கொண்டாட்டங்கள்
கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளும் கொண்டாட்டங்கள்
கிறிஸ்தவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய ஒரே நிகழ்ச்சி எது?
யெகோவாவின் மக்கள் அவரை வணங்குவதற்காக சந்தோஷமாக ஒன்றுகூடி வருகிறார்கள்
கிறிஸ்தவர்கள் தவிர்க்கும் கொண்டாட்டங்கள்
பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட கொண்டாட்டங்களில் நாம் கலந்துகொள்வது ஏன் தவறு?
1கொ 10:21; 2கொ 6:14-18; எபே 5:10, 11
இதையும் பாருங்கள்: “கலப்பு விசுவாசம்”
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யாத் 32:1-10—இஸ்ரவேலர்கள் உண்மை மதத்தோடு பொய் மதத்தைக் கலக்க முயற்சி செய்தபோது யெகோவாவின் கோபத்தைக் கிளறினார்கள்
-
எண் 25:1-9—பொய் மதக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதற்காகவும், ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதற்காகவும் தன்னுடைய மக்களை யெகோவா தண்டித்தார்
-
கிறிஸ்துமஸ் ஒரு கிறிஸ்தவ கொண்டாட்டமா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லூ 2:1-5—மக்கள் தொகையை ரோமர்கள் கணக்கெடுத்த சமயத்தில் இயேசு பிறந்தார்; ரோமர்களின் ஆட்சியை யூதர்கள் எதிர்த்துவந்ததால், பெயர்ப்பதிவு செய்வதற்காகக் குளிரிலும் மழையிலும் பயணம் செய்யச் சொல்லி யூதர்களை ரோமர்கள் அநேகமாகக் கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார்கள்
-
லூ 2:8, 12—இயேசு பிறந்த அன்று, மேய்ப்பர்கள் ராத்திரியில் தங்கள் ஆடுகளோடு வயல்வெளியில் தங்கியிருந்தார்கள்; கடும் குளிராக இருந்த டிசம்பர் மாதத்தில் அவர்கள் இப்படிச் செய்திருக்க வாய்ப்பே இல்லை
-
கிறிஸ்தவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடலாமா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 40:20-22—பொய் மதத்தைச் சேர்ந்த பார்வோன் தன் பிறந்தநாளைக் கொண்டாடினான், அந்தக் கொண்டாட்டத்தில் ஒருவன் கொல்லப்பட்டான்
-
மத் 14:6-11—கிறிஸ்தவர்களைக் கடுமையாக எதிர்த்த ஏரோது ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் யோவான் ஸ்நானகர் கொலை செய்யப்பட்டார்
-
திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட கொண்டாட்டங்கள்
திருச்சட்டத்தையும் அதில் சொல்லப்பட்ட கொண்டாட்டங்களையும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
இதையும் பாருங்கள்: கலா 4:4, 5, 9-11; எபி 8:7-13; 9:1-3, 9, 10, 24
கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டுமா?
இதையும் பாருங்கள்: யாத் 31:16, 17
தேசியக் கொண்டாட்டங்கள்
தேசியக் கொண்டாட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளலாமா?
இதையும் பாருங்கள்: “அரசாங்கங்கள்—கிறிஸ்தவர்கள் நடுநிலையோடு இருக்கிறார்கள்”
போர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளலாமா?
இதையும் பாருங்கள்: “அரசாங்கங்கள்—கிறிஸ்தவர்கள் நடுநிலையோடு இருக்கிறார்கள்” மற்றும் “போர்”
பிரபலமான மனிதர்களைத் தெய்வம்போல் கவுரவப்படுத்துகிற கொண்டாட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ளலாமா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
அப் 12:21-23—மக்கள் தன்னைத் தெய்வம் என்று புகழ்ந்ததை ஏரோது ராஜா ஏற்றுக்கொண்டான்; அதனால் யெகோவா அவனைத் தண்டித்தார்
-
அப் 14:11-15—தங்களைத் தெய்வங்களாக நினைத்து மக்கள் கவுரவப்படுத்தியபோது, பவுலும் பர்னபாவும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை
-
வெளி 22:8, 9—வணக்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு தேவதூதர் மறுத்தார்
-