மேலான ஞானத்தின்ஓர் ஒப்பற்ற ஊற்றுமூலம்
பகுதி 3
மேலான ஞானத்தின்ஓர் ஒப்பற்ற ஊற்றுமூலம்
1பைபிள் அந்த மேலான ஞானத்தின் பதிவாக இருக்கிறதா? வாழ்க்கையின் நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு அது நமக்கு உண்மையான பதில்களைக் கொடுக்கமுடியுமா?
2நிச்சயமாக பைபிளை நாம் ஆராய்வது தகுதியானது. ஒரு காரணம், இது எக்காலத்திலும் ஒன்றுசேர்க்கப்பட்டிருப்பதுள் மிகவும் விசேஷமான, வேறு எந்தப் புத்தகத்திலிருந்தும் மிகவும் வித்தியாசமான புத்தகமாகும். பின்வரும் உண்மைகளை கவனியுங்கள்.
மிகப்பழமையான, அதிக பரவலாக விநியோகிக்கப்பட்ட புத்தகம்
3எக்காலத்திலும் எழுதப்பட்டிருப்பதுள் பைபிளே மிகப் பழமையானது, அதன் சில பகுதிகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்டதாகும். புனிதமானது என்பதாக கருதப்படும் வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அது அநேக நூற்றாண்டுகள் பழமையானதாகும். அதிலடங்கியிருக்கும் 66 புத்தகங்களில் முதலாவதானது புத்தருக்கும் கன்ஃபூசியஸுக்கும் சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்பும் முகமதுவுக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் எழுதப்பட்டது.
4பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள வரலாறு மனிதகுடும்பத்தின் ஆரம்பத்துக்கு சென்று, நாம் எப்படி இங்கே பூமியில் வந்தோம் என்பதை விளக்குகிறது. மனிதர்கள் படைக்கப்படுவதற்கு முன்பிருந்த காலத்துக்கு நம்மை அழைத்துச்சென்று பூமி உருவானதைப் பற்றிய உண்மைகளை நமக்குத் தருகிறது.
5மற்ற மதசம்பந்தமான புத்தகங்களிலும் மதச்சார்பற்றவற்றிலுங்கூட, அவற்றின் பழமையான கையெழுத்துப்பிரதிகளில் ஒரு சில மட்டுமே இன்னும் எஞ்சியிருக்கின்றன.
பைபிள் அல்லது அதன் பகுதிகளினுடைய கையெழுத்துப்பிரதிகள் சுமார் 11,000 எபிரெயு மற்றும் கிரேக்குவில் இருக்கின்றன. இவற்றில் சில ஆரம்பத்தில் அவை எழுதப்பட்டதற்கு அண்மைக்காலத்தைச் சேர்ந்தவை. பைபிளுக்கு எதிராக ஒருவர் கற்பனைசெய்யக்கூடிய அதிகளவு ஒருமுகப்படுத்தப்பட்ட பலமான தாக்குதல்கள் முயற்சிக்கப்பட்டபோதிலும் இவை அழியாமல் இருந்திருக்கின்றன.6மேலும், பைபிள் மிகப் பெரிய வித்தியாசத்தில் வரலாற்றில் மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்டிருக்கும் புத்தகமாகும். சுமார் 300 கோடி பைபிள்கள் அல்லது அதன் பகுதிகள் சுமார் இரண்டாயிரம் மொழிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. மனித குடும்பத்தில் 98 சதவீதத்தினருக்குப் பைபிள் அவர்களுடைய சொந்த மொழியில் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேறு எந்தப் புத்தகமும் விற்பனையாகும் பிரதிகளின் அந்த எண்ணிக்கைக்கு அருகாமையில் வருவதில்லை.
7மேலும் திருத்தமானத்தன்மையில் பைபிளோடு வேறு எந்தப் புத்தகத்தையும் ஒப்பிடமுடியாது. அறிவியல் அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், புதைப்பொருள் ஆய்வாளர்கள், பூகோள சாஸ்திரிகள், மொழி வல்லுநர்கள், இன்னும் மற்றவர்களும் தொடர்ந்து பைபிள் பதிவுகளின் உண்மையை உறுதிசெய்கிறார்கள்.
