Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் இத்தனை துன்பமும் அநீதியும்?

ஏன் இத்தனை துன்பமும் அநீதியும்?

பகுதி 6

ஏன் இத்தனை துன்பமும் அநீதியும்?

1இருந்தபோதிலும், உன்னதமானவர் பரதீஸிய நிலைமைகளின் மத்தியில் பூமியில், பரிபூரண மனிதர்கள் என்றுமாக வாழவேண்டுமென்று நோக்கங்கொண்டிருந்தால், அது இன்னமும் அவருடைய நோக்கமாயிருந்தால், ஏன் இப்போது பரதீஸ் இல்லை? மாறாக, ஏன் மனிதவர்க்கம் நூற்றாண்டுகளாக துன்பத்தையும் அநீதியையும் அனுபவித்துவருகிறது?

2சந்தேகமின்றி, மனித வரலாறு போர், பேரரசு ஆதிக்கம், சுரண்டல்கள், அநீதி, வறுமை, அழிவுகள், நோய்கள் மற்றும் மரணம் விளைவிக்கும் துன்பத்தால் நிறைந்திருக்கிறது. இத்தனை அப்பாவி பலியாட்களுக்கு ஏன் இத்தனை கெட்ட காரியங்கள் நிகழ்ந்துள்ளன? கடவுள் எல்லா வல்லமையுமுள்ளவரென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏன் இவ்வளவு அதிகமான துன்பத்தை அனுமதித்துள்ளார்? இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் மிக நன்றாக வடிவமைத்து ஒழுங்குபடுத்தியுள்ளதால், பூமியில் அவர் ஒழுங்கின்மையையும், அழிவையும் ஏன் அனுமதிக்கவேண்டும்?

ஓர் உதாரணம்

3ஒழுங்கின் கடவுள் பூமியில் ஒழுங்கின்மையை ஏன் அனுமதிக்கவேண்டுமென்பதை விளக்க நாம் ஓர் உதாரணத்தை உபயோகிக்கலாம். கற்பனை செய்துகொள்ளுங்கள், நீங்கள் ஒரு காட்டின் நடுவே நடந்துசெல்லும்போது, ஒரு வீட்டை எதிர்ப்படுகிறீர்கள். அந்த வீட்டை நீங்கள் சோதனையிட, அது ஒழுங்கற்று இருப்பதைக் காண்கிறீர்கள். ஜன்னல்கள் உடைந்துள்ளன, கூரை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முன் முற்றத்தில் அநேக துளைகள், கதவு ஒரு கீலில் தொங்கிக்கொண்டிருக்கிறது, மற்றும் குழாய் வசதி வேலை செய்யவில்லை.

4இந்த எல்லாக் குறைகளையும் காணும்போது ஒரு புத்திக்கூர்மையான வடிவமைப்பாளர் அந்த வீட்டை வடிவமைக்கவில்லை என்று நீங்கள் முடிவுசெய்வீர்களா? அந்த ஒழுங்கின்மை, தற்செயலாக அந்த வீடு வந்திருக்கும் என்று உங்களை நம்பவைக்குமா? அல்லது ஒருவர் அந்த வீட்டை வடிவமைத்துக் கட்டினார் என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், அந்த நபர் திறமையற்றவர், யோசனையற்றவர் என்று நீங்கள் உணருவீர்களா?

5அந்தக் கட்டமைப்பை நீங்கள் மிகத் தெளிவாக ஆராயும்போது, தொடக்கத்தில் அது நன்றாகக் கட்டப்பட்டது, அதிக அக்கறையான சிந்தனைக்கு அத்தாட்சி தருகிறது என்று நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் தவறான உபயோகத்தினால் இப்போது பாதிக்கப்பட்டு, அழிவினை நோக்கிச்செல்கிறது. அந்தக் குறைகளும், பிரச்னைகளும் எதைக் குறிக்கக்கூடும்? அவை பின்வருபவற்றில் ஒன்றைக் குறிக்கக்கூடும். (1சொந்தக்காரர் இறந்துவிட்டார்; (2அவர் ஒரு திறம்பட்ட கட்டமைப்பாளர், ஆனால் இப்பொழுது அந்த வீட்டில் அக்கறைகொண்டில்லை; அல்லது (3போற்றுதலற்ற குடியிருப்போருக்கு அவர் அதைத் தற்காலிகமாக வாடகைக்கு விட்டிருக்கிறார். கடைசிதான் இந்தப் பூமியின் காரியத்திற்கு ஒத்ததாக இருக்கிறது.

என்ன தவறாகப் போனது

6பைபிளின் தொடக்கப் பதிவுகளிலிருந்தே, மனிதர் துன்பப்படுவதோ மரணமடைவதோ கடவுளுடைய நோக்கமாக இருக்கவில்லை என்று நாம் கற்றுக்கொள்கிறோம். நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும், ஏவாளும், கடவுளுக்குக் கீழ்ப்படியாததினாலேயே மரித்தனர். (ஆதியாகமம் 2 மற்றும் 3 அதிகாரங்கள்) அவர்கள் கீழ்ப்படியாமல் போனபோது, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை நிறுத்தினர். கடவுளுடைய பராமரிப்பிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டனர். அதன்விளைவாக, “ஜீவஊற்”றாகிய கடவுளிடமிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டனர்.—சங்கீதம் 36:9.

7ஓர் இயந்திரம், அதனுடைய சக்தி மூலத்துடன் கொண்டுள்ள தொடர்பு துண்டிக்கப்படும்போது, வேகமிழந்து நின்றுபோவது போன்று, அவர்களுடைய உடல்களும், மனங்களும் அழியத்தொடங்கின. அதன் விளைவாக, ஆதாமும் ஏவாளும் அழியத்தொடங்கி, வயோதிபமடைந்து முடிவாக இறந்தனர். அப்பொழுது என்ன நடந்தது? அவர்கள் எங்கேயிருந்து வந்தார்களோ அங்கே திரும்பிச் சென்றனர்: “மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” கடவுள், தம்முடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமற்போவதின் விளைவு மரணமென்று அவர்களை எச்சரித்திருந்தார்: “நீ சாகவே சாவாய்.”—ஆதியாகமம் 2:17; 3:19.

8நம்முடைய முதல் பெற்றோர் மட்டும் சாகவில்லை, ஆனால் அவர்களுடைய மரபில் வந்தவர்களும், முழு மனிதவர்க்கமும், மரணத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட்டனர். ஏன்? மரபுவழிக்கோட்பாட்டின் சட்டங்களின்படி, பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தன்மைகளைச் சுதந்தரிக்கின்றனர். நம்முடைய முதல் பெற்றோரின் எல்லா பிள்ளைகளும் சுதந்தரித்தது என்னவெனில் அபூரணமும், மரணமும். ரோமர் 5:12 நமக்குச் சொல்கிறது: “ஒரே மனுஷனாலே [ஆதாம், மனிதவர்க்கத்தின் முதல் தகப்பன்] பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் [அபூரணம், அதாவது பாவமுள்ள மனச்சாய்வுகளை சுதந்தரித்துக்கொள்வதன் மூலம்] மரணம் எல்லாருக்கும் வந்தது.” பாவம், அபூரணம், மரணம் என்பவையே மனிதர்கள் அறிந்த காரியங்களாகையால், சிலர் அவை இயற்கையானவை, தவிர்க்கமுடியாதவை என்று நோக்குகின்றனர். எனினும் முதல் மனிதர்கள் என்றுமாக வாழ்வதற்கான சக்தியுடனும் ஆசையுடனும் உண்டாக்கப்பட்டனர். எனவேதான், மரணத்தால் தங்கள் வாழ்க்கை துண்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பைப் பெரும்பாலான மக்கள் ஏமாற்றமளிப்பதாக காண்கிறார்கள்.

ஏன் இவ்வளவு காலம்?

9மனிதர்கள் தங்களுடைய சொந்த வழியில் செல்ல கடவுள் ஏன் இவ்வளவு காலம் அனுமதித்து இருக்கிறார்? இத்தனை நூற்றாண்டுகளாக துன்பங்கள் இருக்க ஏன் அவர் அனுமதித்திருக்கிறார்? ஒரு முக்கிய காரணம், ஓர் அதிமுக்கியமான விவாதம் எழுப்பப்பட்டது: ஆட்சிசெய்ய யாருக்கு அதிகாரமுண்டு? கடவுள் மனிதர்களின் ஆட்சியாளராக இருக்க வேண்டுமா அல்லது அவரைவிட்டு விட்டு அவர்கள் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்யமுடியுமா?

10மனிதர்கள் தெரிவுசெய்யும் சுயாதீனத்துடன், அதாவது தெரிவு செய்யும் திறமையுடன் படைக்கப்பட்டனர். அவர்கள் இயந்திர மனிதர்களைப் போலவோ இயல்புணர்ச்சியால் வழிநடத்தப்படும் விலங்குகளைப் போலவோ உண்டாக்கப்படவில்லை. எனவே மனிதர்கள் யாருக்குச் சேவை செய்வது என்பதைத் தெரிவு செய்யக்கூடும். (உபாகமம் 30:19; 2 கொரிந்தியர் 3:17) எனவே, கடவுளுடைய வார்த்தை புத்தி சொல்கிறது: “சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும், உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.” (1 பேதுரு 2:16) எனினும், சுயதெரிவு செய்யும் மகத்தான பரிசை மனிதர்கள் கொண்டிருக்கும்போது, தங்களுடைய செயல்தெரிவின் விளைவுகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

11நம்முடைய முதல் பெற்றோர் தவறான தெரிவைச் செய்தனர். கடவுளிடமிருந்து சுதந்திரமாகச் செல்லும் போக்கை அவர்கள் தெரிவுசெய்தனர். தங்களுடைய சுயதெரிவு செய்யும் அனுமதியைத் தவறாக உபயோகித்தபோது, கடவுள் அந்த முதல் கலகத்தனமான ஜோடியை உடனடியாக சாகடித்திருக்கலாம் என்பது உண்மையே. ஆனால், அது, மனிதர்கள் மேல் ஆட்சிசெய்ய கடவுளுக்கு இருக்கும் உரிமையைப் பற்றிய கேள்வியைத் தீர்த்து வைத்திருக்காது. முதல் ஜோடி கடவுளிடமிருந்து சுதந்தரத்தை விரும்பிய காரணத்தால், இந்தக் கேள்வி பதிலளிக்கப்பட வேண்டும்: அந்தப் போக்கு மகிழ்ச்சியுள்ள வெற்றிகரமானதொரு வாழ்க்கையில் விளைவடையுமா? அதைக் கண்டுபிடிக்க ஒரே வழி நம்முடைய முதல் பெற்றோரையும் அவர்களுடைய பிள்ளைகளையும் அவர்களுடைய சொந்த வழியில் செல்ல அனுமதிப்பதாகும். ஏனென்றால் அதுவே அவர்களுடைய தெரிவாக இருந்தது. மனிதர்கள் தங்களுடைய சிருஷ்டிகரைச் சார்ந்திராமல் தங்களைத்தாங்களே வெற்றிகரமாக ஆட்சிசெய்துகொள்ள படைக்கப்பட்டனரா என்பதை காலம் தெளிவாக்கும்.

12பைபிள் எழுத்தாளர் எரேமியா விளைவு என்னவாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார். கடவுளுடைய சக்திவாய்ந்த பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியால் வழிநடத்தப்பட்டு அவர் உண்மையாக இப்படி எழுதினார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன். கர்த்தாவே என்னை தண்டியும்.” (எரேமியா 10:23, 24) மனிதர்கள் கடவுளுடைய பரம ஞானத்தின் வழிநடத்துதலைக் கொண்டிருக்கவேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஏன்? தம்முடைய வழிநடத்துதல் இல்லாமலே வெற்றிகரமாயிருக்கும்படி மனிதர்களைப் படைக்கவில்லை என்ற காரணத்தினால்தானே.

13ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித ஆட்சியின் விளைவுகள் மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரிடமிருந்து தனியே பிரிந்து தங்கள் சொந்த விவகாரங்களை நடத்திக்கொள்வதற்கில்லை என்பதை எந்தச் சந்தேகத்திற்கிடமின்றி காட்டுகின்றன. அதை முயற்சித்த பின்னர், அழிவுக்குரிய விளைவுகளுக்காக அவர்கள் தங்களைத்தானே நிந்தித்துக்கொள்ளவேண்டும். பைபிள் இதைத் தெளிவுபடுத்துகிறது: “[கடவுள்] கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.”—உபாகமம் 32:4, 5.

