யெகோவா
அவருடைய பெயர்
யெகோவா என்ற பெயரின் அர்த்தம், “ஆகும்படி செய்பவர்”
தன் ஊழியர்களுக்காக யெகோவா எப்படியெல்லாம் ஆகிறார்?
சங் 19:14; 68:5; ஏசா 33:22; 40:11; 2கொ 1:3, 4
இதையும் பாருங்கள்: சங் 118:14; ஏசா 30:20; எரே 3:14; சக 2:5
கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது ஏன் ரொம்ப முக்கியம்?
ஏன் எல்லாரும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அதற்கு அவர் ஏன் தகுதியானவர்?
யெகோவாவுடைய சில காரணப் பெயர்கள்
உன்னதப் பேரரசர்—ஏசா 25:8; ஆமோ 3:7
உன்னதமான கடவுள்—ஆதி 14:18-22; சங் 7:17
என்றென்றுமுள்ள ராஜா—1தீ 1:17; வெளி 15:3
கற்பாறை—உபா 32:4; ஏசா 26:4
சர்வவல்லமையுள்ளவர்—ஆதி 17:1; வெளி 19:6
தகப்பன்—மத் 6:9; யோவா 5:21
பரலோகப் படைகளின் யெகோவா—1சா 1:11
மகத்தான போதகர்—ஏசா 30:20
எபி 1:3; 8:1
மகிமையுள்ளவர்—யெகோவாவின் தலைசிறந்த குணங்கள்
தான் பரிசுத்தமானவர் என்பதை யெகோவா எப்படித் தெளிவாகக் காட்டியிருக்கிறார், அதைத் தெரிந்திருப்பதால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
யாத் 28:36; லேவி 19:2; 2கொ 7:1; 1பே 1:13-16
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
ஏசா 6:1-8—யெகோவா எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதை ஒரு தரிசனத்தில் ஏசாயா பார்த்தபோது, பாவ இயல்புள்ள தன்னால் அவருக்குமுன் பரிசுத்தமாக இருக்கவே முடியாது என்று நினைத்தார்; ஆனால், பாவ இயல்புள்ள மனிதர்களால்கூட யெகோவாவுக்குமுன் பரிசுத்தமாக இருக்க முடியும் என்பதை ஒரு சேராபீன் அவருக்குக் காட்டினார்
-
ரோ 6:12-23; 12:1, 2—நாம் எப்படி நம்முடைய பாவ இயல்புக்கு எதிராகப் போராடி “பரிசுத்த வாழ்க்கை” வாழலாம் என்று பவுல் விளக்கினார்
-
யெகோவாவுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது, எதற்கெல்லாம் அதைப் பயன்படுத்துகிறார்?
யாத் 15:3-6; 2நா 16:9; ஏசா 40:22, 25, 26, 28-31
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
உபா 8:12-18—இஸ்ரவேலர்களுக்கு நிறைய சொத்துகள் கிடைத்ததற்குக் காரணம், யெகோவா தன் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து ஆசீர்வதித்ததுதான் என்று மோசே அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்
-
1ரா 19:9-14—எலியா தீர்க்கதரிசியை உற்சாகப்படுத்துவதற்காக யெகோவா தன்னுடைய மகா வல்லமையை எலியாவின் கண்முன் காட்டினார்
-
யெகோவாவின் நீதிதான் தலைசிறந்த நீதி என்று எப்படிச் சொல்லலாம்?
உபா 32:4; யோபு 34:10; 37:23; சங் 37:28; ஏசா 33:22
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
உபா 24:16-22—யெகோவா எப்போதுமே நீதியோடும் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொள்கிறார் என்பதைத் திருச்சட்டம் காட்டியது
-
2நா 19:4-7—யோசபாத் ராஜா நீதிபதிகளை நியமித்தபோது, அவர்கள் மனிதர்களின் சார்பாக அல்ல, யெகோவாவின் சார்பாகத்தான் தீர்ப்பு சொல்கிறார்கள் என்பதை அவர்களுக்கு அவர் ஞாபகப்படுத்தினார்
-
யெகோவாதான் வேறு யாரையும்விட ரொம்ப ஞானமானவர் என்பதை எதுவெல்லாம் காட்டுகிறது?
சங் 104:24; நீதி 2:1-8; எரே 10:12; ரோ 11:33; 16:27
இதையும் பாருங்கள்: சங் 139:14; எரே 17:10
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
1ரா 4:29-34—சாலொமோன் ராஜாவுக்கு யெகோவா நிறைய ஞானத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார்; அவருடைய காலத்தில் வாழ்ந்த வேறெந்த மனிதருக்கும் அவ்வளவு ஞானம் இருக்கவில்லை
-
லூ 11:31; யோவா 7:14-18—சாலொமோனைவிட இயேசு ரொம்ப ஞானமுள்ளவராக இருந்தார்; ஆனாலும், யெகோவாதான் தனக்கு ஞானத்தைக் கொடுத்ததாக மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டார்
-
யெகோவா நம்மேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை எப்படிக் காட்டியிருக்கிறார்?
