கடவுளுடைய வாக்குறுதியின்படியே ஒரு புதிய உலகம்
கடவுளுடைய வாக்குறுதியின்படியே ஒரு புதிய உலகம்
“அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” என சொல்வதன் மூலம் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் நம் மனதை நம்பிக்கையால் நிரப்புகிறது.—2 பேதுரு 3:13.
‘புதிய வானம்’ என்றால் என்ன? வானம் என்பதை ஆட்சியுடன் பைபிள் சம்பந்தப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 7:49) ‘புதிய வானம்’ என்பது பூமியை ஆளும் ஒரு புதிய அரசாங்கம். இது புதியது, ஏனென்றால் இது தற்போதைய ஆட்சியை நீக்கிவிடும்; கடவுளுடைய நோக்கத்தைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இது ஒரு புதிய படியாக இருக்கிறது. இந்த ராஜ்யத்திற்காகவே ஜெபிக்கும்படி இயேசு நமக்கு கற்றுக் கொடுத்தார். (மத்தேயு 6:10) கடவுளே இதை ஸ்தாபித்தவர் என்பதாலும் அவர் பரலோகத்தில் வாசம் பண்ணுவதாலும், இது ‘பரலோக ராஜ்யம்’ என அழைக்கப்படுகிறது.—மத்தேயு 7:21.
“புதிய பூமி” என்றால் என்ன? இது ஒரு புதிய கோளம் அல்ல, ஏனென்றால் இந்தப் பூமியில் என்றென்றும் மக்கள் குடியிருப்பார்கள் என பைபிள் தெளிவாக கூறுகிறது. “புதிய பூமி” என்பது புதிய மனித சமுதாயம். இது புதியது, ஏனென்றால் பொல்லாதவர்கள் அழிக்கப்பட்டிருப்பார்கள். (நீதிமொழிகள் 2:21, 22) அப்பொழுது வாழ்பவர்கள் அனைவரும் படைப்பாளருக்கு மரியாதையையும் கீழ்ப்படிதலையும் காண்பிப்பார்கள், அவருடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக வாழ்வார்கள். (சங்கீதம் 22:27) எல்லா தேசத்து மக்களும் அந்த சட்டதிட்டங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இப்பொழுதே அவற்றிற்கு இசைய வாழ்வதற்கும் அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் அவற்றை செய்து வருகிறீர்களா?
கடவுளுடைய புதிய உலகில், அனைவரும் அவருடைய அரசாட்சிக்கு மதிப்புக் கொடுப்பார்கள். கடவுள் மீதுள்ள அன்பு அவருக்குக் கீழ்ப்படிய உங்களைத் தூண்டுகிறதா? (1 யோவான் 5:3) உங்களுடைய வீட்டில், வேலை செய்யுமிடத்தில், பள்ளிக்கூடத்தில், வாழ்க்கையை நடத்தும் விதத்தில் இந்த அன்பை காட்டுகிறீர்களா?
அந்தப் புதிய உலகில், மெய்க் கடவுளை வணங்குவதில் மனித சமுதாயத்தினர் ஒன்றுபட்டிருப்பார்கள். வானத்தையும் பூமியையும் படைத்தவரை நீங்கள் வணங்குகிறீர்களா? உங்கள் வணக்கம் அனைத்து தேசங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த சக வணக்கத்தாருடன் உங்களை உண்மையிலேயே ஒன்றுபடுத்துகிறதா?—சங்கீதம் 86:9, 10; ஏசாயா 2:2-4; செப்பனியா 3:9.
[பக்கம் 17-ன் பெட்டி]
இவற்றை வாக்குறுதி அளிக்கும் கடவுள்
அவரே வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவரையே ‘ஒன்றான மெய்த் தேவன்’ என இயேசு கிறிஸ்து அடையாளம் காட்டினார்.—யோவான் 17:3.
