Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அந்த முதல் அன்பை திரும்ப தூண்டிவிடுங்கள்!

அந்த முதல் அன்பை திரும்ப தூண்டிவிடுங்கள்!

அதிகாரம் 7

அந்த முதல் அன்பை திரும்ப தூண்டிவிடுங்கள்!

எபேசு

1. இயேசுவின் முதல் செய்தி எந்தச் சபைக்கு கொடுக்கப்பட்டது, அவர் கண்காணிகளுக்கு எதை நினைப்பூட்டுகிறார்?

 இயேசுவின் முதல் செய்தி எபேசுவிலிருந்த சபைக்கு எழுதப்பட்டது, இந்த நகரம் சின்ன ஆசியாவின் கடலோரப் பகுதியில் அப்போது ஒரு செழிப்பான நகரமாக இருந்த பத்மு தீவுக்கு அருகாமையில் இருந்தது. இயேசு யோவானுக்குக் கட்டளையிடுகிறார்: “எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகள் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது.” (வெளிப்படுத்துதல் 2:1) மற்ற ஆறு செய்திகளில் காணப்படுகிறது போலவே, இயேசு இங்கே தம்முடைய அதிகாரத்துவத்துக்குரிய ஸ்தானத்தை குறிக்கிற ஓர் அம்சத்துக்குக் கவனத்தைத் திருப்புகிறார். எல்லா மூப்பர்களும் அவருடைய பாதுகாப்பான கண்காணிப்பின்கீழ் இருப்பதையும் அவர் எல்லா சபைகளையும் சோதனை செய்வதையும் எபேசுவின் கண்காணிகளுக்கு நினைப்பூட்டுகிறார். நம்முடைய நாட்களிலேயும் அவர் மூப்பர்களின்மேல் கவனம் செலுத்தி சபையுடன் கூட்டுறவு கொள்கிற எல்லாரையும் தயவுடன் மேய்க்கிறவராக இந்த அன்புள்ள தலைமைத்துவத்தைத் தொடர்ந்து செலுத்திவந்திருக்கிறார். வெளிச்சம் இன்னும் அதிகமாக பிரகாசிப்பதற்காக, அவர் அவ்வப்போது சபையின் ஏற்பாடுகளில் சில மாற்றங்களைச் செய்கிறார். ஆம், கடவுளுடைய மந்தையின் மீது இயேசுவே பிரதான மேய்ப்பராக இருக்கிறார்.—மத்தேயு 11:28-30; 1 பேதுரு 5:2-4.

2. (அ) எந்த நல்ல காரியங்களுக்காக எபேசிய சபையை இயேசு போற்றினார்? (ஆ) அப்போஸ்தலன் பவுலின் எந்த ஆலோசனைக்கு எபேசிய மூப்பர்கள் தெளிவாக கீழ்ப்படிந்தார்கள்?

2 இயேசு, இரண்டைத் தவிர தம்முடைய ஏழு செய்திகளையும் முதலில் கனிவான போற்றுதல் தெரிவிக்கும் வார்த்தைகளோடு தொடங்குவதன் மூலம் ஒரு மாதிரியை வைக்கிறார். எபேசியர்களுக்கு அவர் இந்த ஒரு செய்தியை கொண்டிருக்கிறார்: “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்தததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:2, 3) அநேக ஆண்டுகளுக்கு முன்பு, அப்போஸ்தலன் பவுல் மந்தையைக் கலைக்கும் விசுவாசதுரோகிகளான “கொடிதான ஓநாய்க”ளைக் குறித்து எபேசிய மூப்பர்களை எச்சரித்திருந்தார், மேலும் தன்னுடைய சொந்த சோர்வுறாத முன்மாதிரியைப் பின்பற்றி ‘விழிப்புள்ளவர்களாக’ இருக்கும்படியும் அந்த மூப்பர்களுக்குச் சொல்லியிருந்தார். (அப்போஸ்தலர் 20:29, 31) இயேசு இப்பொழுது அவர்களுடைய பிரயாசத்துக்காகவும் சகிப்புத்தன்மைக்காகவும் இளைப்படையாமல் இருந்ததற்காகவும் அவர்களைப் பாராட்டுவதால், அந்த ஆலோசனையை நிச்சயமாக அவர்கள் பொருத்தியிருப்பார்கள்.