யோவா 3:16; ரோ 8:32; 1யோ 4:8-10, 19
இதையும் பாருங்கள்: செப் 3:17; யோவா 3:35
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
மத் 10:29-31—யெகோவா தன் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் எவ்வளவு நேசிக்கிறார், எவ்வளவு மதிக்கிறார் என்பதைப் புரிய வைக்க சிட்டுக்குருவியின் உதாரணத்தை இயேசு பயன்படுத்தினார்
-
மாற் 1:9-11—யெகோவா இயேசுமேல் அன்பு வைத்திருப்பதாகவும், அவரைப் பார்த்துப் பெருமைப்படுவதாகவும் சொன்னார்; பெற்றோர் தங்களுடைய ஒவ்வொரு பிள்ளையிடமும் இதையெல்லாம் சொல்ல வேண்டும்; இந்த விஷயத்தில், பெற்றோருக்கு யெகோவா ஒரு அருமையான முன்மாதிரி
-
வேறு என்ன காரணங்களுக்காக நாம் யெகோவாவை நேசிக்கிறோம்? யெகோவாவுக்கு நிறைய அருமையான குணங்கள் இருப்பதாக பைபிள் சொல்கிறது; அவற்றில் சில . . .
இரக்கமுள்ளவர்—யாத் 34:6
உண்மையுள்ளவர்—வெளி 15:4
எல்லாவற்றையும் பார்க்கிறவர்—2நா 16:9; நீதி 15:3
என்றென்றும் இருக்கிறவர்; ஆரம்பமோ முடிவோ இல்லாதவர்—சங் 90:2; 93:2
கரிசனை உள்ளவர்—ஏசா 49:15; 63:9; சக 2:8
கருணையுள்ளவர்—லூ 6:35; ரோ 2:4
சந்தோஷமுள்ளவர்—1தீ 1:11
சமாதானத்தின் கடவுள்—பிலி 4:9
தாராள மனமுள்ளவர்—சங் 104:13-15; 145:16
நீதியுள்ளவர்—சங் 7:9
பொறுமையுள்ளவர்—ஏசா 30:18; 2பே 3:9
மகத்தானவர்—சங் 8:1; 148:13
மகிமையானவர்—வெளி 4:1-6
மனத்தாழ்மையுள்ளவர்—சங் 18:35
மாறாதவர்; நம்பகமானவர்—மல் 3:6; யாக் 1:17
யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது நாம் என்ன செய்வோம்?
யெகோவாவுக்கு நாம் எப்படிச் சேவை செய்ய வேண்டும்?
நம்மால் செய்ய முடியாததை யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
உபா 30:11-14—மோசே மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்கள், கடைப்பிடிக்க முடியாத அளவுக்குக் கஷ்டமாக இருக்கவில்லை
-
மத் 11:28-30—யெகோவாவின் குணங்களை அப்படியே காட்டும் இயேசு, தன்னிடம் வருகிறவர்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று சொன்னார்
-
நாம் ஏன் யெகோவாவைப் புகழ வேண்டும், அதற்கு அவர் ஏன் தகுதியானவர்?
சங் 105:1, 2; ஏசா 43:10-12, 21
இதையும் பாருங்கள்: எரே 20:9; லூ 6:45; அப் 4:19, 20
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
சங் 104:1, 2, 10-20, 33, 34—யெகோவாவின் ஏராளமான படைப்புகளுக்காக சங்கீதக்காரன் அவரைப் புகழ்ந்து பாடினார்
-
சங் 148:1-14—யெகோவாவின் படைப்புகள் எல்லாமே அவரைப் புகழ்கின்றன, தேவதூதர்கள் எல்லாருமே அவரைப் புகழ்கிறார்கள், நாமும் அப்படிச் செய்ய வேண்டும்
-
நம் செயல்களால் எப்படி யெகோவாவை மகிமைப்படுத்த முடியும்?
இதையும் பாருங்கள்: யாக் 3:13
நாம் ஏன் யெகோவாவிடம் நெருங்கிப்போக வேண்டும்?
கடவுளிடம் நெருங்கிப்போக மனத்தாழ்மை எப்படி நமக்கு உதவும்?
பைபிளை வாசிப்பதும் அதைப் பற்றி ஆழமாக யோசிப்பதும் யெகோவாவிடம் நெருங்கிப்போக நமக்கு எப்படி உதவும்?
கற்றுக்கொள்ளும் விஷயங்களின்படி நடப்பது ஏன் முக்கியம்?
யெகோவாவிடமிருந்து எதையாவது மறைக்க நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது?
யோபு 34:22; நீதி 28:13; எரே 23:24; 1தீ 5:24, 25
-
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
-
2ரா 5:20-27—கேயாசி தன் பாவத்தை மறைக்க முயற்சி செய்தான்; ஆனால், யெகோவா அதை எலிசாவுக்குத் தெரியப்படுத்தினார்
-
அப் 5:1-11—அனனியாவும் சப்பீராளும் தங்கள் பாவத்தை மறைக்க முயற்சி செய்தார்கள்; ஆனால், யெகோவா அதை வெட்டவெளிச்சமாக்கினார், அவர்களைத் தண்டித்தார்
-