இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
உலகம் முழுவதிலும் பயங்கர பிரச்சினைகளும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் அன்றாட செய்தியாகிவிட்டன! இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகிறது?
பாதுகாப்பு: ரயில்களில் வெடிகுண்டு. பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் சுட்டுக் கொலை. பெற்றோர் அசந்திருக்கையில் குழந்தைகள் கடத்தப்பட்டனர். பட்டப்பகலில் கொள்ளை: பெண்களும் முதியோரும் தாக்கப்பட்டனர்.
மதம்: போரில் இரு தரப்பினருக்கும் சர்ச்சுகள் ஆதரவு. இனப் படுகொலை வழக்கில் பாதிரியார். சிறுவரிடம் பாதிரியாரின் லீலைகள்—சர்ச் மூடிமறைக்கிறது. வெறிச்சோடிக் கிடக்கும் சர்ச்சுகள்; சர்ச் கட்டிடங்கள் விற்பனைக்கு.
சுற்றுச்சூழல்: தொழிற்சாலைகளுக்கு காடுகள் பலி. விறகுக்காக வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள். நிலத்தடிநீர் மாசு, பாதுகாப்பற்ற குடிநீர். மீன்வளம் குறைதல்: கழிவுப்பொருட்களும் நவீன மீன்பிடி முறைகளும் காரணம். காற்று தூய்மைக்கேட்டினால் மூச்சுத்திணறல்.
பிழைப்பு: சில ஆசிய நாடுகளில் தனிநபர் ஆண்டு வருவாய் மிகவும் குறைவு. மானேஜரின் பேராசையால் கம்பெனி திவால், ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவிப்பு. பண மோசடி: முதலீட்டாளர்கள் கண்ணீர் கடலில்.
உணவுப் பற்றாக்குறை: உலகெங்கும் சுமார் 80 கோடி பேர் பட்டினி.
போர்: 20-ம் நூற்றாண்டில் 10 கோடிக்கும் அதிகமானோர் போரில் பலி. மனிதகுலத்தை பல தடவை அழிக்க வல்ல அணு ஆயுதங்கள் கையிருப்பில். உள்நாட்டுச் சண்டைகள். உலகெங்கும் பரவும் தீவிரவாதம்.
கொள்ளை நோய்களும் பிற வியாதிகளும்: ஸ்பானிஷ் ஃப்ளூ: 1918 முதல் 2,10,00,000 பேர் பலி. எய்ட்ஸ்: “மனித சரித்திரத்திலேயே கொடிய கொள்ளை நோய்.” உலக மக்களை வாட்டும் புற்றுநோயும் இருதய நோயும்.
இந்தச் செய்திகளை வெறுமனே மேலோட்டமாக பார்க்காதீர்கள். இவையெல்லாம் ஆங்காங்கே நடைபெறும் தனித்தனி சம்பவங்களா? அல்லது அதி முக்கியத்துவமுடைய ஓர் உலகளாவிய அடையாளத்தின் பாகமா?
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?
அதிர்ச்சியூட்டும் சம்பவங்களால் வேதனைப்படும்போது அல்லது அன்பானவரை இழந்து தவிக்கும்போது, இதையெல்லாம் ஏன் கடவுள் தடுத்து நிறுத்துவதில்லை என அநேகர் நினைக்கின்றனர்.
கடவுளுக்கு அக்கறை இருக்கிறது. நம்பகமான வழிநடத்துதலையும் உண்மையான ஆறுதலையும் அவர் இப்பொழுது தருகிறார். (மத்தேயு 11:28-30; 2 தீமோத்தேயு 3:16, 17) வன்முறை, வியாதி, மரணம் ஆகியவற்றை அடியோடு ஒழிக்க அஸ்திவாரம் போட்டிருக்கிறார். ஒரு தேசத்தினர் மீது மட்டுமல்ல, எல்லா தேசத்தினர், குலத்தினர், மொழியினர் மீதும் அவருக்கு அக்கறை இருக்கிறது என்பதை அவர் செய்திருக்கும் ஏற்பாடுகள் காட்டுகின்றன.—அப்போஸ்தலர் 10:34, 35.
கடவுளைப் பற்றி நமக்கு எந்தளவு அக்கறை இருக்கிறது? வானத்தையும் பூமியையும் படைத்தவர் யார் என உங்களுக்குத் தெரியுமா? அவருடைய பெயர் என்ன? அவருடைய நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு அவர் பைபிளில் பதிலளிக்கிறார். வன்முறையையும் வியாதியையும் மரணத்தையும் ஒழித்துக்கட்டுவதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதையும் அதில் சொல்கிறார். இதிலிருந்து நன்மையடைய நாம் என்ன செய்ய வேண்டும்? அவரையும் அவருடைய நோக்கத்தையும் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மீது விசுவாசம் வைக்காமல் எப்படி அவருடைய ஏற்பாடுகளிலிருந்து நன்மை அடைய முடியும்? (யோவான் 3:16; எபிரெயர் 11:6) அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதும் அவசியம். (1 யோவான் 5:3) இதையெல்லாம் செய்ய உங்களுக்கு அக்கறை இருக்கிறதா?
இன்றுள்ள நிலைமைகளை கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதற்கு, நாம் முக்கியமான ஒரு விவாதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பைபிள் அதை விளக்குகிறது. இந்தப் பிரசுரத்தின் 15-ம் பக்கத்தில், அந்த விவாதம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.