பட்டப்பெயர்கள்; கவுரவப் பெயர்கள்
கிறிஸ்தவர்கள் மதத் தலைவர்களைப் பட்டப்பெயர்களால் அழைத்து கவுரவிக்கலாமா?
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
லூ 18:18, 19—இயேசு நல்லவர் என்றாலும், “நல்ல போதகரே” என்ற பட்டப்பெயரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார், யெகோவா மட்டும்தான் நல்லவர் என்று சொன்னார்
மதத் தலைவர்களுக்கு “ஃபாதர்,” “தந்தை,” அல்லது “தலைவர்” போன்ற பட்டப்பெயர்களைக் கிறிஸ்தவர்கள் ஏன் பயன்படுத்துவது இல்லை?
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
மத் 23:9-12—“தந்தை” அல்லது “தலைவர்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இயேசு சொன்னார்
1கொ 4:14-17—பவுல் நிறைய பேருக்கு ஒரு தகப்பன் போல இருந்தார்; ஆனாலும், அவரை “ஃபாதர் பவுல்” போன்ற பட்டப்பெயர்களால் மற்றவர்கள் கூப்பிட்டதாக எந்தப் பதிவும் இல்லை
கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் சகோதர சகோதரிகளாக நடத்துவதும் அப்படிக் கூப்பிடுவதும் ஏன் பொருத்தமானது?
இதையும் பாருங்கள்: அப் 12:17; 18:18; ரோ 16:1
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
மத் 12:46-50—யெகோவாவை வணங்குகிற எல்லாரும் தன்னுடைய சகோதர சகோதரிகள் என்று இயேசு சொன்னார்
அதிகாரிகள், ஆட்சியாளர்கள், நீதிபதிகள் போன்றவர்களைக் கிறிஸ்தவர்கள் கவுரவப் பெயர்களால் அழைப்பதில் ஏன் தவறு இல்லை?
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
அப் 26:1, 2, 25—அகிரிப்பா, பெஸ்து போன்ற ஆட்சியாளர்களை அவர்களுடைய அதிகாரப்பூர்வ பதவிப் பெயரால் அல்லது கவுரவப் பெயரால் பவுல் அழைத்தார்