பொருளாசை
பணமும் பொருளும் வைத்திருப்பதே தவறு என்று பைபிள் சொல்கிறதா?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1ரா 3:11-14—சாலொமோன் ராஜா மனத்தாழ்மையோடு இருந்ததால் யெகோவா நிறைய சொத்துகளைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்தார்
-
யோபு 1:1-3, 8-10—யோபு பெரிய பணக்காரராக இருந்தார்; ஆனாலும், யெகோவாவோடு இருந்த பந்தத்தைத்தான் பொக்கிஷமாக நினைத்தார்
-
பணம் பொருளைச் சேர்ப்பது ஏன் உண்மையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் தராது?
எந்தச் சமயத்தில் சொத்துகளால் பிரயோஜனமே இருக்காது?
பணம் பொருளைச் சேர்ப்பதில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்ன?
நாம் எப்படி சொத்துப்பத்துகளை நம்பி ஏமாந்துபோகலாம்?
நீதி 11:4, 18, 28; 18:11; மத் 13:22
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
அப் 8:18-24—கிறிஸ்தவ சபையில் பணம் கொடுத்து பொறுப்புகளை வாங்கிக்கொள்ளலாம் என்று சீமோன் முட்டாள்தனமாக நினைத்தான்
-
பண ஆசை எதை நம்மிடமிருந்து பறித்துவிடலாம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மாற் 10:17-23—ஒரு பணக்கார வாலிபன் பணம் பொருளை ரொம்ப அதிகமாக நேசித்ததால் இயேசுவின் சீஷராகும் வாய்ப்பை இழந்துவிட்டான்
-
1தீ 6:17-19—பணக்காரர்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாது, அது கடவுளுக்குப் பிடிக்காது என்று பவுல் எச்சரித்தார்
-
பொருளாசை எப்படி நம் விசுவாசத்தைப் பலவீனமாக்கி, நம்மை யெகோவாவிடமிருந்து பிரித்துவிடலாம்?
உபா 8:10-14; நீதி 28:20; 1யோ 2:15-17
இதையும் பாருங்கள்: சங் 52:6, 7; ஆமோ 3:12, 15; 6:4-8
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோபு 31:24, 25, 28—சொத்துகள்மேல் நம்பிக்கை வைத்தால் யெகோவாவுக்குத் துரோகம் செய்வதுபோல் ஆகிவிடும், அதனால் அது ஆபத்தானது என்பதை யோபு நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்
-
லூ 12:15-21—நிறைய சொத்துகள் இருந்தும் கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாத ஒருவனின் உதாரணத்தைச் சொல்லி பொருளாசையைப் பற்றி இயேசு எச்சரித்தார்
-
நாம் எப்படி உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருக்கலாம்?
எப்படிப்பட்ட சொத்துகள் பணத்தையும் பொருளையும்விட ரொம்ப முக்கியமானவை, ஏன்?
நீதி 3:11, 13-18; 10:22; மத் 6:19-21
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஆகா 1:3-11—ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்குப் பதிலாகத் தங்கள் வீடுகளைக் கட்டி சவுகரியமாக வாழ்வதிலேயே குறியாக இருந்த தன் மக்களுக்குத் தன் ஆசீர்வாதம் கிடைக்காது என்று ஆகாய் தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்னார்
-
வெளி 3:14-19—யெகோவாவுக்குச் செய்யும் சேவையைவிட சொத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த லவோதிக்கேயா சபையை இயேசு கண்டித்தார்
-
நமக்குத் தேவையானதை யெகோவா தருவார் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?