்ளைகள் ஏன் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

எபே 6:1-3; கொலோ 3:20

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • சங் 78:1-8—முன்னோர்கள் செய்த தவறுகளைப் பற்றி இஸ்ரவேலர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொன்னார்கள்; பிள்ளைகள் கடவுள்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காகவும், கீழ்ப்படியாமல் போய்விடக் கூடாது என்பதற்காகவும் அப்படிச் செய்தார்கள்

    • லூ 2:51, 52—இயேசு பரிபூரணமாக இருந்தபோதும், பாவ இயல்புள்ள மனிதப் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்

பெற்றோருக்கு மதிப்புக் காட்டுவது பிள்ளைகளுக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

கீழ்ப்படியாத பிள்ளைகளைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • உபா 21:18-21—ஒரு மகன் அடங்காதவனாகவும், அப்பா அம்மாவைத் துளியும் மதிக்காதவனாகவும் இருந்தால் அவனைக் கொல்ல வேண்டுமென்று திருச்சட்டம் சொன்னது

    • 2ரா 2:23, 24—கடவுளுடைய பிரதிநிதியாக இருந்த எலிசா தீர்க்கதரிசியைத் துளியும் மதிக்காமல் கேலி செய்ததால் சில சிறுவர்கள் கரடிகளால் கொல்லப்பட்டார்கள்

பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பைப் பெற்றோர் எப்படிப் பார்க்க வேண்டும்?

சங் 127:3; 128:3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லேவி 26:9—குழந்தை பாக்கியத்தை யெகோவாவிடமிருந்து வந்த ஆசீர்வாதமாக இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள்

    • யோபு 42:12, 13—உச்சக்கட்ட சோதனையின்போதும் யோபு உத்தமமாக இருந்ததால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இன்னும் பத்துப் பிள்ளைகளை யெகோவா தந்தார்

கூடப் பிறந்தவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நடத்த வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

சங் 34:14; நீதி 15:23; 19:11

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 27:41; 33:1-11—யாக்கோபு தன் அண்ணன் ஏசாவுக்கு மதிப்புக் காட்டவும் அவரோடு சமாதானமாகவும் நிறைய முயற்சி எடுத்தார், அதனால் ஏசாவும் பாசமாக நடந்துகொண்டார்

வளர்ந்த பிறகும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் எப்படி மதிப்புக் காட்ட வேண்டும்?

நீதி 23:22; 1தீ 5:4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 11:31, 32—ஊர் என்ற நகரத்தைவிட்டுப் போனபோது ஆபிரகாம் தன் அப்பா தேராகுவையும் கூட்டிக்கொண்டு போனார், தேராகு இறக்கும்வரை அவரைக் கவனித்துக்கொண்டார்

    • மத் 15:3-6—வளர்ந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் திருச்சட்டத்தின் மூலம் இயேசு விளக்கினார்

மாமனார், மாமியார்

பாருங்கள்: “மாமனார், மாமியார்

தாத்தா, பாட்டி

பாருங்கள்: “தாத்தா, பாட்டி