3. (அ) நம்முடைய நாட்களில் “கள்ள அப்போஸ்தலர்கள்” உண்மையுள்ளவர்களை எப்படி வஞ்சிக்க முயன்றிருக்கிறார்கள்? (ஆ) விசுவாசதுரோகிகளைக் குறித்து பேதுரு என்ன எச்சரிக்கை கொடுத்தார்?

3 “கள்ள அப்போஸ்தலர்கள்” கர்த்தருடைய நாளிலுங்கூட, தோன்றியிருக்கின்றனர், இவர்கள் “சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப்” போதிக்கிறவர்கள் ஆவர். (2 கொரிந்தியர் 11:13; அப்போஸ்தலர் 20:30; வெளிப்படுத்துதல் 1:10) முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட எல்லா மத பிரிவுகளிலும் நல்லதை அவர்கள் காண்கிறார்கள், கடவுளுக்கு ஓர் அமைப்பு இல்லையென்று உரிமைபாராட்டுகிறார்கள், மேலும் 1914-ல் இயேசு ராஜ்ய அதிகாரத்தை பெற்றுக்கொண்டதை மறுக்கிறார்கள். அவர்கள் 2 பேதுரு 3:3, 4-லுள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள்: “கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்ற முதல் இருந்த விதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.”

4. (அ) பரியாசக்காரரின் பெருமையும் கலகத்தனமும் எப்படி வெளிப்படுகிறது? (ஆ) பொய்பேசும் எதிரிகளின் மேல் என்ன நடவடிக்கை எடுப்பதன் மூலம் இன்று கிறிஸ்தவர்கள் எபேசியரை போல் இருப்பதைக் காண்பிக்கிறார்கள்?

4 அந்தப் பரியாசக்காரர், தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கை பண்ணவேண்டும் என்ற எண்ணத்துக்கு விரோதமாக கலகஞ்செய்கின்றனர். (ரோமர் 10:10) தங்கள் முன்னாள் கூட்டாளிகளைப்பற்றி பொய் அறிக்கை பரப்புவதற்கு கிறிஸ்தவமண்டலத்தின் குருமார்களின் ஆதரவையும் செய்திப் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் உதவியையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ்விதமாக வஞ்சிப்பவர்களின் பேச்சும் நடத்தையும் உண்மையற்றவை என்பதை உண்மையுள்ளவர்கள் விரைவில் காண்கின்றனர். எபேசியரை போலவே, இன்று கிறிஸ்தவர்கள் “பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமல்” அவர்களைத் தங்கள் சபைகளிலிருந்து சபைநீக்கம் செய்கின்றனர். a

5. (அ) எபேசியருக்கு எந்தப் பலவீனம் இருந்ததாக இயேசு கூறினார்? (ஆ) எந்த வார்த்தைகளை எபேசியர் நினைவில் வைத்திருந்திருக்க வேண்டும்?

5 ஆனால், இப்பொழுது ஏழில் ஐந்து சபைகளுக்குச் செய்கிறது போலவே, இயேசு ஒரு வினைமையான பிரச்சினையை தனிப்படுத்தி எடுத்துக் காட்டுகிறார். எபேசியருக்கு அவர் இவ்வாறு கூறுகிறார்: “ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு.” (வெளிப்படுத்துதல் 2:4) அவர்கள் இந்தக் காரியத்தில் தவறியிருக்கக்கூடாது, ஏனெனில் தேவன் “நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பைக்” குறித்து பவுல் 35 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு எழுதியிருந்தார். மேலும் “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து . . . நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்,” என்று இவர்களைத் துரிதப்படுத்தியிருந்தார். (எபேசியர் 2:4; 5:1, 2) மேலும், இயேசுவின் வார்த்தைகள் இவர்களுடைய இருதயத்தில் நிலையாக பதிவாகியிருக்க வேண்டும். “நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” (மாற்கு 12:29-31, NW) எபேசியர் அந்த முதல் அன்பை இழந்துவிட்டார்கள்.

6. (அ) நாம் அதிக காலம் சபையில் இருந்தவர்களாக அல்லது புதிதாக கூட்டுறவு கொள்கிறவர்களாக இருந்தாலும் எந்த ஆபத்துக்கும் , மனச்சாய்வுகளுக்கும் எதிராக நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்? (ஆ) யெகோவாவின் பேரில் இருக்கும் நம்முடைய அன்பு என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்?