அறிவியல்பூர்வமாக திருத்தமானது
8உதாரணமாக, பைபிள் ஓர் அறிவியல் பாடபுத்தகமாக எழுதப்படாதபோதிலும், அறிவியல்பூர்வமான விஷயங்களைப்பற்றி பேசுகையில் அது மெய்யான அறிவியலுக்கு ஒத்திருக்கிறது. ஆனால் புனிதமானது எனக் கருதப்படும் மற்ற பண்டைய புத்தகங்களில் அறிவியல் கட்டுக்கதைகளும், பிழைகளும், முழுமையான பொய்களும் இடம்பெற்றிருக்கின்றன. அறிவியல்பூர்வமாக பைபிள் திருத்தமானது என்பதற்கிருக்கும் அநேக உதாரணங்களில் நான்கினைக் கவனியுங்கள்:
9பூமி விண்ணில் எவ்விதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பைபிள் எழுதப்பட்டுக்கொண்டிருந்த பண்டைய காலங்களில், பூமி எவ்விதமாக விண்ணில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறித்து அநேக ஊகங்கள் இருந்தன. பெரிய கடல் ஆமை ஒன்றின்மீது நின்றுகொண்டிருக்கும் நான்கு யானைகள் பூமியைத் தாங்கிக்கொண்டிருப்பதாக சிலர் நம்பினார்கள். பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டின் கிரேக்க தத்துவஞானியும் அறிவியல் அறிஞருமான அரிஸ்டாட்டில், பூமி ஒருபோதும் வெற்றிடத்தில் தொங்கிக்கொண்டிருக்கமுடியாது என்பதாக கற்பித்தார். மாறாக, வான்வெளி கோளங்கள் உறுதியான, ஒளிபுகும் கோளங்கள் மீது ஒட்டப்பட்டு, ஒவ்வொரு கோளமும் மற்றொரு கோளத்துக்குள்ளாக பொருத்தி வைக்கப்பட்டிருந்தது என கற்பித்தார். பூமி உட்தொலைவான கோளத்தின்மீது இருப்பதாகவும், மிகத் தொலைவிலுள்ள கோளம் நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
10இருப்பினும், பைபிள் அது எழுதப்பட்ட காலத்தில் இருந்துவந்த கற்பனையான அறிவியல்பூர்வமற்ற கருத்துக்களை யோபு 26:7) மூல எபிரெயுவில் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் “அந்தரத்திலே” என்பதற்கு “எதன் மீதுமில்லை” என்பது பொருளாகும். இது பைபிளில் ஒரே ஒரு முறை மாத்திரமே காணப்படுகிறது. வெற்றிடத்தால் சூழப்பட்ட பூமியைப் பற்றி இது அளிக்கும் காட்சியைப் பைபிள் காலத்துக்குக் குறிப்பிடத்தக்க ஒரு முன்னறிவு என்று கல்விமான்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தியாலஜிக்கல் உவார்ட்புக் ஆப் தி ஓல்ட் டெஸ்டமென்ட் சொல்கிறது: “யோபு 26:7 அப்போது அறியப்பட்டிருந்த பூமி விண்வெளியில் தொங்கவிட்டிருப்பதாக தெளிவாக சித்தரித்துக் காட்டியிருக்கிறது. இவ்விதமாக எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்பை அது எதிர்பார்த்திருக்கிறது.”
பிரதிபலிப்பதற்குப் பதிலாக (சுமார் பொ.ச.மு. 1473-ம் ஆண்டில்) வெறுமனே சொன்னதாவது: “[கடவுள்] பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.” (11அரிஸ்டாட்டிலுக்கு 1,100-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே பைபிளின் திருத்தமான கூற்று பதிவுசெய்யப்பட்டது. இருந்தபோதிலும் அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் அவருடைய மரணத்துக்குச் சுமார் 2,000 ஆண்டுகளுக்குப் பின்னும் உண்மை என தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வந்தது! இறுதியாக, பொ.ச. 1687-ல் சர் ஐசக் நியூட்டன் உலகமானது மற்ற விண்ணுலக கோளங்கள் சம்பந்தமாக பரஸ்பர கவர்ச்சி, அதாவது ஈர்ப்புச் சக்தியினால் அதனிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தன்னுடைய கண்டுபிடிப்புகளைப் பிரசுரித்தார். ஆனால் பூமி “அந்தரத்திலே” தொங்கிக்கொண்டிருப்பதாக பைபிள் அது நேர்த்தியான எளிமையோடு சொன்னதற்கு 3,200 ஆண்டுகளானப் பின்பாகும்.
12ஆம், ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக, கண்ணால் பார்க்கக்கூடிய எந்த ஓர் ஆதாரமும் பூமிக்கு இல்லை என்பதாக பைபிள் சரியாகவே குறிப்பிட்டிருந்தது. இது அதிக அண்மைக் காலங்களில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஈர்ப்புச் சக்தி மற்றும் இயக்கவிதியோடு ஒத்திருக்கும் உண்மையாகும். “யோபு உண்மையை எப்படி அறிந்திருந்தார் என்பது பரிசுத்த வேதாகமம் ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதை மறுதலிப்பவர்களால் எளிதில் விடைகாணமுடியாத ஒரு கேள்வியாகும்,” என்பதாக ஒரு கல்விமான் சொன்னார்.
13பூமியின் வடிவம். தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சொன்னது: “பிரபஞ்சத்தின் மையத்தில் தட்டையான, உறுதியான மேடை என்பதே பூமியைப்பற்றி மனிதர்கள் ஆரம்பகாலத்தில் கொண்டிருந்த அறியப்பட்ட கருத்தாக இருந்தது. . . . மறுமலர்ச்சி வரையாக கோளவடிவ பூமிபற்றிய கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.” ஆரம்பகால மாலுமிகள் சிலர் தட்டையான பூமியின் ஓரத்திலிருந்து விலகிவிடுவோமா என்றுங்கூட பயந்தனர். ஆனால் திசையறிவிக்கும் காந்தக்கருவியின் அறிமுகமும் மற்ற முன்னேற்றங்களும் நீண்டகால சமுத்திர கடற்பிரயாணங்களைக் கூடியகாரியமாக்கின. இந்த “கண்டுபிடிப்புக்கான கடற்பயணங்கள் பெரும்பாலான மக்கள் நம்பியிருந்தது போல பூமி தட்டையாக இல்லை ஆனால் உருண்டையே என்பதாக காட்டியது,” என்று மற்றொரு என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது.
