பொய் சொல்வது
வாக்குத் தவறுகிறவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
இதையும் பாருங்கள்: சங் 15:4; மத் 5:37
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
யாத் 9:27, 28, 34, 35—கடவுளுடைய மக்களை அனுப்பி வைப்பதாக பார்வோன் சொன்னான்; ஆனால், சொன்னபடி செய்யவில்லை
எசே 17:11-15, 19, 20—பாபிலோன் ராஜாவுக்குக் கொடுத்த வாக்கை மீறியதால் சிதேக்கியா ராஜாவை யெகோவா தண்டித்தார்
அப் 5:1-10—நிலத்தை விற்றதில் கிடைத்த மொத்த பணத்தையும் சபைக்குக் கொடுத்துவிட்டதாக அனனியாவும் சப்பீராளும் பொய் சொன்னார்கள்
மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறவர்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?
சங் 15:1-3; நீதி 6:16-19; 16:28; கொலோ 3:9
இதையும் பாருங்கள்: நீதி 11:13; 1தீ 3:11
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
2சா 16:1-4; 19:24-30—கடவுளுக்கு உண்மையாக இருந்த மேவிபோசேத்தைப் பற்றி அவருடைய வேலைக்காரன் சீபா இல்லாததையும் பொல்லாததையும் சொன்னான்
வெளி 12:9, 10—பிசாசு, அதாவது அவதூறு சொல்கிறவன், கடவுளுடைய ஊழியர்களை எப்போதும் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறான்