Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபம்

ஜெபம்

யெகோவா நம் ஜெபங்களைக் கேட்டு பதில் தருகிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

சங் 65:2; 145:18; 1யோ 5:14

இதையும் பாருங்கள்: சங் 66:19; அப் 10:31; எபி 5:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 18:36-38—கர்மேல் மலையில் பாகால் தீர்க்கதரிசிகளுக்குமுன் எலியா ஜெபம் செய்தபோது யெகோவா உடனடியாகப் பதில் தந்தார்

    • மத் 7:7-11—விடாமல் ஜெபம் செய்யும்படி இயேசு சொன்னார், நம் அன்பான அப்பா யெகோவா நம் ஜெபங்களைக் கேட்பார் என்றும் உறுதியளித்தார்

யாரிடம் மட்டும்தான் கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்ய வேண்டும்?

யார் மூலமாக நாம் ஜெபம் செய்ய வேண்டும்?

யாருடைய ஜெபங்களை யெகோவா கேட்கிறார்?

யாருடைய ஜெபங்களை யெகோவா கேட்பதில்லை?

நீதி 15:29; 28:9; ஏசா 1:15; மீ 3:4; யாக் 4:3; 1பே 3:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோசு 24:9, 10—பிலேயாமின் ஜெபத்தை யெகோவா கேட்கவில்லை; ஏனென்றால், அவருடைய விருப்பத்துக்கு எதிரான ஒன்றை அவன் கேட்டான்

    • ஏசா 1:15-17—தன் மக்கள் வெளிவேஷம் போட்டதாலும், அவர்களுடைய கைகளில் இரத்தக்கறை படிந்திருந்ததாலும் யெகோவா அவர்களுடைய ஜெபங்களைக் கேட்கவில்லை

ஜெபத்தின் முடிவில் நாம் என்ன சொல்ல வேண்டும், ஏன்?

ஒரு குறிப்பிட்ட நிலையில்தான் நாம் ஜெபம் செய்ய வேண்டுமென்று பைபிள் சொல்கிறதா?

வணக்கத்துக்காகக் கூடிவரும்போது யெகோவாவின் ஊழியர்கள் என்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்?

அப் 4:23, 24; 12:5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1நா 29:10-19—ஆலயத்தைக் கட்டுவதற்காக இஸ்ரவேலர்கள் நன்கொடைகளைக் கொடுத்தபோது அவர்கள் எல்லாருக்கும் முன்பாக தாவீது ராஜா ஜெபம் செய்தார்

    • அப் 1:12-14—அப்போஸ்தலர்களும், இயேசுவின் சகோதரர்களும், இயேசுவின் அம்மா மரியாளும், விசுவாசமுள்ள மற்ற சில பெண்களும் எருசலேமில் ஒரு வீட்டின் மாடி அறையில் ஒன்றுகூடி வந்து ஜெபம் செய்தார்கள்

ஜெபம் செய்யும்போது நாம் ஏன் பெருமையடிக்கவோ மற்றவர்களைக் கவரவோ முயற்சி செய்யக் கூடாது?

சாப்பிடுவதற்குமுன் நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

நாம் ஏன் விடாமல் ஜெபம் செய்ய வேண்டும்?

ரோ 12:12; எபே 6:18; 1தெ 5:17; 1பே 4:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • தானி 6:6-10—உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என்று தெரிந்திருந்தும், தன் வழக்கப்படியே தானியேல் மற்றவர்களுடைய கண்ணில் படும்படி தொடர்ந்து ஜெபம் செய்தார்

    • லூ 18:1-8—நீதிக்காக ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்குக் கடைசியில் உதவி செய்த அநீதியான ஒரு நீதிபதியின் உதாரணத்தை இயேசு சொன்னார்; நாம் மனம் தளராமல் ஜெபம் செய்யும்போது நம் பரலோக அப்பா பதில் தருவார் என்பதைப் புரிய வைக்க அந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார்

மன்னிப்புக்காக நாம் செய்யும் ஜெபங்களைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால் நமக்கு எப்படிப்பட்ட மனநிலை இருக்க வேண்டும்?

2நா 7:13, 14

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2ரா 22:11-13, 18-20—மனத்தாழ்மையாக நடந்துகொண்டதாலும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க முயற்சி செய்ததாலும் யோசியா ராஜாவுக்கு யெகோவா இரக்கமும் கரிசனையும் காட்டினார்

    • 2நா 33:10-13—மனாசே ராஜா மனத்தாழ்மையோடு ஜெபம் செய்ததால் யெகோவா அவரை மன்னித்தார், மறுபடியும் ராஜாவாக்கினார்

யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

யெகோவாவின் விருப்பம் நடக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுவதை ஜெபத்தில் சொல்வது ஏன் நல்லது?

யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை நம் ஜெபங்கள் ஏன் காட்ட வேண்டும்?

என்னென்ன விஷயங்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம்?

கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்காக

கடவுளுடைய அரசாங்கம் பூமி முழுவதையும் ஆட்சி செய்வதற்காக

யெகோவாவின் விருப்பம் நிறைவேறுவதற்காக

நமக்குத் தேவையானவை கிடைப்பதற்காக

நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக

சோதனைகளுக்கு இணங்கிவிடாமல் இருப்பதற்காக

நன்றி சொல்வதற்காக

கடவுளுடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்வதற்காக, புரிந்துகொள்வதற்காக, ஞானத்துக்காக

நீதி 2:3-6; பிலி 1:9, 10; யாக் 1:5

இதையும் பாருங்கள்: சங் 119:34

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 3:11, 12—சாலொமோன் ராஜா ஞானத்துக்காக ஜெபம் செய்தபோது யெகோவா சந்தோஷப்பட்டார், அளவில்லாத ஞானத்தை அவருக்குக் கொடுத்தார்

கடவுளுடைய சக்திக்காக

துன்புறுத்தப்படுகிற அல்லது மற்ற சூழ்நிலைகளில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்காக

அப் 12:5; ரோ 15:30, 31; யாக் 5:16

இதையும் பாருங்கள்: கொலோ 4:12; 2தீ 1:3

கடவுளைப் புகழ்வதற்காக

சங் 86:12; ஏசா 25:1; தானி 2:23

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 10:21—பிள்ளைகளைப் போல மனத்தாழ்மையோடு இருந்தவர்களுக்குச் சத்தியத்தை வெளிப்படுத்தியதற்காக யெகோவாவை எல்லார் முன்னாலும் இயேசு புகழ்ந்தார்

    • வெளி 4:9-11—யெகோவாவின் பரலோகக் குடும்பத்தார் அவருக்குச் சேர வேண்டிய புகழையும் மகிமையையும் அவருக்குச் சேர்க்கிறார்கள்

நிம்மதியாக யெகோவாவை வணங்கவும் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கவும் அதிகாரிகள் நம்மை அனுமதிக்க வேண்டும் என்பதற்காக

மத் 5:44; 1தீ 2:1, 2

இதையும் பாருங்கள்: எரே 29:7

நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது ஜெபம் செய்யலாமா?

ஆன்மீக விதத்தில் வியாதியாக இருப்பவர்களுக்காக நாம் ஜெபம் செய்யலாமா?

ஜெபம் செய்யும்போது ஆண்கள் ஏன் பொதுவாக முக்காடு போடுவதில்லை, ஆனால் பெண்கள் ஏன் சிலசமயம் முக்காடு போடுகிறார்கள்?

நாம் எவ்வளவு நேரம் அல்லது எந்தளவு உணர்ச்சிபொங்க ஜெபம் செய்கிறோம் என்பதைவிட வேறு எதைக் கடவுள் முக்கியமாகப் பார்ப்பார்?

புல 3:41; மத் 6:7

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1ரா 18:25-29, 36-39—எலியாவின் சவாலை ஏற்றுக்கொண்ட பாகால் தீர்க்கதரிசிகள் தங்கள் தெய்வத்திடம் மணிக்கணக்காக ஜெபம் செய்தார்கள், ஆனால் அவர்களுக்குப் பதில் கிடைக்கவில்லை

    • அப் 19:32-41—எபேசுவில் சிலை வழிபாடு செய்தவர்கள் தங்களுடைய அர்த்தமி தெய்வத்திடம் இரண்டு மணிநேரத்துக்கு வெறித்தனமாகக் கத்தி ஜெபம் செய்தார்கள், ஆனால் மாநகராட்சித் தலைவர் அவர்களை அதட்டி அமைதிப்படுத்தியதுதான் மிச்சம்