14இருப்பினும், இப்படிப்பட்ட கடற்பயணங்களுக்கு வெகு முன்னதாகவே, சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு, பைபிள் சொன்னது: “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.” (ஏசாயா 40:22) இங்கே “உருண்டை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, பல்வேறு நோக்கீட்டுப் புத்தகங்கள் குறிப்பிடுவது போல “கோளம்” என்றுங்கூட அர்த்தப்படுகிறது. ஆகவே மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் “பூமியுருண்டை” என்றும் (டுவே வெர்ஷன்) “வட்டமான பூமி” என்றும் சொல்கின்றன.—மோஃபட்.
15இவ்விதமாக, பூமியின் ஆதாரம் மற்றும் அதன் வடிவம் பற்றியதில் அப்போது வியாபித்திருந்த அறிவியல்பூர்வமற்ற கருத்துக்கள் பைபிள் மீது செல்வாக்குச் செலுத்தவில்லை. காரணம் எளிமையானது: பைபிளின் ஆசிரியரே சர்வலோகத்தின் காரணகர்த்தா. அவரே பூமியைப் படைத்தார், ஆகவே அது எதன்மீது தொங்கிக்கொண்டிருக்கிறது மற்றும் அதன் வடிவம் என்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆகவே பைபிளைத் தம்முடைய ஆவியால் ஏவி எழுதச்செய்தபோது, அறிவியல்பூர்வமற்ற கருத்துக்கள் அந்தச் சமயத்தில் எவ்வளவுதான் நம்பப்பட்டிருந்தாலும் அப்படிப்பட்டவை அதில் சேர்க்கப்படாதிருப்பதை அவர் நிச்சயப்படுத்திக்கொண்டார்.
ஆதியாகமம் 2:7 சொல்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “உயிரிகளை உண்டுபண்ணும் எல்லா வேதியியல் தனிமங்களும் உயிரற்றவற்றிலுங்கூட காணப்படுகின்றன.” மனிதன் உட்பட உயிரிகளை உண்டுபண்ணும் அடிப்படை வேதிபொருட்கள் அனைத்தும் மண்ணில்தானே காணப்படுகின்றன. இது மனிதர்களையும் மற்ற எல்லா உயிருள்ள பொருட்களையும் படைப்பதில் கடவுள் பயன்படுத்திய மூலப்பொருட்களை அடையாளங்காட்டும் பைபிளின் கூற்றுக்கு இசைவாயிருக்கிறது.
16உயிருள்ள பொருட்களின் கூட்டமைவு. “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி”னார் என்று17‘தத்தம் இனத்தின்படியே.’ கடவுள் முதல் மனித ஜோடியைப் படைத்தார் என்றும் மற்ற எல்லா மனிதர்களும் அவர்களிடமிருந்தே தோன்றினார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26-28; 3:20) மீன், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற மற்ற உயிரிகள் அதேவிதமாகவே ‘தத்தம் இனத்தின்படியே’ தோன்றின என்று அது சொல்கிறது. (ஆதியாகமம் 1:11, 12, 21, 24, 25) இதைத்தானே அறிவியல் அறிஞர்கள் இயற்கை படைப்பில் ஒவ்வொரு உயிரியும் அதே இனத்தைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்தே வருகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். விதிவிலக்கு எதுவுமில்லை. இதன் சம்பந்தமாக இயற்பியல் வல்லுநர் ரேமோ குறிப்பிடுகிறார்: “உயிர் உயிரை உண்டுபண்ணுகிறது; ஒவ்வொரு உயிரணுவிலும் எப்போதும் இது நடைபெறுகிறது. ஆனால் உயிரற்ற ஒன்று எவ்விதமாக உயிரை உண்டுபண்ணியது? இது உயிரியலில் பதிலளிக்கப்படாத மிகப் பெரிய கேள்விகளில் ஒன்றாகும். இதுவரை உயிரியல் அறிஞர்களால் ஒழுங்கற்ற அனுமானங்களையே தரமுடிந்திருக்கிறது. எப்படியோ உயிரில்லாத பொருள் சமாளித்துக்கொண்டு உயிருண்டாகும் வகையில் தன்னை ஒழுங்குபடுத்திக்கொண்டது. . . . இருந்தபோதிலும், ஆதியாகம எழுத்தாளர் சரியாகவே சொல்லியிருக்கிறார்.”
வரலாற்றுப்பூர்வமாக திருத்தமானது
18எந்த ஒரு புத்தகத்தையும்விட பைபிளில் மிகத் திருத்தமான பண்டைய வரலாறு அடங்கியிருக்கிறது. ஒரு சட்டநிபுணர் பைபிளை ஆராய்கிறார் (A Lawyer Examines the Bible) என்ற புத்தகம் அது வரலாற்றுப்பூர்வமாக திருத்தமானது என்பதை இவ்விதமாக உயர்த்திக்காண்பிக்கிறது: “‘எழுத்துமூல அறிவிப்பு நல்ல வாதுரைக்கு நேரத்தையும் இடத்தையும் கொடுக்கவேண்டும்’ என்பதாக வழக்கறிஞர்களாகிய நாங்கள் கற்றுக்கொள்ளும் முதலாவதான விதிகளை மீறுகிறவகையில் காதல்கதையும், கட்டுக்கதையும், பொய் சாட்சியங்களும் ஏதோ ஒரு தூர இடத்திலும் ஏதோ நிச்சயமற்ற ஒரு காலத்திலும் சம்பவங்கள் நிகழ்ந்ததாகச் சொல்வதற்குக் கவனமாக இருக்கையில், பைபிள் வரலாறு விவரிக்கும் காரியங்களின் தேதியையும் இடத்தையும் மிக நுட்பமாக நமக்குத்தருகிறது.”
19புதிய பைபிள் அகராதி (The New Bible Dictionary) குறிப்பிடுகிறது: “[அப்போஸ்தலர் நடபடிகளின் எழுத்தாளர்] சமகாலத்திய வரலாற்று வரம்புக்குள் தன் வரலாற்றை அமைக்கிறார்; அவருடைய பக்கங்களில் நகர நடுவர்கள், தேசாதிபதிகள், ராஜாக்கள் மற்றும் இதுபோன்றவற்றைப்பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன. இந்தக் குறிப்புகள் விவாதத்திலிருக்கும் இடத்துக்கும் காலத்துக்கும் சரியாகவே இருப்பது ஒவ்வொரு சமயமும் நிரூபிக்கப்படுகிறது.”
20தி யூனியன் பைபிள் கம்பேனியனில் எழுதுகையில், S. ஆஸ்டின் ஆலபோன் சொல்கிறார். “சர் ஐசக் நியூட்டனுங்கூட . . . பண்டைய எழுத்துக்களின் விமர்சகராக பிரசித்திப்பெற்றிருந்தார். மிக கவனத்தோடு அவர் பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்தார். இந்தக் குறிப்பின்பேரில் அவருடைய தீர்ப்பு என்ன? ‘எந்த [உலகப்பிரகாரமான] வரலாற்றிலுமிருப்பதைவிட புதிய ஏற்பாட்டில் நம்பகமானத்தன்மைக்கு அதிக உறுதியான அம்சங்கள் இருப்பதை நான் காண்கிறேன்,’ என்று அவர் சொல்லுகிறார். ஜூலியஸ் சீசர் ரோம ஆட்சி மன்றத்தில் மரித்தார் என்பதற்கிருப்பதைவிட சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருப்பதுபோல இயேசு கிறிஸ்து கல்வாரியின்மேல் மரித்தார் என்பதற்கு நமக்கு அதிக அத்தாட்சி இருக்கிறது என்பதாக டாக்டர் ஜான்சன் சொல்கிறார். ஆம், நிச்சயமாகவே
நமக்கு மிக அதிகமான அத்தாட்சி இருக்கிறது.”21இந்த ஊற்றுமூலம் மேலும் சொல்கிறது: “சுவிசேஷ வரலாற்றின் வாய்மையினைச் சந்தேகிப்பதாக சொல்லும் எவரிடமும், சீசர் ஆட்சி மன்றத்தில் மரித்தார் என்பதை அல்லது 800-ல் மூன்றாவது போப் லியோவினால் பேரரசர் சார்லிமேன் ரோமப் பேரரசின் மேற்கு பகுதிக்குப் பேரரசராக முடிசூட்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு அவருக்கு என்ன காரணமிருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள்? . . . [இங்கிலாந்தின்] முதலாம் சார்லஸ் என்ற மனிதர் ஒருவர் எக்காலத்திலோ வாழ்ந்தார் என்றும் அவர் சிரச்சேதம்பண்ணப்பட்டு அவருடைய இடத்தில் ஆலிவர் க்ராம்வெல் அரசரானார் என்றும் உங்களுக்கு எப்படித் தெரியும்? . . . சர் ஐசக் நியூட்டன் ஈர்ப்புச் சக்தி விதியைக் கண்டுபிடித்ததற்காகப் பாராட்டப்படுகிறார் . . . இந்த மனிதர்களைப் பற்றி மற்ற மனிதர்கள் செய்த எல்லா உரிமைபாராட்டல்களையும் நாம் நம்புகிறோம்; அதற்குக் காரணம் அவற்றின் வாய்மைக்கு வரலாற்று அத்தாட்சி நமக்கிருக்கிறது. . . . இதுபோன்ற நிரூபணங்களைக் காண்பித்தும் எவராவது இன்னும் நம்புவதற்கு மறுப்பாரேயானால், அவர்களை முட்டாள்தனமாக பிடிவாதமுள்ளவர் அல்லது மிகவும் மோசமான அறிவில்லாதவர் என நாம் உதறித்தள்ளிவிடுகிறோம்.”
22பின்னர் இந்த ஊற்றுமூலம் இவ்வாறு முடிக்கிறது: “அப்படியானால் பரிசுத்த வேதாகமத்தின் நம்பகமானத்தன்மைக்கு இப்பொழுது காண்பிக்கப்படும் ஏராளமான அத்தாட்சி இருப்பினும் தங்களால் நம்பமுடியவில்லை என்று சொல்லிக்கொள்பவர்களைப்பற்றி நாம் என்ன சொல்வோம்? . . . நிச்சயமாகவே தவறிலிருப்பது தலையல்ல ஆனால் இருதயமே என்ற முடிவுக்கு வருவதற்கு நமக்குக் காரணமிருக்கிறது;—தங்கள் பெருமையைப் பணியவைத்து வித்தியாசமான வாழ்க்கையை நடத்த அவர்களைப் பலவந்தப்படுத்தும் ஒன்றை அவர்கள் நம்பவிரும்பவில்லை.”
உட்புற இசைவும் யதார்த்தமும்
23அநேக வித்தியாசமான எழுத்தாளர்கள் எழுதுவதில் பங்கெடுத்து ரோமப் பேரரசின் காலத்தில் எழுத ஆரம்பித்து வரலாற்றின் இடைநிலைக் காலப்பகுதி முழுவதிலுமாக தொடர்ந்து எழுதி இந்த 20-ம் நூற்றாண்டில் முடிக்கப்படும் ஒரு புத்தகத்தைக் கற்பனை செய்துபாருங்கள். போர்வீரர்கள், ராஜாக்கள், ஆசாரியர்கள், மீன்பிடிக்கிறவர்கள், மந்தை மேய்ப்பர்கள், மருத்துவர்கள் என்பதாக எழுத்தாளர்கள் அத்தனை வித்தியாசமான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தால் என்ன விளைவை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? புத்தகம் ஒத்திசைவாகவும் கோர்வையாகவும் இருக்க நீங்கள் எதிர்பார்ப்பீர்களா? ‘நிச்சயமாக இல்லை!’ என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆம் பைபிள் இந்தச் சூழ்நிலைமைகளின் கீழ்தானே எழுதப்பட்டது. இருப்பினும் அது முழுவதுமாக அனைத்தையும் உள்ளிட்ட கொள்கைகளில் மட்டுமல்ல, ஆனால் நுணுக்கமான விவரங்களிலுங்கூட ஒத்திசைவாக இருக்கிறது.
24பைபிள் பொ.ச.மு. 1513-ல் ஆரம்பித்து பொ.ச. 98-ல் முடிவடைந்த 1,600 வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் சுமார் 40 வித்தியாசமான எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 66 புத்தகங்களின் ஒரு தொகுப்பு ஆகும். எழுத்தாளர்கள் வித்தியாசமான சமுதாய அந்தஸ்திலிருந்தும் தொழில்களிலிருந்தும் வந்தவர்களும் அநேகர் மற்ற எழுத்தாளர்களோடு எந்தத் தொடர்பையும் கொண்டிராதவர்களாயும் இருந்தனர். இருந்தபோதிலும் ஒரே ஒரு மனதினால் உருவாக்கப்பட்டது போன்று, ஒரு மையக்கருத்தைக் கோர்வையான பொருளைப் பின்தொடரும் ஒரு புத்தகத்தில் இது விளைவடைந்திருக்கிறது. பைபிள் மேற்கத்திய நாகரீகத்தின் விளைபொருள் என்ற ஒருசிலருடைய நம்பிக்கைக்கு எதிர்மாறாக அது கிழக்கத்திய மனிதர்களாலே எழுதப்பட்டது.
25பண்டைய எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் தங்களின் வெற்றிகளையும் நற்குணங்களையும் மாத்திரமே அறிவிப்புச் செய்கையில், பைபிள் எழுத்தாளர்கள் தங்கள் சொந்த தவறுகளையும் தங்கள் ராஜாக்கள் மற்றும் தலைவர்களின் குறைகளையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எண்ணாகமம் 20:1-13 மற்றும் உபாகமம் 32:50-52 மோசேயின் குறைகளைப்பற்றி பதிவுசெய்கிறது. அவர்தானே அந்தப் புத்தகங்களை எழுதியிருந்தார். யோனா 1:1-3 மற்றும் 4:1, யோனாவின் குறைகளைப் பதிவுசெய்கிறது. அவர்தானே அந்தப் பதிவுகளை எழுதியிருந்தார். மத்தேயு 17:18-20; 18:1-6; 20:20-28; மற்றும் 26:56, இயேசுவின் சீஷர்கள் காண்பித்த பலவீனமான குணங்களைப் பதிவுசெய்கிறது. இவ்விதமாக, பைபிள் எழுத்தாளர்களின் நேர்மையும் யதார்த்த குணமும் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டது என்ற அவர்களுடைய உரிமைபாராட்டலை நிலைநிறுத்துகிறது.
