படிப்பது
நாம் ஏன் கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிக்க வேண்டும்?
சங் 1:1-3; நீதி 18:15; 1தீ 4:6; 2தீ 2:15
இதையும் பாருங்கள்: அப் 17:11
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
சங் 119:97-101—கடவுளுடைய சட்டத்தை நேசிப்பதாக சங்கீதக்காரன் சொன்னார்; அதன்படி நடப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் சொன்னார்
-
தானி 9:1-3, அடிக்குறிப்பு—தானியேல் தீர்க்கதரிசி பரிசுத்த புத்தகங்களைப் படித்தார்; அதனால், இஸ்ரவேலர்கள் பாபிலோனில் 70 வருஷங்கள் கைதிகளாக இருப்பார்கள் என்பதையும், அந்தக் காலப்பகுதி சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்பதையும் புரிந்துகொண்டார்
-
நாம் ஏன் அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
நீதி 4:18—நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற விடியற்கால வெளிச்சம்போல் சத்தியத்தை யெகோவா தன் மக்களுக்கு அதிகமதிகமாகப் பிரகாசிக்க வைக்கிறார்
-
மத் 24:45-47—கடைசி நாட்களில் கடவுளுடைய மக்களுக்கு ஆன்மீக உணவை ஏற்ற வேளையில் கொடுப்பதற்காக ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமிக்கப்போவதாக இயேசு சொன்னார்
-
மனிதர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து கிடைக்கிற ஞானத்தைவிட பைபிளிலிருந்து கிடைக்கிற ஞானம் சிறந்தது என்று ஏன் சொல்லலாம்?
உண்மையான ஆர்வத்தோடு பைபிளைப் படிப்பவர்களுக்கு என்ன கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்?
பைபிளைப் படிப்பதற்குமுன் நாம் எதைக் கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்?
இதையும் பாருங்கள்: சங் 119:66
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தருகிற எல்லா ஆன்மீக உணவையும் நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?
பைபிள் சொல்லித்தரும் விஷயங்களை நாம் முழுமையாகவும் திருத்தமாகவும் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
ஞானத்தையும் புத்தியையும் நாம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம்?
நிதானமாக வாசிப்பதும் வாசித்ததைப் பற்றி ஆழமாக யோசிப்பதும் ஏன் முக்கியம்?
பைபிள் சொல்வதை நம் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?
கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் எப்படிச் சொல்லலாம் என்று நாம் ஏன் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்?
முக்கியமான சத்தியங்களைத் திரும்பத் திரும்பப் படிப்பது நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
உபா 6:6, 7; 11:18-20—பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மனதில் யெகோவாவின் வார்த்தைகளைப் பதிய வைக்க வேண்டும் என்றும், கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளுக்கு அவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் யெகோவா சொன்னார்
-
குடும்பமாகச் சேர்ந்து கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் கலந்துபேசுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 18:17-19—நீதியாக நடக்கும்படி ஆபிரகாம் தன் சந்ததிகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று யெகோவா விரும்பினார்
-
சங் 78:5-7—இஸ்ரவேலில் ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லித்தர வேண்டியிருந்தது; எல்லா தலைமுறைகளும் யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்கு அது உதவியாக இருந்தது
-
சபையோடு ஒன்றுகூடிவந்து படிப்பது நமக்கு எப்படி உதவும்?