6 அதிக காலம் சபையில் இருந்தவர்களானாலும் அல்லது புதிதாக கூட்டுறவு கொள்கிறவர்களானாலும், நாம் யெகோவாவிடமாக கொண்டிருந்த முதல் அன்பை இழந்துவிடாமல் காத்துக்கொள்ள வேண்டும். இந்த இழப்பு எப்படி ஏற்பட முடியும்? நம்முடைய உலகப்பிரகாரமான வேலையோடு பிணைத்துக் கொள்வது, அதிகம் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசை அல்லது சுகபோகத்தை பின்தொடர்தல் போன்ற இவை நம் வாழ்க்கையில் முக்கிய காரியங்களாக இருக்க இடங்கொடுப்பதன் மூலமே ஆகும். இப்படியாக நாம் ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களாக இராமல் மாம்ச சிந்தையுடையவர்களாக மாறிவிடுவோம். (ரோமர் 8:5-8; 1 தீமோத்தேயு 4:8; 6:9, 10) யெகோவாவின்பேரில் இருக்கும் அன்பு இப்பேர்ப்பட்ட எந்த மனச்சாய்வுகளைத் திருத்தவும், ‘பரலோகத்திலே நமக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும்பொருட்டு,’ ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடவும்’ நம்மைத் தூண்ட வேண்டும்.—மத்தேயு 6:19-21, 31-33.

7. (அ) யெகோவாவுக்கு நம்முடைய சேவை எதனால் தூண்டப்படவேண்டும்? (ஆ) அன்பைக் குறித்து யோவான் என்ன கூறினார்?

7 யெகோவாவுக்கு நம்முடைய சேவை அவர் பேரில் இருக்கும் ஆழமான அன்பினால் எப்பொழுதும் தூண்டப்படுவதாக. யெகோவாவும் கிறிஸ்துவும் நமக்காக செய்த எல்லாவற்றிற்கும் ஊக்கமான போற்றுதலை உடையவர்களாக இருப்போமாக. யோவான்தானே பின்பு எழுதினபடி: “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.” யோவான் நமக்கு மேலும் கூறுகிறார்: “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான்; தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” யெகோவாவின் பேரிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரிலும் ஜீவனுள்ள கடவுளுடைய வார்த்தையின் பேரிலும் நமக்கு இருக்கும் அன்பை மங்கவிட ஒருபோதும் இடங்கொடாதிருப்போமாக! கடவுளை வைராக்கியத்துடன் சேவிப்பதன் மூலமாக மட்டும் அல்ல, ஆனால் “தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்பு கூரவேண்டுமென்கிற” அவராலே பெற்றிருக்கிற இந்தக் கற்பனைக்குக் கீழ்ப்படிந்திருப்பதன் மூலமாகவுங்கூட இந்த அன்பை நாம் வெளிக்காட்ட முடியும்.—1 யோவான் 4:10, 16, 21; எபிரெயர் 4:12; 1 பேதுரு 4:8-ஐயும் காண்க; கொலோசெயர் 3:10-14; எபேசியர் 4:15.

“ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக”

8. எபேசியர் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்?

8 அந்த எபேசியர் தாங்கள் கொண்டிருந்த அன்பை இழந்துபோகாமல் இருக்கவேண்டுமென்றால் அவர்கள் அதைத் திரும்பத் தூண்டவேண்டும். “ஆகையால்,” இயேசு அவர்களிடம் சொல்லுகிறார், “நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.” (வெளிப்படுத்துதல் 2:5) இந்த வார்த்தைகளை எபேசு சபையிலுள்ள கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள்? நமக்குத் தெரியவில்லை. அவர்கள் மனந்திரும்பி, யெகோவாவின் பேரில் தங்களுடைய அன்பைத் திரும்ப தூண்டியெழுப்புவதில் வெற்றி அடைந்திருப்பார்கள் என்று எண்ணுகிறோம். இல்லாவிட்டால், விளக்கு அணைக்கப்பட்டு, அவர்களுடைய விளக்குத்தண்டு நீக்கப்படும். சத்தியத்தை பிரகாசிப்பிக்கும் சிலாக்கியத்தை அவர்கள் இழந்து விடுவார்கள்.

9. (அ) எபேசியருக்காக இயேசு எந்த உற்சாகமூட்டும் வார்த்தையைக் கொண்டிருந்தார்? (ஆ) யோவானின் நாட்களுக்குப் பிற்பாடு இருந்த சபைகள் எப்படி இயேசு எபேசியருக்கு கொடுத்த ஆலோசனைக்குக் கவனம் செலுத்தத் தவறின?

