மன்னிப்பு
யெகோவா தாராளமாக மன்னிக்கிறவர் என்று எப்படிச் சொல்லலாம்?
இதையும் பாருங்கள்: 2பே 3:9
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
சங் 78:40, 41; 106:36-46—இஸ்ரவேலர்கள் யெகோவாவின் மனதைத் திரும்பத் திரும்பப் புண்படுத்தினார்கள்; ஆனால், யெகோவா அவர்களை மறுபடியும் மறுபடியும் மன்னித்தார்
-
லூ 15:11-32—அடங்காத மகன் திருந்தி வந்தபோது அவனுடைய அப்பா இரக்கத்தோடு அவனை மன்னித்து ஏற்றுக்கொண்ட கதையை இயேசு சொன்னார்; இப்படி, யெகோவா எந்தளவு மன்னிக்கிறார் என்பதைப் புரிய வைத்தார்
-
எதன் அடிப்படையில் யெகோவா மன்னிக்கிறார்?
யோவா 1:29; எபே 1:7; 1யோ 2:1, 2
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
எபி 9:22-28—கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் அடிப்படையில்தான் யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்று பவுல் விளக்கினார்
-
வெளி 7:9, 10, 14, 15—“திரள் கூட்டமான மக்கள்” இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதால் அவர்களுடைய பாவங்களைக் கடவுள் மன்னிப்பதாக யோவான் எழுதினார்
-
யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால், மற்றவர்கள் நமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
மத் 6:14, 15; மாற் 11:25; லூ 17:3, 4; யாக் 2:13
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
யோபு 42:7-10—யெகோவா யோபுவைக் குணமாக்கி அவரை ஆசீர்வதிப்பதற்கு முன்பு, அவருடைய போலி நண்பர்கள் மூன்று பேருக்காக ஜெபம் செய்யும்படி சொன்னார்
-
மத் 18:21-35—யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதை ஒரு கதையின் மூலம் இயேசு தெளிவாக எடுத்துக் காட்டினார்
-
பாவத்தை ஒத்துக்கொள்வதும் மனம் திருந்துவதும் எந்தளவு முக்கியம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
சங் 32:1-5; 51:1, 2, 16, 17—மோசமான பாவங்களைச் செய்துவிட்டதால் தாவீது ராஜா மனமுடைந்துபோனார், அதன் பிறகு மனம் திருந்தினார்
-
யாக் 5:14-16—நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் மூப்பர்களிடம் சொல்ல வேண்டுமென்று யாக்கோபு விளக்கினார்
-
யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?
நீதி 28:13; ஏசா 55:7; எபே 4:28
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1ரா 21:27-29; 2நா 18:18-22, 33, 34; 19:1, 2—யெகோவா தன்னைத் தண்டிக்கப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டபோது ஆகாப் ராஜா சோகமாகிவிட்டார்; ஆனால், அவர் உண்மையிலேயே திருந்தவில்லை, அதனால் யெகோவா அவரை மன்னிக்கவில்லை, போரில் அவரைக் காப்பாற்றவும் இல்லை
-
2நா 33:1-16—மனாசே ராஜா நிறைய கெட்ட விஷயங்களைச் செய்தார், ஆனாலும் அவர் மனம் திருந்தியதால் யெகோவா அவரை மன்னித்தார்; மனாசே சிலைகளையெல்லாம் அழித்துப்போடுவதன் மூலமும், யெகோவாவை வணங்கும்படி மக்களை ஊக்கப்படுத்துவதன் மூலமும் உண்மையிலேயே மனம் திருந்தியிருந்ததைக் காட்டினார்
-
பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது யெகோவா எந்தளவுக்கு அவர்களை மன்னிக்கிறார்?
சங் 103:10-14; ஏசா 1:18; 38:17; எரே 31:34; மீ 7:19
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2சா 12:13; 24:1; 1ரா 9:4, 5—தாவீது மோசமான பாவங்களைச் செய்தபோதும் மனம் திருந்தியதால் யெகோவா அவரை மன்னித்தார், தாவீது உத்தம இதயத்தோடு நடந்ததாகக்கூடப் பிற்பாடு சொன்னார்
-
மன்னிக்கும் விஷயத்தில் இயேசு எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொண்டார்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மத் 26:36, 40, 41—இயேசுவின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய சமயத்தில் தூங்கிவிட்டார்கள்; ஆனாலும், ரொம்ப களைப்பாக இருந்ததால்தான் தூங்கிவிட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார்
-
மத் 26:69-75; லூ 24:33, 34; அப் 2:37-41—இயேசுவைத் தெரியாது என்று மூன்று தடவை பேதுரு சொல்லிவிட்டார், ஆனால் மனம் திருந்தியதால் அவரை இயேசு மன்னித்தார்; இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு பேதுருவைச் சந்தித்தார், பிற்பாடு சபையில் விசேஷப் பொறுப்புகளையும் கொடுத்தார்
-
யெகோவா எல்லாரையுமே மன்னிக்க மாட்டார் என்று எப்படிச் சொல்லலாம்?
மத் 12:31; எபி 10:26, 27; 1யோ 5:16, 17
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மத் 23:29-33—வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கெஹென்னாவில் தள்ளப்படுவார்கள், அதாவது நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள், என்று இயேசு எச்சரித்தார்
-
யோவா 17:12; மாற் 14:21—யூதாஸ் இஸ்காரியோத்தை ‘அழிவின் மகன்’ என்று இயேசு அழைத்தார்; அந்தத் துரோகி பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நன்றாக இருந்திருக்கும் என்றும் சொன்னார்
-
மற்றவர்களை மன்னிக்க எது நம் மனதைத் தூண்டும்?