கடவுள் சீக்கிரத்தில் தலையிடுவார்

14பல நூற்றாண்டு காலங்களின்போது மனித ஆட்சியின் தோல்வியைப் போதிய அளவு தெளிவுபடுத்தியப்பிறகு, கடவுள் இப்பொழுது மனித விவகாரங்களில் தலையிட்டுத் துன்பம், துயரம், நோய் மற்றும் மரணத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவரமுடியும். அறிவியல், தொழிற்துறை, மருத்துவம் இன்னும் மற்றத் துறைகளிலும் தங்கள் சாதனைகளின் உச்சக்கட்டத்துக்கு வர அனுமதித்தப் பின்பு, தங்கள் சிருஷ்டிகரின் மீது சார்ந்திராத மனிதர்கள் தங்களால் ஒரு சமாதானமுள்ள பரதீஸிய உலகைக் கொண்டுவர முடியுமா என்பதைக் காண்பிக்க இன்னும் அதிக நூற்றாண்டுகள் காலத்தை அனுமதிப்பதற்கு கடவுளுக்கு இனி எந்த அவசியமுமில்லை. அவர்கள் இவ்விதமாகச் செய்யவில்லை, செய்யவும் முடியாது. கடவுளிடமிருந்து சுதந்திரம் மிகவும் அருவருப்பான, பகைமைநிறைந்த, சாவுக்கேதுவான உலகில் விளைவடைந்திருக்கிறது.

15மனிதவர்க்கத்துக்கு உதவிசெய்ய விரும்பிய உண்மையுள்ள ஆட்சியாளர்கள் இருந்திருந்தபோதிலும், அவர்களுடைய முயற்சிகள் வெற்றியடையவில்லை. எல்லா இடங்களிலும் இன்று மனித ஆளுகையில் சீர்குலைவுக்கான அத்தாட்சி காணப்படுகிறது. அதன் காரணமாகவே பைபிள் புத்தி சொல்கிறது: “பிரபுக்களையும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.”—சங்கீதம் 146:3.

[கேள்விகள்]

1, 2. மனித அனுபவத்தை முன்னிட்டுப்பார்க்கையில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?

3-5. (என்ன உதாரணம் ஒழுங்கின் கடவுள் ஏன் பூமியில் ஒழுங்கின்மையை அனுமதிக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்யக்கூடும்? (பல்வேறு தெரிவுகளில் பூமியின் நிலைமை சம்பந்தமாக எது பொருந்துகிறது?

6, 7. கடவுளுடைய சட்டத்தை மீறியபோது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன நடந்தது?

8. நம்முடைய முதல் பெற்றோரின் பாவம் எவ்விதமாக மனித குடும்பத்தைப் பாதித்தது?

9. துன்பம் ஏன் இவ்வளவு காலமாக தொடர்ந்திருக்க கடவுள் அனுமதித்திருக்கிறார்?

10. மனிதர்களுக்கு என்ன திறமை கொடுக்கப்பட்டது, என்ன உத்தரவாதத்தோடு?

11. கடவுளிடமிருந்து சுதந்திரமான ஒரு போக்கு வெற்றியடையுமா என்பதைக் கண்டுபிடிக்க ஒரே வழி என்னவாக இருக்கும்?

12. எரேமியா எவ்விதமாக மனித ஆட்சியை மதிப்பிட்டார், இது ஏன் இப்படி?

13. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித ஆட்சியின் விளைவுகள் சந்தேகத்திற்கிடமின்றி என்ன காண்பித்திருக்கின்றன?

14. கடவுள் ஏன் இனிமேலும் மனித விவகாரங்களில் தலையிடுவதில் தாமதிக்கமாட்டார்?

15. என்ன பைபிள் புத்திமதிக்கு நாம் கவனம்செலுத்துவது நமக்கு நன்மையாக இருக்கும்?

[பக்கம் 24, 25-ன் படம்]

உண்மையுள்ள உலக ஆட்சியாளர்களால்கூட சமாதானமுள்ள, பரதீஸிய உலகைக் கொண்டுவரமுடியவில்லை