9 ஆனாலும், எபேசியருக்கு இயேசு இந்த உற்சாகமூட்டும் வார்த்தையைக் கொண்டிருந்தார்: “நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.” (வெளிப்படுத்துதல் 2:6) மதப் பிரிவினைவாதங்களை அவர்கள் இயேசு கிறிஸ்து வெறுப்பதைப் போலவே வெறுத்தார்கள். ஆனால் ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல, அநேக சபைகள் இயேசுவின் அந்த வார்த்தைகளுக்கு கவனம் செலுத்த தவறினார்கள். யெகோவாவிடமும் சத்தியத்தினிடமும் ஒருவரிலொருவரிடமும் அன்பில்லாமல் இருந்தது, அவர்கள் ஆவிக்குரிய இருளுக்குள் விலகிப் போவதில் விளைவடைந்தது. சண்டையிட்டுக்கொள்கிற அநேக சிறு சிறு பிரிவுகளாக சிதறுண்டு போனார்கள். யெகோவாவிடம் அன்பு இல்லாது, “கிறிஸ்தவ” நகலெடுப்பவர்கள் பைபிளின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலிருந்து கடவுளின் பெயரையே நீக்கிவிட்டனர். கிறிஸ்தவத்தின் பெயரில் எரிநரகம், உத்தரிக்கும் ஸ்தலம், திரித்துவம் போன்ற பாபிலோனிய மற்றும் கிரேக்க கோட்பாடுகளுக்கு அன்பில்லாமை இடங்கொடுத்தது. கடவுளிடமும் சத்தியத்திடமும் அன்பில்லாமல் கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிய பெரும்பான்மையர் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டார்கள். பூமியின்மீது தன்னுடைய சொந்த ராஜ்யத்தை உண்டுபண்ணிக்கொண்ட ஒரு சுயநல மத குருவர்க்கத்தினுடைய அதிகாரத்தின்கீழ் அவர்கள் வந்தார்கள்.—1 கொரிந்தியர் 4:8-ஐ ஒப்பிடுக.

10. கிறிஸ்தவமண்டலத்தில் மத நிலைமை 1918-ல் என்னவாக இருந்தது?

10 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் 1918-ல் துவங்கினபோது, கிறிஸ்தவமண்டல மதப்பிரிவுகளின் குருமார்கள் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் கத்தோலிக்கரையும், புராட்டஸ்டன்டினரையும் ஒருவரையொருவர் கொலை செய்ய தூண்டி, முதல் உலக யுத்தத்தை வெளிப்படையாக ஆதரித்துக்கொண்டிருந்தனர். (1 பேதுரு 4:17) நிக்கொலாயின் மதப் பிரிவினையைச் சேர்ந்தவர்கள் செய்துகொண்டிருந்ததை வெறுத்த எபேசிய சபையைப் போலில்லாமல், நீண்ட காலமாக கிறிஸ்தவமண்டல மதங்களில் முரண்பாடான, கடவுளுக்கு எதிரான மத கோட்பாடுகள் முழுவதுமாக ஊடுருவியிருந்தன. இயேசு தம்முடைய சீஷர்கள் இந்த உலகத்தின் பாகமாய் இருக்க மாட்டார்கள் என்று சொன்னார், ஆனால் அதன் குருமார்களோ அதில் முழு பங்கைக் கொண்டிருக்கிறார்கள். (யோவான் 15:17-19) அவர்களின் சபைகளுக்கு பைபிளின் பொருளாகிய கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிவில்லாததினால், அவை வேதப்பூர்வமான சத்தியத்தைப் பிரகாசிக்கிற விளக்குத்தண்டுகளாக இல்லை, யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தின் பாகமாகவுங்கூட அவற்றின் அங்கத்தினர் இல்லை. அவற்றின் முக்கியமான ஆண்களும் (பெண்களும்) நட்சத்திரங்களாக அல்ல, ஆனால் “அக்கிரமக்கார”னின் அங்கத்தினராக வெளிப்படுத்தப்பட்டார்கள்.—2 தெசலோனிக்கேயர் 2:3, NW; மல்கியா 3:1-3.

11. (அ) எபேசியருக்குச் சொன்ன இயேசுவின் வார்த்தைகளை 1918-ல் உலகக் காட்சியிலிருந்த எந்தக் கிறிஸ்தவத் தொகுதி நடைமுறையில் செயல்படுத்தியது? (ஆ) யோவான் வகுப்பார் 1919 முதற்கொண்டு என்ன செய்தார்கள்?

11 ஆனால் யோவான் வகுப்பார், யெகோவாவின் பேரிலான அன்போடும் அவரை வைராக்கியத்தோடு சேவிக்கத் தூண்டிய சத்தியத்தின் பேரிலான அன்போடும் முதல் உலக யுத்தத்தின் குழப்பகரமான நாட்களிலிருந்து வெளியேறி வந்தனர். உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முதல் தலைவரான சார்லஸ் T. ரசலினுடைய மரணத்தைத் தொடர்ந்து 1916-ல் உண்மையில் அவரை வணக்கத்திற்குரியவராக செய்வதன் மூலம் மதப் பிரிவினைகளைக் கொண்டுவர முயற்சி செய்தவர்களை அவர்கள் தடுத்தார்கள். துன்புறுத்தலினாலும் இன்னல்களினாலும் சிட்சிக்கப்பட்டு, இந்தக் கிறிஸ்தவத் தொகுதி, “நன்றாய் செய்தாய்” என்ற தீர்ப்பு அவர்களுடைய எஜமானிடத்திலிருந்து தெளிவாய் பெற்று, அவருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்க அழைக்கப்பட்டார்கள். (மத்தேயு 25:21, 23, NW) உலக சம்பவங்களின் போக்கிலிருந்தும், அவர்களுடைய சொந்த அனுபவங்கள் மூலமாகவும் ராஜ்ய அதிகாரத்தில் காணக்கூடாத வகையில் இயேசு வந்திருப்பதைக் குறிக்கிற அடையாளத்தின் நிறைவேற்றத்தை அவர்கள் கண்டுகொண்டார்கள். 1919 முதற்கொண்டு, இயேசு சொன்ன இந்தப் பெரிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் பங்குகொள்ள முன்சென்றார்கள்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 6:9, 10; 24:3-14) யெகோவாவின் பேரில்கொண்ட அன்பு எந்த விதத்திலும் குறைவுபட்டிருந்திருந்தால், அந்தச் சமயம் முதற்கொண்டு அதில் கொழுந்துவிட்டெரியச் செய்யப்பட்டார்கள்.

12. (அ) என்ன அழைப்பு 1922-ல் நடைப்பெற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் விடுக்கப்பட்டது? (ஆ) எந்தப் பெயரை உண்மைக் கிறிஸ்தவர்கள் 1931-ல் தழுவிக்கொண்டார்கள், மேலும் எதற்கு அவர்கள் மனந்திரும்பினார்கள்?

12 செப்டம்பர் 5-13, 1922-ல் அ.ஐ.மா., ஒஹாயோ, சீடர் பாய்ன்டில் 18,000 கிறிஸ்தவர்கள் ஆஜராயிருந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டில் இந்த அழைப்பு கொடுக்கப்பட்டது: “மகா உன்னதமானவரின் குமாரரே! களத்துக்குத் திரும்புங்கள். . . . யெகோவா கடவுள் என்றும் இயேசு ராஜாதி ராஜனுமாக, கர்த்தாதி கர்த்தருமாக இருக்கிறார் என்றும் உலகம் அறிய வேண்டும். . . . ஆகவே, ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரம் பண்ணுங்கள், விளம்பரம் பண்ணுங்கள், விளம்பரம் பண்ணுங்கள்.” யெகோவாவின் அருமையான பெயர் அதிக பிரசித்தமாக்கப்பட்டது. அ.ஐ.மா.-வில் ஒஹாயோ, கொலம்பஸ்-ல் நடந்த மாநாட்டில் கூடின இந்தக் கிறிஸ்தவர்கள் ஏசாயா தீர்க்கதரிசனத்தில் கடவுளால் சொல்லப்பட்ட—யெகோவாவின் சாட்சிகள்—என்ற பெயரை தழுவிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தனர். (ஏசாயா 43:10, 12) இந்த அமைப்பின் முக்கிய பத்திரிகையின் பெயர், மார்ச் 1, 1939 பிரதி முதல் காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்பதாக மாற்றப்பட்டது. இப்படியாக நம்முடைய சிருஷ்டிகருக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் முதன்மையான கனம் கொடுக்கப்பட்டது. யெகோவாவினிடமாக புதுப்பிக்கப்பட்ட அன்புடன், யெகோவாவின் சாட்சிகள், அவருடைய மகத்தான பெயரையும் ராஜ்யத்தையும் கடந்தக் காலத்தில் கனம்பண்ணவும் மகிமைப்படுத்தவும் தவறியதற்காக மனந்திரும்பியிருக்கிறார்கள்.—சங்கீதம் 106:6, 47, 48.