அதன் அதிக விசேஷமான அம்சம்
26அறிவியல்சார்ந்த, வரலாற்றுப்பூர்வமாக, இன்னும் மற்ற விஷயங்களிலும் அது ஏன் அத்தனை திருத்தமாக இருக்கிறது, ஏன் அத்தனை இசைவாயும் நேர்மையாயும் உள்ளது என்பதை பைபிள்தானே வெளிப்படுத்துகிறது. சர்வலோகத்தின் காரணகர்த்தாவாகிய உன்னதமானவரும், சர்வவல்லமையுள்ள கடவுளும் படைப்பாளருமே பைபிளின் ஆசிரியர் என அது காண்பிக்கிறது. மனித பைபிள் எழுத்தாளர்களை அவர் வெறுமனே தமக்காக எழுதுபவர்களாக பயன்படுத்தி தம்முடைய வல்லமைவாய்ந்த கிரியைநடப்பிக்கும் சக்தியால் அவர்களை இயக்கி எழுதும்படி செய்தார்
27பைபிளில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” அப்போஸ்தலன் 2 தீமோத்தேயு 3:16, 17; 1 தெசலோனிக்கேயர் 2:13.
பவுல் இவ்விதமாகவும் சொன்னார்: “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்[டீர்கள்]; . . . அது மெய்யாகவே தேவவசனந்தான்.”—28இவ்விதமாக பைபிள் ஒரே ஆசிரியரின் மனதிலிருந்து வருகிறது—கடவுள். பிரமிக்கவைக்கும் அவருடைய வல்லமையைக்கொண்டு, எழுதப்பட்டவை உருகுலையாமல் நம்முடைய நாள்வரையாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்துகொள்வது அவருக்கு எளிய காரியமாயிருந்தது. இதைக் குறித்து பைபிள் கையெழுத்துப்பிரதிகளில் பிரதான வல்லுநரான சர் ஃபிரெட்ரிக் கெனியன் 1940-ல் கூறினார்: “வேத எழுத்துக்கள் பெரிய அளவு மாறுதலில்லாமல், அவை எழுதப்பட்டபடியே, நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்பதைச் சந்தேகிப்பதற்கு இருந்த அந்தக் கடைசி ஆதாரமும் இப்பொழுது நீக்கப்பட்டுவிட்டது.”
29மனிதர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி குறியீட்டுக் குறிகள் விண்வெளியில், சந்திரனிலிருந்துங்கூட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து பூமிக்கு அனுப்பும் திறமைபெற்றிருக்கின்றனர். விண்வெளி ஆய்வுகலங்கள், கோடிக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள கிரகங்களிலிருந்து பெளதீக தகவலையும் படங்களையும் பூமிக்கு அனுப்பியிருக்கின்றன. நிச்சயமாகவே மனிதனின் படைப்பாளர், வானொலி அலைகளின் படைப்பாளர் குறைந்தபட்சம் அந்த அளவாவது செய்யமுடியும். உண்மையில், பைபிளைப் பதிவுசெய்ய, அவர் தெரிந்துகொண்டவர்களுடைய மனங்களுக்கு வார்த்தைகளையும் படங்களையும் கடத்துவற்குத் தம்முடைய சர்வவல்லமையைப் பயன்படுத்துவது அவருக்கு எளிய காரியமாக இருந்தது.
30மேலும், பூமியையும் அதன்மீது உயிரையும் பற்றியதில், மனிதவர்க்கத்தில் கடவுளுடைய அக்கறைக்கு அத்தாட்சியளிக்கும் அநேக காரியங்கள் உள்ளன. ஆகவே தாம் யார் என்பதையும் மனிதர்களுக்கான தம்முடைய நோக்கம் என்ன என்பதையும் மனிதர்கள் கண்டுபிடிக்க, இந்தக் காரியங்களைத் தெளிவாக ஒரு புத்தகத்தில்—நிரந்தரமான ஓர் ஆவணத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் உதவுவதற்கு அவர் விரும்புவார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
31வாய் வார்த்தையின் மூலமாக மட்டுமே மனிதர்களால் கடத்தப்படும் தகவலோடு ஒப்பிட கடவுள் படைத்திருக்கும் ஒரு புத்தகத்தின் மேம்பட்டத்தன்மையைக்கூட சிந்தித்துப்பாருங்கள். வாய் வார்த்தை நம்பகமானதாக இராது, ஏனென்றால் ஒரு காலத்துக்குப்பின் மக்கள் செய்தியைப் பொழிப்புரை செய்வார்கள், அதன் கருத்து புரட்டப்பட்டுவிடும். பேசப்பட்ட வார்த்தையின் தகவலை அவர்கள் தங்களுடைய சொந்த நோக்குநிலையின் பிரகாரம் பரப்புவார்கள். ஆனால் கடவுளால் ஏவப்பட்ட, நிரந்தரமாக எழுதப்பட்ட பதிவு பிழைகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்பில்லை. மேலும், பல்வேறு மொழிகளை வாசிக்கும் மக்கள் இதிலிருந்து நன்மையடையும்பொருட்டு ஒரு புத்தகம் பிரதி எடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்படலாம். ஆகவே தகவலை அளிக்க நம்முடைய சிருஷ்டிகர் இப்படிப்பட்ட ஒரு வழிமுறையைப் பயன்படுத்தினது நியாயமாக இருக்கிறதல்லவா? ஆம், இது நியாயமாயிருப்பதற்கும் அதிகமாயிருக்கிறது, ஏனென்றால் சிருஷ்டிகர் இதைத்தான் தாம் செய்ததாகச் சொல்கிறார்.