பெரும்பான்மையோர் தாங்கள் உருவாக்கிய கடவுட்களையே புகழ்கின்றனர். லட்சோபலட்சம் பேர் உயிரற்ற உருவங்கள் முன்னால் விழுந்து பணிந்து கொள்கின்றனர். வேறு சிலர் மனித அமைப்புகளையோ ஆன்மீகமற்ற தத்துவங்களையோ சொந்த ஆசைகளையோதான் போற்றி புகழ்கின்றனர். பைபிளை பயன்படுத்துவதாக சொல்லிக் கொள்கிறவர்களும்கூட, ‘மெய்யான தெய்வம்’ என அழைக்கப்படுகிறவருடைய பெயரை மகிமைப்படுத்துவதில்லை.—எரேமியா 10:10.
“என் நாமம் யேகோவா” என படைப்பாளர் தம்மைக் குறித்து சொல்கிறார். (எரேமியா 16:21) மூல மொழிகளில் இந்தப் பெயர் சுமார் 7,000 தடவை வருகிறது. “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என ஜெபிக்கும்படி இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுகிறவர்களுக்குக் கற்பித்தார்.—மத்தேயு 6:9.
இந்த மெய்த் தேவன் எப்படிப்பட்டவர்? “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்றும், தமது கட்டளைகளை வேண்டுமென்றே மீறுகிறவர்களை தண்டியாமல் விட்டுவிடுகிறவர் அல்ல என்றும் அவர் தம்மைக் குறித்து விவரிக்கிறார். (யாத்திராகமம் 34:6, 7) அந்த விவரிப்பு உண்மை என்பதை மனிதருடன் அவர் செயல்பட்ட விதத்தைப் பற்றிய சரித்திரப் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
அந்தப் பெயரையும் அந்தப் பெயர் பிரதிநிதித்துவம் செய்கிற நபரையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். படைப்பாளரும் சர்வலோக பேரரசருமான அவர் நமது கீழ்ப்படிதலையும் முழுமையான பக்தியையும் பெற தகுதியானவர். தனிப்பட்ட விதமாக நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து முழுமையான பக்தியை செலுத்துகிறீர்களா?
[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]
“புதிய வானங்களும் புதிய பூமியும்” என்ன மாற்றங்களை செய்யும்?
பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படும் லூக்கா 23:43
எல்லா தேசத்தவரும் இனத்தவரும் யோவான் 13:35;
மொழியினரும் அடங்கிய உலகளாவிய வெளிப்படுத்துதல் 7:9, 10
ஒரு சமுதாயம் அன்பில் ஐக்கியப்படுத்தப்படும்
பூமியெங்கும் சமாதானம், அனைவருக்கும் சங்கீதம் 37:10, 11;
உண்மையான பாதுகாப்பு மீகா 4:3, 4
திருப்தியான வேலை, ஏராளமான உணவு ஏசாயா 25:6; 65:17, 21-23
வியாதி, துயரம், மரணம் யாவும் ஒழிக்கப்படும் ஏசாயா 25:8;
மெய்த் தேவனை வணங்குவதில் உலகம் வெளிப்படுத்துதல் 15:3, 4
ஐக்கியப்பட்டிருக்கும்
[பக்கம் 19-ன் பெட்டி/படங்கள்]
நீங்கள் பயனடைவீர்களா?
கடவுள் பொய் சொல்ல முடியாதவர்!—தீத்து 1:3.
‘என் வாயிலிருந்து புறப்படும் வசனம் . . . வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்’ என யெகோவா அறிவிக்கிறார்.—ஏசாயா 55:11.
யெகோவா ஏற்கெனவே “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” உருவாக்கி வருகிறார். பரலோக அரசாங்கம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. ‘புதிய பூமிக்கான’ அஸ்திவாரம் ஏற்கெனவே போடப்பட்டுள்ளது.
‘புதிய வானமும் புதிய பூமியும்’ மனிதருக்கு செய்யும் மகத்தான காரியங்களை விவரித்த பிறகு, சர்வலோக பேரரசராகிய கடவுளே இவ்வாறு சொன்னதாக வெளிப்படுத்துதல் குறிப்பிடுகிறது: “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். . . . பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:1, 5.
முக்கியமான கேள்வி என்னவென்றால், ‘புதிய வானத்தின்’ கீழுள்ள ‘புதிய பூமியில்’ வாழ தகுதியானவர்களாக கருதப்படுவதற்குத் தேவையான மாற்றங்களை நாம் செய்து வருகிறோமா?