“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு”

13. (அ) எபேசியர் ‘ஜெயங்கொண்டால்’ என்ன ஆசீர்வாதங்கள் அவர்களுக்குக் காத்துக்கொண்டிருந்தன? (ஆ) எபேசிய கிறிஸ்தவர்கள் எப்படி ‘ஜெயங்கொள்ளுவார்கள்’?

13 கடைசியாக அவருடைய மற்ற செய்திகளிலும் செய்கிறது போலவே, உண்மைத்தன்மைக்கு வெகுமதியை இயேசுவின் மூலம் கடவுளுடைய ஆவி தெரியப்படுத்துவதற்கு இயேசு கவனம் செலுத்துகிறார். எபேசியர்களுக்கு அவர் இவ்வாறு கூறுகிறார்: “ஆவியானவர் சபைக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீஸின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.” (வெளிப்படுத்துதல் 2:7) இது இயேசுவிடமிருந்து வரவில்லை, ஆனால் ஈடற்ற உன்னத பேரரசர் யெகோவாவிடமிருந்து தாமே அவருடைய பரிசுத்த ஆவி அல்லது செயல்நடப்பிக்கும் சக்தியின் மூலமாக வருகிறது என்று அறிந்தவர்களாக, கேட்கும் காதுள்ளவர்கள் அந்த இன்றியமையாத செய்திக்குக் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் எப்படி ‘ஜெயங்கொள்ளுவார்கள்’? இயேசுவின் அடிச்சுவடுகளைக் கவனமாக பின்பற்றிச் செல்லுவதன் மூலம். அவர் மரணம் வரை உத்தமத்தைக் காத்துக்கொண்டார், ஆகையால் அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”—யோவான் 8:28; 16:33; 1 யோவான் 5:4-ஐயுங்கூட காண்க.

14. இயேசு குறிப்பிட்ட ‘தேவனுடைய பரதீஸ்’ எதை அர்த்தப்படுத்த வேண்டும்?

14 பூமிக்குரிய பரதீஸில் வாழும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு இல்லாதபடியால் அந்த எபேசியர்களைப் போன்ற அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு “தேவனுடைய பரதீஸின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்” புசிக்கும் பரிசு எவ்வாறு கொடுக்கப்படுகிறது? இது பூமியில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட பரதீஸாக இருக்க முடியாது. ஏனெனில் எபேசு சபையில் இருந்தவர்கள் உட்பட அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்கள், பரலோக சீனாய் மலையில் ஆவி புத்திரர்களாக ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய மனிதவர்க்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். (எபேசியர் 1:5; வெளிப்படுத்துதல் 14:1, 4) ஆகையால், இந்த ஜெயங்கொள்ளுகிறவர்கள் சுதந்தரித்திருக்கிற பரலோகத்திய தோட்டம்போன்ற பிரதேசம் இங்கே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அங்கே, “தேவனுடைய பரதீஸில்,” ஆம், யெகோவாவின் சமூகத்தில் தானே, அவர்கள் ஜீவவிருட்சத்திலிருந்து புசிப்பது இங்கே அடையாளப்படுத்தப்படுகிறதுபோல, சாவாமை கொடுக்கப்பட்ட இந்தத் ஜெயங்கொள்ளுகிறவர்கள் தொடர்ந்து நித்தியமாக வாழ்வார்கள்.

15. இயேசு ஜெயங்கொள்ளுவதற்குக் கொடுத்த உற்சாகம் ஏன் இன்று திரள்கூட்டத்திற்கு முக்கிய அக்கறைக்குரியதாக இருக்கிறது?