நிறைவேறிமுடிந்த தீர்க்கதரிசனம்
32மேலும், பைபிள் ஒப்பற்ற முதன்மையான முறையில் தெய்வீக ஏவுதலின் அடையாளக் குறியைத்தாங்கியிருக்கிறது: அது தவறாமல் நிறைவேறிமுடிந்த மற்றும் தொடர்ந்து நிறைவேறிவருகின்ற தீர்க்கதரிசனங்களின் ஒரு புத்தகமாகும்.
33உதாரணமாக, பூர்வ தீருவின் அழிவு, பாபிலோனின் வீழ்ச்சி, எருசலேம் மீண்டும் கட்டப்படுதல், மேதிய-பெர்சியா மற்றும் கிரீஸின் ராஜாக்களுடைய எழுச்சி-வீழ்ச்சி ஆகியவை பைபிளில் முழு விவரத்துடன் முன்னறிவிக்கப்பட்டன. தீர்க்கதரிசனங்கள் ஏசாயா 13:17-19; 44:27-45:1; எசேக்கியேல் 26:3-6; தானியேல் 8:1-7, 20-22.
அத்தனை திருத்தமானதாக இருந்ததால், சம்பவங்கள் அவை நடந்தேறிய பின்பே எழுதப்பட்டன என்று சொல்லி ஒருசில திறனாய்வாளர்கள் தோல்வியடைந்தனர்.—34பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்படும் என்பதாக இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்கள் திருத்தமாக நிறைவேறின. (லூக்கா 19:41-44; 21:20, 21) மேலும், இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் சொன்ன “கடைசி நாட்களைப்”பற்றிய தீர்க்கதரிசனங்கள் நம்முடைய சொந்த நாட்களில் நுணுக்கமாக நிறைவேறிக்கொண்டுவருகின்றன.—2 தீமோத்தேயு 3:1-5, 13; மத்தேயு 24; மாற்கு 13; லூக்கா 21.
35எவ்வளவு புத்திக்கூர்மையுள்ளதாகயிருப்பினும் எந்த மனித மனமும் இத்தனை திருத்தமாக எதிர்காலச் சம்பவங்களை முன்னறிவிக்கமுடியாது. இரண்டு பேதுரு 1:20, 21-ல் நாம் வாசிக்கிறபடியே எல்லாம்-வல்ல மற்றும் சர்வலோகத்தின் சகல-ஞானமுமுள்ள படைப்பாளரின் மனது மட்டுமே இதைச் செய்யமுடியும்: “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயி[ல்லை]. . . . தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”
பதிலை அது தருகிறது
36ஆகவே அநேக வழிகளில், பைபிள் உன்னதமானவரின் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைக்குரிய அத்தாட்சியைத் தாங்கியிருக்கிறது. அப்படியிருப்பதால், மனிதர்கள் ஏன் பூமியில் இருக்கிறார்கள், ஏன் இத்தனை வேதனைகள், நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம், நிலைமைகள் எவ்வாறு மேன்மையடைய மாறும் என்பதை நமக்குச் சொல்கிறது. மனிதர்களையும் இந்தப் பூமியையும் ஒரு நோக்கத்துக்காகப் படைத்த ஓர் உன்னதமான கடவுள் இருக்கிறார் என்பதையும் அவருடைய நோக்கம் நிறைவேற்றமடையும் என்பதையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. (ஏசாயா 14:24) உண்மையான மதம் என்ன என்பதையும் அதை நாம் எவ்விதமாக கண்டுபிடிக்கலாம் என்பதையுங்கூட பைபிள் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக, வாழ்க்கையின் எல்லா முக்கியமான கேள்விகளையும்பற்றிய உண்மையை நமக்குச் சொல்லக்கூடிய மேன்மையான ஞானத்தின் ஒரே ஊற்றுமூலமாக இது இருக்கிறது.—சங்கீதம் 146:3; நீதிமொழிகள் 3:5; ஏசாயா 2:2-4.
37பைபிளின் நம்பத்தக்கத்தன்மைக்கும் உண்மைக்கும் ஏராளமான அத்தாட்சி இருக்கையில், அதை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லும் அனைவருமே அதன் போதனைகளைப் பின்பற்றுகின்றனரா? உதாரணமாக கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிப்பதாக உரிமைபாராட்டும் தேசங்களை அதாவது கிறிஸ்தவமண்டலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் அநேக நூற்றாண்டுகளாக பைபிளைப் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்பை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய சிந்தனைகளும் நடவடிக்கைகளும் கடவுளுடைய மேலான ஞானத்தை உண்மையில் பிரதிபலிக்கின்றனவா?
[கேள்விகள்]
1, 2. நாம் ஏன் பைபிளை ஆராயவேண்டும்?
3, 4. பைபிள் எத்தனை பழமையானது?
5. பண்டைய உலகியற்சார்ந்த எழுத்துக்களோடு ஒப்பிட பைபிளின் பழமையான கையெழுத்துப் பிரதிகளில் எத்தனை இன்னும் இருக்கின்றன?
