Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாந்தம்

சாந்தம்

யெகோவா சாந்தமுள்ளவர் என்று எப்படிச் சொல்லலாம்?

மத் 11:28, 29; யோவா 14:9

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 19:12—ரொம்ப கவலையிலும் பயத்திலும் இருந்த எலியா தீர்க்கதரிசியிடம் ‘அமைதியான, மென்மையான குரலில்’ யெகோவா பேசினார்

    • யோனா 3:10–4:11—யெகோவாவிடம் யோனா கோபமாகப் பேசினார்; ஆனாலும், யெகோவா அன்பாகவும் சாந்தமாகவும் அவருக்கு இரக்கத்தைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்தார்

நாம் எப்படிச் சாந்தமாக நடந்துகொள்ளலாம்?

நீதி 15:1; எபே 4:1-3; தீத் 3:2; யாக் 3:13, 17; 1பே 3:15

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எண் 11:26-29—தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்த இரண்டு பேரைத் தடுத்து நிறுத்தும்படி யோசுவா சொன்னபோது மோசே சாந்தமாகப் பதில் சொன்னார்

    • நியா 8:1-3—கோபமாகத் தன்னோடு சண்டைபோட வந்தவர்களிடம் கிதியோன் சாந்தமாகப் பேசினார்; அதனால், அவர்கள் அமைதியாகிவிட்டார்கள்