15 ஆகவே அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 பேருக்கு உண்மை தவறாமல் பூமியில் ஆதரவு கொடுப்பவர்களைப் பற்றி என்ன? தோழர்களாகிய இந்தச் சாட்சிகளடங்கிய ஒரு திரள்கூட்டத்தாருங்கூட ஜெயித்து வருகிறார்கள். ஆனால் ஒரு பூமிக்குரிய பரதீஸில் பிரவேசிப்பதில் அவர்களுடைய நம்பிக்கைச் சார்ந்திருக்கிறது, அங்கே, “ஜீவத்தண்ணீருள்ள நதியிலிருந்து” குடித்து, அந்த நதியின் இருகரையிலுமுள்ள “விருட்சத்தின் இலைகளிலிருந்து” ஆரோக்கியமடைவார்கள். (வெளிப்படுத்துதல் 7:4, 9, 17; 22:1, 2) நீங்கள் இந்தத் தொகுதியில் ஒருவர் என்றால், நீங்களும் யெகோவாவுக்கு உங்கள் கனிவான அன்பைத் தெரிவித்து, விசுவாசத்தில் ஜெயம் கொள்வீர்களாக. இவ்விதமாக பரதீஸான பூமியில் நித்திய ஜீவனின் சந்தோஷத்தை அடையலாம்.—1 யோவான் 2:13, 14-ஐ ஒப்பிடுக.

[அடிக்குறிப்பு]

a கள்ள அப்போஸ்தலர்கள் தோன்றுவதைக் குறித்து சரித்திரப்பூர்வமான விவரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற கைப்புத்தகம், பக்கங்கள் 37-44-ஐக் காண்க.

[கேள்விகள்]

[பக்கம் 36-ன் பெட்டி]

யெகோவாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் அன்புடன்கூடிய துதி

யெகோவாவின் சாட்சிகள் 1905-ல் வெளியிடப்பட்ட பாட்டு புத்தகத்தில், யெகோவா தேவனுக்குத் துதியை ஏறெடுக்கிற பாடல்களுடன் ஒப்பிட்டால், இயேசுவைத் துதிக்கிற பாடல்கள் அதில் இருமடங்கு இருந்தன. 1928-ல் வெளியிட்ட அவர்களுடைய பாட்டு புத்தகத்தில், இயேசுவைப் புகழுகிற பாடல்களும் யெகோவாவைப் புகழுகிற பாடல்களும் ஒரே எண்ணிக்கையாக இருந்தன. ஆனால் சமீபத்தில் 1984-ல் வெளியிடப்பட்ட பாட்டு புத்தகத்தில், யெகோவாவை கனம்செய்யும் பாடல்கள், இயேசுவை கனம்செய்யும் பாடல்களைவிட நான்கு மடங்கு அதிகமாயிருக்கின்றன. இது இயேசுதாமே சொன்ன வார்த்தைகளோடு ஒத்திசைந்திருக்கிறது: “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.” (யோவான் 14:28) யெகோவாவுக்கான அன்பு முதலிடத்தில் இருக்க வேண்டும். இயேசுவின் பேரில் ஆழ்ந்த அன்பும், அவருடைய மதிப்புவாய்ந்த பலிக்கும் கடவுளுடைய பிரதான ஆசாரியராகவும் அரசராகவும் வகிக்கும் அவருடைய பதவிக்கு மதித்துணர்வும் அதோடுகூட சேர்ந்து வரவேண்டும்.

[பக்கம் 34-ன் அட்டைப்படம்]

ஆலோசனைக் கொடுப்பதில் இயேசுவின் மாதிரி

(இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தின் அதிகாரங்களும் வசனங்களும்)

சபைக்குசெய்தி ஆலோசனைக்கொடுக்கஅதிகாரம் அறிமுகப்போற்றுதல் பிரச்சினையைதெளிவாககண்டறிதல் திருத்தப்படுதல்மற்றும்/அல்லதுஉற்சாகப்படுத்தப்படுதல் விளையும்ஆசீர்வாதங்கள்

எபேசு 2:1 2:2, 3 2:4 2:5, 6 2:7

சிமிர்னா 2:8 2:9 — 2:10 2:11

பெர்கமு 2:12 2:13 2:14, 15 2:16 2:17

தியத்தீரா 2:18 2:19 2:20, 21 2:24, 25 2:26-28

சர்தை 3:1 — 3:1, 2 3:3, 4 3:5

பிலதெல்பியா 3:7 3:8 — 3:8-11 3:12

லவோதிக்கேயா 3:14 — 3:15-17 3:18-20 3:21