Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு பரதீஸ் பூமியில்என்றுமாக வாழுங்கள்

ஒரு பரதீஸ் பூமியில்என்றுமாக வாழுங்கள்

பகுதி 8

ஒரு பரதீஸ் பூமியில்என்றுமாக வாழுங்கள்

1கடவுள் அக்கிரமத்தையும் துன்பத்தையும் பூமியிலிருந்து நீக்கிப்போட்டுத் தம்முடைய பரலோக ராஜ்யத்தின் அன்பான கட்டுப்பாட்டின் கீழ் அவருடைய புதிய உலகைக் கொண்டுவருகையில் வாழ்க்கை எப்படி இருக்கும்? கடவுள் ‘தமது கையைத் திறந்து சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்கு’வதாக வாக்களிக்கிறார்.—சங்கீதம் 145:16.

2உங்கள் நியாயமான ஆசைகள் யாவை? அவை ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை, பிரயோஜனமுள்ள வேலை, பொருளாதார மிகுதி, அழகானச் சுற்றுப்புறம், எல்லா மக்கள் மத்தியிலும் சமாதானம், அநீதி, நோய், துன்பம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலை அல்லவா? மேலும் மகிழ்ச்சியான ஆவிக்குரிய ஒரு நோக்குநிலையைப் பற்றி என்ன? அந்தக் காரியங்கள் அனைத்தும் வெகு சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் கைக்கூடிவரும். அந்தப் புதிய உலகில் வரவிருக்கும் அதிசயமான ஆசீர்வாதங்களைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

மனிதவர்க்கம் பரிபூரண சமாதானத்தில்

3[கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; [யுத்த] இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:9.

4“அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.

5“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.

6“பூமி முழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.”—ஏசாயா 14:7.

மனிதர்களும் மிருகங்களும் சமாதானத்தில்

7‘ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். அவை தீங்குசெய்வதுமில்லை, கேடுசெய்வதுமில்லை.’—ஏசாயா 11:6-9.

8“அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும், ஆகாயத்துப்பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, . . . அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.”—ஓசியா 2:18.

பரிபூரண ஆரோக்கியம், நித்திய வாழ்க்கை

9“அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 35:5, 6.

10“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:4.

11“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.

12“அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.”—யோபு 33:25.

13“தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”—ரோமர் 6:23.

14‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ . . . நித்தியஜீவனை அடைவான்.’—யோவான் 3:16.

மரித்தோர் உயிருக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்

15“நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்”பார்கள்.—அப்போஸ்தலர் 24:15.

16“பிரேதக்குழிகளிலுள்ள [கடவுளுடைய ஞாபகத்திலுள்ள] அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.”—யோவான் 5:28, 29.

17“சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [கல்லறை] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.”—வெளிப்படுத்துதல் 20:13.

பூமி, மிகுதியின் ஒரு பரதீஸ்

18‘ஆசீர்வாதமான மழை பெய்யும். வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்.’—எசேக்கியேல் 34:26, 27.

19“பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.”—சங்கீதம் 67:6.

20“வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்.”—ஏசாயா 35:1.

21“பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்.”—ஏசாயா 55:12, 13.

22“நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”—லூக்கா 23:43.

அனைவருக்கும் நல்ல வீட்டுவசதி

23“வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள் . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை . . . நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை.”—ஏசாயா 65:21-23.

24“அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:4.

பரதீஸில் நீங்கள் என்றும் வாழலாம்

25எதிர்காலத்துக்கு என்னே ஓர் அதிசயமான காட்சி! கடவுளுடைய புதிய உலகில் இன்றைய எல்லா பிரச்னைகளும் என்றுமாக கடந்த காலத்துக்குரிய பிரச்னைகளாகிவிடும் என்ற உறுதியான நம்பிக்கையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போது, வாழ்க்கை என்னே உண்மையான நோக்கத்தை இப்பொழுது கொண்டிருக்கமுடியும்! “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” (ஏசாயா 65:17) அப்போது வாழ்க்கை நித்தியமாக இருக்கும் என்பதை அறிவது எத்தனை ஆறுதலளிப்பதாக இருக்கிறது: “[கடவுள்] மரணத்தை ஜெயமாக விழுங்குவார்.”—ஏசாயா 25:8.

26இப்பொழுது அத்தனை சமீபமாயிருக்கும் அந்தப் பரதீஸ் புதிய உலகில் நீங்கள் என்றுமாக வாழ விரும்புகிறீர்களா? ‘இந்த உலகின் முடிவுகாலத்தில் கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்கும் அவருடைய புதிய உலகில் தொடர்ந்து வாழ்வதற்கும் நான் என்ன செய்வது அவசியம்?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். இயேசு கடவுளிடம் ஜெபிக்கையில் குறிப்பிட்டதை நீங்கள் செய்வது அவசியமாகும்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.

27ஆகவே, ஒரு பைபிளைப் பெற்றுக்கொண்டு, இந்தச் சிற்றேட்டில் நீங்கள் வாசித்திருப்பவற்றை உறுதிசெய்துகொள்ளுங்கள். இந்தப் பைபிள் சத்தியங்களைப் படித்து இவற்றைக் கற்பிக்கும் மற்றவர்களைத் தேடிப்பாருங்கள். பைபிளுக்கு முரணாக கற்பித்துக் காரியங்களைச் செய்யும் மாய்மாலமான மதங்களின் தொடர்பை அறுத்துவிடுங்கள். கடவுளுடைய விருப்பத்தை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கான மற்ற அநேக ஆட்களோடுகூட நீங்களும் எவ்விதமாக மனிதர்கள் ஒரு பரதீஸ் பூமியில் என்றுமாக வாழவேண்டும் என்ற கடவுளுடைய நோக்கத்தில் பங்குகொள்ளமுடியும் என்பதைக் கற்றறியுங்கள். சமீப எதிர்காலத்தைப்பற்றி கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை என்ன அறிவிக்கிறது என்பதை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.

[கேள்விகள்]]

1, 2. கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் வாழ்க்கை எப்படி இருக்கும்?

3-6. புதிய உலகில் மனிதர்கள் சமாதானத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதற்கு என்ன உறுதி நமக்கு இருக்கிறது?

7, 8. மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையே என்ன சமாதானம் அங்கு இருக்கும்?

9-14. புதிய உலகில் உடல் ஆரோக்கிய நிலைமைகளை விளக்கவும்.

15-17. ஏற்கெனவே மரித்துவிட்டிருப்பவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

18-22. முழு பூமியும் என்னவாக மாற்றப்படும்?

23, 24. போதுமான நல்ல வீட்டுவசதி அனைவருக்கும் இருக்கும் என்பதற்கு நமக்கு என்ன உறுதி இருக்கிறது?

25. எதிர்காலத்துக்கு என்ன அதிசயமான காட்சி நமக்கிருக்கிறது?

26. கடவுளுடைய புதிய உலகில் என்றுமாக வாழ்வதற்குத் திறவுகோல் என்ன?

27. கடவுளுடைய நோக்கத்தில் பங்குகொள்ள நீங்கள் என்ன செய்யவேண்டும்?

[பக்கம் 31-ன் படம்]

பூமிக்குரிய ஒரு பரதீஸைத் திரும்ப நிலைநாட்டும் கடவுளுடைய நோக்கம் விரைவில் நிறைவேறும்