6. பைபிள் எவ்வளவு பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது?
7. பைபிளின் திருத்தமானத்தன்மையைப்பற்றி என்ன சொல்லப்படலாம்?
8. அறிவியல் விஷயங்களில் பைபிள் எவ்வளவு திருத்தமானதாக இருக்கிறது?
9, 10. பைபிள் அதனுடைய காலத்தின் அறிவியல்பூர்வமற்ற கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, பூமியின் ஆதாரம்பற்றி அது என்ன சொன்னது?
11, 12. யோபு 26:7-லுள்ள உண்மையை மனிதர்கள் எப்போது புரிந்துகொண்டார்கள்?
13. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக மக்கள் பூமியின் வடிவத்தை எவ்வாறு கருதினார்கள், ஆனால் அவர்கள் மனதை எது மாற்றியது?
14. பைபிள் எவ்விதமாக பூமியின் வடிவத்தை வர்ணித்தது, எப்போது?
15. பூமியைப்பற்றிய அறிவியல்பூர்வமற்ற கருத்துக்கள் ஏன் பைபிள் மீது செல்வாக்குச் செலுத்தவில்லை?
16. உயிருள்ளவற்றை உண்டுபண்ணும் பொருட்கள் எவ்விதமாக பைபிளின் கூற்றுக்கு ஒத்திருக்கிறது?
17. உயிரிகள் எவ்விதமாகத் தோன்றின என்பதைப்பற்றிய உண்மை என்ன?
18. பைபிள் வரலாற்றுப்பூர்வமாக திருத்தமாக இருப்பதுபற்றி ஒரு சட்டநிபுணர் என்ன சொல்கிறார்?
19. பைபிளின் வரலாற்றுப்பூர்வமான விவரங்களைப்பற்றி ஒரு நோக்கீட்டுப் புத்தகம் என்ன குறிப்புச்சொல்கிறது?
20, 21. பைபிளின் வரலாறு குறித்து ஒரு பைபிள் கல்விமான் என்ன சொல்கிறார்?
22. பைபிளின் நம்பகமானத்தன்மையை ஏன் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்?
23, 24. பைபிளின் உட்புற இசைவு ஏன் அசாதாரணமானது?
25. பைபிளின் நேர்மையும் யதார்த்தமும் பைபிள் எழுத்தாளர்களின் என்ன உரிமைபாராட்டலை நிலைநிறுத்துகிறது?
26, 27. பைபிள் அறிவியல்பூர்வமான மற்றும் மற்ற விஷயங்களில் ஏன் அத்தனை திருத்தமாக இருக்கிறது?
28. அப்படியென்றால் பைபிள் எங்கிருந்து வருகிறது?
29. பேச்சுத்தொடர்புகொள்ள கடவுளின் திறமை எவ்விதமாக விளக்கப்படலாம்?
30. மனிதர்களுக்கான தம்முடைய நோக்கம் என்ன என்பதை அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரா?
31. வாய் வார்த்தையாகக் கடத்தப்படும் தகவலைவிட பதிவுசெய்யப்படும் ஆவியால் ஏவப்பட்ட செய்தி ஏன் மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது?
32-34. வேறு எந்தப் புத்தகமும் தன்னுள் கொண்டிராத எதை பைபிள் கொண்டிருக்கிறது?
35. பைபிள் தீர்க்கதரிசனம் ஏன் சிருஷ்டிகரிடமிருந்து மாத்திரமே வரமுடியும்?
36. பைபிள் நமக்கு என்ன சொல்கிறது?
37. கிறிஸ்தவமண்டலத்தைப்பற்றி என்ன கேட்கப்படவேண்டும்?
[பக்கம் 11-ன் படங்கள்]
சர் ஐசக் நியூட்டன் பூமி மற்ற விண்ணுலக கோளங்கள் சம்பந்தமாக ஈர்ப்புச் சக்தியினால் அதனிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று நம்பினார்
வெற்றிடத்தால் சூழப்பட்ட பூமியைப் பற்றி பைபிள் அளிக்கும் காட்சி அதன் காலத்துக்குக் குறிப்பிடத்தக்க ஒரு முன்னறிவு என்று கல்விமான்கள் ஒப்புக்கொள்கிறார்கள்
[பக்கம் 12-ன் படம்]
ஆரம்பகால மாலுமிகள் சிலர் தட்டையான உலகின் ஓரத்திலிருந்து விலகிவிடுவோமா என்றுங்கூட பயந்தனர்
[பக்கம் 13-ன் படம்]
ஜூலியஸ் சீசர், பேரரசர் சார்லிமேன், ஆலிவர் க்ராம்வெல் அல்லது மூன்றாவது போப் லியோ வாழ்ந்தார்கள் என்பதற்கிருப்பதைவிட இயேசு கிறிஸ்து வாழ்ந்தார் என்பதற்கு அதிகமான அத்தாட்சி இருக்கிறது
[பக்கம் 15-ன் படம்]
பொ.ச. 70-ல் நிகழ்ந்த எருசலேமின் அழிவு பற்றி இயேசு கொடுத்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை ரோமிலிருக்கும் டைட்டஸ் வளைவு உறுதிசெய்கிறது