பிள்ளைகள்; இளைஞர்கள்
பிள்ளைகளைக் கடவுள் பார்க்கும் விதம்
பிள்ளைகளையும் இளைஞர்களையும் யெகோவா பொக்கிஷமாக நினைக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?
உபா 6:6, 7; 14:28, 29; சங் 110:3; 127:3-5; 128:3, 4; யாக் 1:27
இதையும் பாருங்கள்: யோபு 29:12; சங் 27:10; நீதி 17:6
இதையும் பாருங்கள்: “குடும்பம்”
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 1:27, 28—மனிதர்கள் பிள்ளைகளைப் பெற்று இந்தப் பூமியை நிரப்ப வேண்டும் என்று யெகோவா விரும்பினார்
-
ஆதி 9:1—பெருவெள்ளத்துக்குப் பிறகு, பிள்ளைகளைப் பெற்று இந்தப் பூமியை நிரப்பும்படி நோவாவிடமும் அவருடைய மகன்களிடமும் யெகோவா சொன்னார்
-
ஆதி 33:5—யாக்கோபு தன் பிள்ளைகளைக் கடவுள் தந்த பரிசாகப் பார்த்தார்
-
மாற் 10:13-16—இயேசு தன் அப்பாவைப் போலவே பிள்ளைகள்மேல் அன்பு காட்டினார்
-
பிள்ளைகளைக் கொடுமை செய்பவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
பெரியவர்களைப் போல நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கக் கூடாது என்பதை எந்த பைபிள் நியமங்கள் காட்டுகின்றன?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 33:12-14—தன்னுடைய பிள்ளைகளால் பெரியவர்களைப் போல வேகமாக நடக்க முடியாது என்பதை யாக்கோபு புரிந்து வைத்திருந்தார்
-
பிள்ளைகள் படும் கஷ்டத்துக்குக் கடவுள்தான் காரணம் என்று நாம் சொல்லலாமா?
பிள்ளைகளும் பெரியவர்களும் படுகிற கஷ்டங்களுக்கு முடிவு வரும் என்று யெகோவா எப்படி வாக்குக் கொடுத்திருக்கிறார்?
நம் பெற்றோர் மோசமான தவறுகள் செய்திருந்தால் அல்லது நம்மை மோசமாக நடத்தியிருந்தால், நாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றோ அதே தவறுகளைச் செய்வோம் என்றோ சொல்ல முடியுமா?
இதையும் பாருங்கள்: உபா 30:15, 16
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2ரா 18:1-7; 2நா 28:1-4—சொந்தப் பிள்ளைகளையே நரபலி கொடுத்த ஒரு மோசமான அப்பாவால் எசேக்கியா வளர்க்கப்பட்டார்; ஆனாலும், அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார், ஒரு நல்ல ராஜாவாக ஆனார்
-
2ரா 21:19-26; 22:1, 2—ஆமோன் ஒரு மோசமான ராஜாவாக இருந்தார்; ஆனால், அவருடைய மகன் யோசியா ஒரு சிறந்த ராஜாவாக ஆனார்
-
1கொ 10:11, 12—மற்றவர்களுடைய தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்றும், அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருக்கலாம் என்றும் பவுல் சொன்னார்
-
பிலி 2:12, 13—மீட்புக்காக அவரவர்தான் உழைக்க வேண்டும் என்று பவுல் ஞாபகப்படுத்துகிறார்
-
பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் இருக்கும் பொறுப்புகள்
சத்தியத்தில் தனியாக இருக்கும் அம்மாவால் அல்லது அப்பாவால் வளர்க்கப்படும் பிள்ளைகளை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆதி 19:12, 15—லோத்துவின் மகள்களுக்கு தேவதூதர் மூலம் பாதுகாப்பு கிடைத்ததற்கு ஒரு காரணம், அவர்களுடைய அப்பா ஒரு நீதிமானாக இருந்தார்
-
பெற்றோருக்கு யெகோவாவோடு ஒரு நல்ல பந்தம் இருப்பதால் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் அது தானாகவே வந்துவிடுமா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
லேவி 10:1-3, 8, 9—தலைமைக் குருவான ஆரோனின் மகன்கள் கொல்லப்பட்டார்கள்; ஒருவேளை, குடித்துவிட்டு சந்திப்புக் கூடாரத்துக்குள் போனதற்காக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்
-
1சா 8:1-5—சாமுவேல் தீர்க்கதரிசி கடவுளுக்கு உண்மையோடு இருந்தார், ஆனால் அவருடைய மகன்கள் நேர்மையில்லாமல் நடந்துகொண்டார்கள்
-
கடவுளை சந்தோஷப்படுத்த பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்?
பிள்ளைகள் ஏன் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மத் 15:32-38—இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தில் சின்னப் பிள்ளைகளும் இருந்தார்கள்
-
பிள்ளைகளும் தன்னை வணங்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார் என எப்படிச் சொல்லலாம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1சா 17:4, 8-10, 41, 42, 45-51—ஒரு ராட்சதனைத் தோற்கடிப்பதன் மூலம் தன் பெயரை மகிமைப்படுத்த இளம் தாவீதை யெகோவா பயன்படுத்தினார்
-
2ரா 5:1-15—இஸ்ரவேலராக இல்லாத ஒரு படைத் தளபதிக்குத் தன்னைப் பற்றிக் கற்றுக்கொடுக்க ஒரு இஸ்ரவேல சிறுமியை யெகோவா பயன்படுத்தினார்
-
மத் 21:15, 16—மேசியாவான தன்னைப் புகழ்ந்த சின்னப் பிள்ளைகளைப் பார்த்து இயேசு பெருமைப்பட்டார்
-
சத்தியத்தில் இல்லாத பெற்றோரின் பிள்ளைகளை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
எண் 16:25, 26, 32, 33—மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக சில ஆண்கள் கலகம் செய்தபோது, அவர்களை மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக இருந்த அவர்களுடைய குடும்பத்தாரையும் யெகோவா தண்டித்தார்
-
எண் 26:10, 11—கலகம் செய்த கோராகு கொல்லப்பட்டாலும் அவருடைய மகன்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால் காப்பாற்றப்பட்டார்கள்
-
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இன்று ஏன் பிள்ளைகள் ஞானமாக இருக்க வேண்டும்?
இதையும் பாருங்கள்: 2தீ 3:1-5
கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படிப்பட்ட நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?