புத்திமதி; கண்டித்துத் திருத்துவது
புத்திமதி சொல்வதற்கு பைபிளைப் பயன்படுத்துவது ஏன் சிறந்தது?
நம் எல்லாருக்குமே ஏன் வழிநடத்துதலும் ஆலோசனைகளும் தேவை?
இதையும் பாருங்கள்: எரே 17:9
யெகோவா நம்மைக் கண்டிப்பது எதைக் காட்டுகிறது?
இதையும் பாருங்கள்: உபா 8:5; நீதி 13:24; வெளி 3:19
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2சா 12:9-13; 1ரா 15:5; அப் 13:22—தாவீது ராஜா படுமோசமான பாவங்களைச் செய்திருந்தாலும் யெகோவா அவரை அன்பாகக் கண்டித்துத் திருத்தினார், மன்னித்தார்
-
யோனா 1:1-4, 15-17; 3:1-3—தான் கொடுத்த வேலையைச் செய்யாமல் ஓடிவிட்ட யோனா தீர்க்கதரிசியை யெகோவா கண்டித்தார்; அதேசமயத்தில், அந்த வேலையைச் செய்து முடிக்க இன்னொரு வாய்ப்பைத் தந்தார்
-
யெகோவா தரும் கண்டிப்பை ஏற்றுக்கொள்வது ஏன் புத்திசாலித்தனம்?
நீதி 9:8; 12:1; 17:10; எபி 12:5, 6
இதையும் பாருங்கள்: 2நா 36:15, 16
கடவுள் தரும் கண்டிப்பை அலட்சியம் செய்கிறவர்களுக்கு என்ன நடக்கலாம்?
நீதி 1:24-26; 13:18; 15:32; 29:1
இதையும் பாருங்கள்: எரே 7:27, 28, 32-34
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
எரே 5:3-7—யெகோவா கண்டித்தபோது அவருடைய மக்கள் கேட்கவில்லை, திருந்தவும் இல்லை; அதனால், யெகோவா அவர்களை இன்னும் கடுமையாகக் கண்டித்தார்
-
செப் 3:1-8—எருசலேம் மக்கள் யெகோவா தந்த கண்டிப்பை ஒதுக்கித்தள்ளியதால் அழிந்துபோனார்கள்
-
யெகோவா தரும் கண்டிப்பை ஏற்றுக்கொண்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
நீதி 4:13; 1கொ 11:32; தீத் 1:13; எபி 12:10, 11
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
உபா 30:1-6—யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால் ஆசீர்வாதங்கள் வந்து சேரும் என்று மோசே சொன்னார்
-
2நா 7:13, 14—மக்கள் தன் கண்டிப்பை ஏற்று நடந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று சாலொமோன் ராஜாவிடம் யெகோவா சொன்னார்
-
மற்றவர்களுக்குக் கிடைக்கும் கண்டிப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வது ஏன் நல்லது?
மற்றவர்கள் கடுமையாகக் கண்டிக்கப்படும்போது நாம் ஏன் சந்தோஷப்படக் கூடாது?
கடவுள் தரும் புத்திமதிகள் அல்லது அறிவுரைகளிலிருந்து பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
இதையும் பாருங்கள்: உபா 17:18, 19; சங் 119:97
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1நா 22:11-13—யெகோவாவின் அறிவுரைகளை அப்படியே கடைப்பிடித்தால் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று தாவீது தன் மகன் சாலொமோனிடம் சொன்னார்
-
சங் 1:1-6—தன் சட்டங்களை வாசித்து, அவற்றைத் தியானிக்கிறவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்
-
அன்பான பெற்றோர் ஏன் தங்கள் பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்துகிறார்கள்?
பாருங்கள்: “பெற்றோர்; அப்பா அம்மா”
பெற்றோர் கண்டிக்கும்போது பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்?
பாருங்கள்: “குடும்பம்—மகன்களும் மகள்களும்”