வணக்கம்; வழிபாடு
நாம் யாரை மட்டும்தான் வணங்க வேண்டும்?
யாத் 34:14; உபா 5:8-10; ஏசா 42:8
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
மத் 4:8-10—ஒரேவொரு தடவை தன்னை வணங்கினால் உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் தருவதாக சாத்தான் இயேசுவிடம் சொன்னான்; ஆனால், இயேசு அதற்குச் சம்மதிக்கவில்லை, யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்
வெளி 19:9, 10—தன்னை வணங்கக் கூடாதென்று பலம்படைத்த ஒரு தேவதூதர் அப்போஸ்தலன் யோவானிடம் சொன்னார்
தன்னை எப்படி வணங்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்?
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
ஏசா 1:10-17—தனக்குக் கீழ்ப்படியாதவர்களுடைய போலித்தனமான வணக்கத்தை யெகோவா வெறுத்து ஒதுக்குகிறார்
மத் 15:1-11—மனிதர்களுடைய பாரம்பரியங்களின்படி அல்ல, கடவுளுடைய சட்டங்களின்படிதான் நாம் அவரை வணங்க வேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன
முடியும்போதெல்லாம், யாரோடு சேர்ந்து நாம் யெகோவாவை வணங்க வேண்டும்?
இதையும் பாருங்கள்: சங் 133:1-3
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
அப் 2:40-42—முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்காகவும், ஜெபம் செய்வதற்காகவும், கடவுளுடைய போதனைகளைக் கற்றுக்கொள்வதற்காகவும் தவறாமல் ஒன்றுகூடி வந்தார்கள்
1கொ 14:26-40—சொல்லித்தரப்படும் விஷயங்களை எல்லாருமே நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஏற்றபடி சபைக் கூட்டங்கள் ஒழுங்காகவும் உற்சாகம் தரும் விதத்திலும் நடக்க வேண்டுமென்று பவுல் சொன்னார்
நம் வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):
எபி 11:6—விசுவாசம் காட்டினால்தான் யெகோவா நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்வார் என்று பவுல் விளக்குகிறார்
யாக் 2:14-17, 24-26—இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரரான யாக்கோபு சொல்கிறபடி, நம் விசுவாசத்தை நாம் செயலில் காட்ட வேண்டும்; நம் விசுவாசம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது