Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு வியப்பூட்டும் இரகசியம் தெளிவாக்கப்பட்டது

ஒரு வியப்பூட்டும் இரகசியம் தெளிவாக்கப்பட்டது

அதிகாரம் 34

ஒரு வியப்பூட்டும் இரகசியம் தெளிவாக்கப்பட்டது

1. (அ) பெரிய வேசியையும் அவளுடைய அச்சந்தரும் தோற்றமுடைய சூழமைவையும் கண்டபோது யோவான் எவ்வாறு பிரதிபலிக்கிறார், ஏன்? (ஆ) தீர்க்கதரிசன காட்சியின் நிறைவேற்றமாக காரியங்கள் வெளிப்படுகையில் யோவான் வகுப்பார் எவ்வாறு இன்று பிரதிபலிக்கின்றனர்?

 பெ ரிய வேசியையும் அவளுடைய அச்சந்தரும் தோற்றமுடைய சூழமைவையும் யோவான் கண்டபோது அவருடைய பிரதிபலிப்பென்ன? அவர்தாமே பின்வருமாறு பதிலளிக்கிறார்: “அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.” (வெளிப்படுத்துதல் 17:6ஆ) அப்படிப்பட்ட ஒரு காட்சியை வெறும் மனித கற்பனைகள் ஒருபோதும் மனக்கண் முன் கொண்டுவரமுடியாது. இருந்தபோதிலும், அங்கே—வனாந்தர வெளியில்—ஒழுக்கங்கெட்ட வேசி அச்சமூட்டுகிற சிவப்புநிற மூர்க்க மிருகத்தின்மீது அமர்ந்திருக்கிறாள்! (வெளிப்படுத்துதல் 17:3) தீர்க்கதரிசனக் காட்சியின் நிறைவேற்றமாக காரியங்கள் வெளிப்படுகையில் இன்று யோவான் வகுப்பாருங்கூட அதிக வியப்போடு நோக்குகின்றனர். உலக ஜனங்கள் அதைக் காணமுடியுமென்றால் அவர்கள் ‘உண்மையென நம்பமுடியாதது!’ என வியந்துரைப்பார்கள், உலகத் தலைவர்கள் ‘கற்பனைக்கெட்டாதது!’ என எதிரொலிப்பார்கள். ஆனால் நம் நாளில் இந்தத் தரிசனம் வியப்பதிர்ச்சியூட்டுகிற மெய்ம்மையாக மாறுகிறது. ஏற்கெனவே கடவுளுடைய மக்கள் இந்தத் தரிசனத்தின் நிறைவேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர், தீர்க்கதரிசனம் அதனுடைய அதிர்ச்சியூட்டும் உச்சக்கட்டத்தைச் சென்றடையும் என இது அவர்களுக்கு உறுதியளிக்கிறது.

2. (அ) யோவானின் ஆச்சரியத்தைக் கண்டு தேவதூதன் என்ன சொல்லுகிறார்? (ஆ) யோவான் வகுப்பாருக்கு எது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, இது எவ்வாறு செய்யப்பட்டது?

2 தேவதூதன் யோவானின் ஆச்சரியத்தை கவனிக்கிறார். யோவான் பின்வருமாறு தொடருகிறார்: “அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன் [என்றார்].” (வெளிப்படுத்துதல் 17:7) ஆ, இந்தத் தூதன் இப்போது இரகசியத்தை விளக்குவார்! தரிசனத்தின் பல்வேறு கூறுகளையும் வெளிப்படவிருக்கிற வியப்பூட்டும் காரியங்களையும் ஆச்சரியக் கண்களோடு நோக்கிக்கொண்டிருந்த யோவானிடம் அவர் விவரிக்கிறார். அதேபோன்று, இன்று தேவதூதரின் வழிநடத்துதலின்கீழ் சேவிக்கையில், தீர்க்கதரிசனத்தின் புரிந்துகொள்ளுதல் விழிப்புடனிருக்கும் யோவான் வகுப்பாருக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. “அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” இவை அவ்வாறிருக்கிறதென உண்மையுள்ள யோசேப்பைப் போல நாம் நம்புகிறோம். (ஆதியாகமம் 40:8; தானியேல் 2:29, 30-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) யெகோவா தரிசனத்தின் அர்த்தத்தையும் அது அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தவிருக்கும் விளைவையும் விளக்கும்போது கடவுளுடைய ஜனங்கள் மேடையின் மையத்தில் வைக்கப்பட்டதைப் போன்றிருக்கின்றனர். (சங்கீதம் 25:14) அவர் ஸ்திரீயையும் மூர்க்க மிருகத்தையும் பற்றிய இரகசியத்தை சரியான நேரத்தில் அவர்கள் புரிந்துகொள்வதற்கு வெளிப்படுத்தினார்.—சங்கீதம் 32:8.

3, 4. (அ) N. H. நாரால் 1942-ல் என்ன பொதுப்பேச்சு கொடுக்கப்பட்டது, அது எவ்வாறு சிவப்புநிற மூர்க்க மிருகத்தை அடையாளங்காட்டியது? (ஆ) யோவானிடம் தேவதூதன் பேசிய என்ன வார்த்தைகளை N.H. நார் கலந்தாலோசித்தார்?

3 செப்டம்பர் 18 முதல் 20 வரை, 1942-ல், இரண்டாம் உலக யுத்தம் உச்சக்கட்டத்திலிருக்கையில், ஐக்கிய மாகாணங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்கள் புதிய உலக தேவராஜ்ய மாநாட்டை நடத்தினர். ஒஹையோவிலுள்ள முக்கிய நகரமாகிய கிளீவ்லாண்ட் 50-க்கும் மேற்பட்ட மற்ற மாநாட்டு நகரங்களுடன், 1,29,699 பேர் என்ற உச்சநிலையில் ஆஜராகியிருந்தவர்களுக்காக தொலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்தது. யுத்த கால நிலைமைகள் அனுமதித்த இடங்களில் எல்லாம் உலகம் முழுவதும் மற்ற மாநாடுகள் அதே நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் அப்போது நடந்த யுத்தம் கடவுளுடைய யுத்தமாகிய அர்மகெதோனில் விளைவடையும் என யெகோவாவின் ஜனங்களில் அநேகர் எதிர்பார்த்தனர்; எனவே “சமாதானம்—அது நிலைக்குமா?” என்ற தலைப்பைக் கொண்ட பொதுப்பேச்சு அதிக ஆர்வத்தைத் தூண்டியது. தேசங்களுக்கு முற்றிலும் மாறான ஒன்று காத்துக்கொண்டிருப்பதாக தோன்றுகையில் எவ்வாறு உவாட்ச்டவர் சொஸையிட்டியின் புதிய பிரெஸிடென்ட் N. H. நார் சமாதானத்தைப் பற்றிப் பேசத் துணிந்தார்? a யோவான் வகுப்பார் ‘வழக்கத்துக்கும் அதிகமான கவனத்தைக்’ கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்குச் செலுத்திக்கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.—எபிரெயர் 2:1; 2 பேதுரு 1:19.

4 “சமாதானம்—அது நிலைக்குமா?” என்ற பேச்சு தீர்க்கதரிசனத்தின் மீது என்ன வெளிப்படுத்துதலைக் கொடுத்தது? வெளிப்படுத்துதல் 17:3-ன் சிவப்புநிற மூர்க்க மிருகத்தைச் சர்வதேச சங்கமென தெளிவாகவே அடையாளங்காட்டி, யோவானிடம் சொல்லப்பட்ட தேவதூதனின் பின்வரும் வார்த்தைகளின் அடிப்படையில் அதன் கொந்தளிப்பான போக்கை N. H. நார் தொடர்ந்து கலந்தாலோசித்தார்: “நீ கண்ட [மூர்க்க, NW] மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து [அபிஸ்ஸிலிருந்து, NW] ஏறி வந்து, நாசமடையப்போகிறது.”—வெளிப்படுத்துதல் 17:8அ.

5. (அ) எவ்வாறு அந்த “மூர்க்க மிருகம் . . . இருந்தது,” பிறகு “இப்போது இல்லை”? (ஆ) “சர்வதேச சங்கம் தொடர்ந்து குழியிலேயே இருக்குமா?” என்ற கேள்விக்கு N. H. நார் எவ்வாறு பதிலளித்தார்?

5 “மூர்க்க மிருகம் . . . இருந்தது.” ஆம், 63 தேசங்கள் ஒரு சமயத்திலோ அல்லது வேறொரு சமயத்திலோ பங்கெடுத்தன; ஜனவரி 10, 1920 முதல் சர்வதேச சங்கமாக அது இருந்தது. ஆனால், ஒவ்வொன்றாக ஜப்பான், ஜெர்மனி, மற்றும் இத்தாலி விலகிக்கொண்டன, முன்னாள் சோவியத் யூனியன் சர்வதேச சங்கத்திலிருந்து விலக்கப்பட்டது. செப்டம்பர் 1939-ல் ஜெர்மனியின் நாசி சர்வாதிகாரி இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடங்கி வைத்தார். b உலகத்தில் சமாதானத்தைக் காக்கத் தவறியதால், சர்வதேச சங்கம் உண்மையில் செயலற்ற அபிஸ்ஸிற்குள் தள்ளப்பட்டது. 1942-ல் அது ஒரு காலத்தில் இருந்ததாக மாறியது. இதற்கு முன்பாகவோ அல்லது சில காலம் கழித்தோ அல்ல—ஆனால் அந்த நெருக்கடியான காலத்தின் போதுதானே—தரிசனத்தின் முழு அளவான அர்த்தத்தையும் தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா வெளிப்படுத்தினார்! இந்தத் தீர்க்கதரிசனத்திற்கிசைய புதிய உலக தேவராஜ்ய மாநாட்டில் N. H. நாரால் “மூர்க்க மிருகம் . . . இப்பொழுது இல்லை,” என அறிவிக்க முடிந்தது. “சர்வதேச சங்கம் தொடர்ந்து குழியிலேயே இருக்குமா?,” என்ற கேள்வியை அவர் கேட்டார். வெளிப்படுத்துதல் 17:8-ஐ மேற்கோள்காட்டி “உலக தேசங்களின் கூட்டமைப்பு மீண்டும் எழும்பும்” என அவர் பதிலளித்தார். யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையை மெய்ப்பிக்கும் விதத்தில் அது அவ்வாறே நிரூபித்தது!

அபிஸ்ஸிலிருந்து ஏறிவருதல்

6. (அ) எப்பொழுது சிவப்புநிற மூர்க்க மிருகம் அபிஸ்ஸிலிருந்து ஏறிவந்தது, என்ன புதிய பெயருடன்? (ஆ) ஐக்கிய நாட்டுச் சங்கம் உண்மையில் சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் புதுத் தோற்றமாக ஏன் இருக்கிறது?

6 சிவப்புநிற மூர்க்க மிருகம் உண்மையில் அபிஸ்ஸிலிருந்து ஏறிவந்தது. ஜூன் 26, 1945-ல் அ.ஐ.மா., சான் ஃபிரான்ஸிஸ்கோவில், எக்காள முழக்க பேரொலியோடு ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் சாசனத்தை ஏற்றுக்கொள்ள 50 தேசங்கள் வாக்களித்தன. இந்த அமைப்பு “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்ள வேண்டும்.” சர்வதேச சங்கத்திற்கும் ஐநா-விற்குமிடையே அநேக ஒப்புமைகள் இருந்தன. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “முதல் உலக யுத்தத்திற்குப் பின் அமைக்கப்பட்ட சர்வதேச சங்கத்துடன் ஐநா சில வழிகளில் ஒப்புமையைக் கொண்டிருக்கிறது . . . ஐநா-வை ஏற்படுத்திய அநேக தேசங்கள் சர்வதேச சங்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச சங்கத்தைப் போலவே தேசங்களுக்கிடையில் சமாதானத்தைக் காத்துக்கொள்ள உதவுவதற்கே ஐநா ஸ்தாபிக்கப்பட்டது. ஐநா-வின் முக்கிய அமைப்புகள் சர்வதேச சங்கத்துடையதைப் போன்றிருக்கின்றன.” எனவே ஐநா உண்மையில் சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் புதுத் தோற்றமாகும். அது சர்வதேச சங்கத்தின் 63 உறுப்பினர்களைக் காட்டிலும் மிக அதிகமாக சுமார் 190 தேசங்களைக் கொண்டிருக்கிறது; அதன் முன்னோடியைக் காட்டிலும் விரிவான பொறுப்புக்களையும் அது ஏற்றிருக்கிறது.

7. (அ) மீண்டும் எழுந்த சிவப்புநிற மூர்க்க மிருகத்தைக் கண்டு எவ்வழியில் பூமியின் குடிகள் ஆச்சரியத்துடன் நோக்கியிருக்கின்றனர்? (ஆ) ஐநா-வின் என்ன இலக்கு பிடியிலிருந்து நழுவியிருக்கிறது, இதன் சம்பந்தமாக அதன் பொதுச் செயலர் என்ன சொன்னார்?

7 முதலில் அதிக நம்பிக்கைகள் ஐநா-விற்காக வெளிப்படுத்தப்பட்டன. இது தேவதூதரின் பின்வரும் வார்த்தைகளின் நிறைவேற்றமாக இருந்தது: “உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:8ஆ) நியூ யார்க்கில், கிழக்கு ஆற்றில் அமைந்திருக்கும் அதன் கவர்ச்சியான தலைமையகத்திலிருந்து செயல்படும் இந்தப் புதிய பேருருவக் கட்டிடத்தைப் பூமியின் குடிகள் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். ஆனால் உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் ஐநா-வின் பிடியிலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில்—MAD (Mutual Assured Destruction) என்ற சுருக்கக் குறியீடைக் கொண்டிருக்கும்—“பரஸ்பர உறுதியான அழி”வின் அச்சுறுத்தலினால் மட்டுமே உலக சமாதானம் காக்கப்பட்டது மற்றும் அணுஆயுதப் போட்டி பேரளவாக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாட்டின் ஏறக்குறைய 40 ஆண்டுகள் முயற்சிக்குப் பின், அதன் அப்போதைய பொதுச் செயலர் ஹேவியர் பெரஸ் டி குவெயார் 1985-ல் பின்வருமாறு புலம்பினார்: “நாம் வெறிபிடித்த ஆட்கள் கொண்ட மற்றொரு யுகத்தில் வாழ்கிறோம், இதைக் குறித்து என்ன செய்வதென்று நாம் அறியாதிருக்கிறோம்.”

8, 9. (அ) உலகப் பிரச்சினைகளுக்கு ஏன் ஐநாவிடம் பதில்களில்லை, கடவுளுடைய தீர்ப்பின்படி சீக்கிரத்தில் அதற்கு என்ன சம்பவிக்கும்? (ஆ) கடவுளுடைய “ஜீவபுஸ்தகத்தில்” ஏன் ஐநா-வின் ஸ்தாபகர்கள் மற்றும் அதை ஆச்சரியத்தோடு நோக்குபவர்களின் பெயர்கள் பதிவுசெய்யப்படவில்லை? (இ) யெகோவாவுடைய ராஜ்யம் எதை வெற்றிகரமாக நிறைவேற்றும்?

8 ஐநா பதில்களைக் கொண்டில்லை. ஏன்? ஏனென்றால் மனிதவர்க்கம் முழுவதற்கும் உயிர் கொடுத்தவர் ஐநா-விற்கு உயிர் கொடுத்தவரல்ல. அதன் வாழ்நாட்காலம் குறுகியது, கடவுளுடைய தீர்ப்பின்படி “அது . . . நாசமடையப்போகிறது.” ஐநா-வின் ஸ்தாபகர்கள் மற்றும் அதை ஆச்சரியத்தோடு நோக்குபவர்களின் பெயர்கள் கடவுளுடைய ஜீவபுஸ்தகத்தில் பதிவுசெய்யப்படவில்லை. மனிதர்கள் மூலமல்ல, ஆனால் தம்முடைய கிறிஸ்துவின் ராஜ்யத்தின் மூலம் நிறைவேற்றப்போவதாக யெகோவா தேவன் அறிவித்ததை பாவமுள்ள, அழியும் தன்மையுள்ள ஆட்களாக, அநேகர் கடவுளுடைய பெயரைக் கேலிசெய்த மனிதர்களாக, எவ்வாறு ஐநா-வின் மூலம் அடையப்பெறமுடியும்?—தானியேல் 7:27; வெளிப்படுத்துதல் 11:15.

9 கர்த்தத்துவத்துக்கு முடிவிராத சமாதானப் பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வரக்கூடிய கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்திற்கு இந்த ஐநா உண்மையில் தூஷணமானதாக, போலியானதாக இருக்கிறது. (ஏசாயா 9:6, 7) ஐநா தற்காலிகமாக ஒருவித சமாதானத்தைக் கொண்டு ஒன்றுசேர்த்தாலும் சீக்கிரத்தில் யுத்தங்கள் திடீரென்று மீண்டும் எழும். இது பாவமுள்ள மனிதனின் சுபாவத்தில் இருக்கிறது. “உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் [அவர்கள்] பேரெழுதப்பட்”டில்லை. கிறிஸ்துவினால் ஆளப்படும் யெகோவாவின் ராஜ்யம் நித்திய சமாதானத்தை பூமியில் ஏற்படுத்துவதோடுகூட கடவுளுடைய ஞாபகத்திலுள்ள மரித்திருக்கும் நீதிமான்களையும் அநீதிமான்களையும் இயேசுவினுடைய மீட்கும்பலியின் அடிப்படையில் உயிர்த்தெழுப்பும். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) சாத்தான் மற்றும் அவனுடைய வித்தின் தாக்குதல்களின் மத்தியிலும் நிலைத்திருந்த ஒவ்வொருவரையும், மற்றும் இன்னும் தங்கள் கீழ்ப்படிதலைக் காண்பிக்கவிருக்கும் மற்றவர்களையும் இது உட்படுத்தும். தெளிவாகவே, விடாப்பிடியாக மகா பாபிலோனைப் பின்பற்றுபவர்களின் பெயர்களையோ மூர்க்க மிருகத்தைத் தொடர்ந்து வணங்கும் எவருடைய பெயரையோ கடவுளுடைய ஜீவபுஸ்தகம் ஒருபோதும் கொண்டிராது.—யாத்திராகமம் 32:33; சங்கீதம் 86:8-10; யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 16:2; 17:5.

சமாதானமும் பாதுகாப்பும் —ஒரு பயனற்ற நம்பிக்கை

10, 11. (அ) ஐநா 1986-ல் என்ன அறிவித்தது, அதற்கு என்ன பிரதிபலிப்பிருந்தது? (ஆ) எத்தனை “மதக் குடும்பங்கள்” சமாதானத்திற்காக ஜெபிப்பதற்கு இத்தாலியிலுள்ள அஸிஸியில் கூடிவந்தனர், இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு கடவுள் பதிலளிக்கிறாரா? விளக்கவும்.

10 மனிதவர்க்கத்தின் நம்பிக்கைகளை அழியாது காக்கும் முயற்சியில் “மனிதவர்க்கத்தின் சமாதானத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு” என்ற பொருளில் ஐநா 1986-ஐ “சர்வதேச சமாதான ஆண்டு” என அறிவித்தது. ஒரு வருடத்திற்காவது போரிடும் தேசங்கள் தங்கள் படைக்கலங்களை உபயோகிக்காமலிருக்க கேட்டுக்கொள்ளப்பட்டன. அவற்றின் பிரதிபலிப்பென்னவாயிருந்தது? சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 1986-ல் நடந்த யுத்தங்களில் மட்டுமே அதிகபட்சமாக ஐம்பது லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்! சில விசேஷ நாணயங்களும் ஞாபகார்த்த அஞ்சல்தலைகளும் வெளியிடப்பட்ட போதிலும்கூட, அந்த வருடத்தில் சமாதானத்தின் இலட்சியத்தை அடைய அநேக தேசங்கள் ஒன்றும் செய்யவில்லை. என்றபோதிலும், ஐநா-வுடன் எப்போதும் நல்ல தொடர்பை வைத்துக்கொள்ள விரும்பும் உலக மதங்கள், அந்த வருடத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்த முற்பட்டன. ஜனவரி 1, 1986-ல் போப் ஜான் பால் II ஐநா-வின் வேலையைப் புகழ்ந்து அந்தப் புதிய வருடத்தை சமாதானத்திற்காக அர்ப்பணித்தார். அக்டோபர் 27 அன்று அவர் அநேக உலக மதங்களின் தலைவர்களை இத்தாலியிலுள்ள அஸிஸியில் சமாதானத்திற்காக ஜெபிப்பதற்குக் கூடிவரச் செய்தார்.

11 இப்படிப்பட்ட சமாதான ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கிறாரா? எந்தக் கடவுளிடத்தில் அந்த மதத் தலைவர்கள் ஜெபித்தனர்? நீங்கள் அவர்களைக் கேட்டால், ஒவ்வொரு குழுவினரும் வித்தியாசமான பதிலைக் கொடுப்பர். பல வித்தியாசமான வழிகளில் செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கேட்டு பலனளிப்பதற்கு லட்சக்கணக்கான கடவுட்களுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் இருக்கிறதா? அதில் பங்குகொண்டவர்களில் அநேகர் கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவத்தை வழிபட்டார்கள். c புத்தமதத்தினர், இந்துக்கள், இன்னும் மற்றவர்கள் கணக்கற்ற கடவுட்களிடம் ஜெபத்தைப் பண்ணினர். மொத்தத்தில், ஆங்கலிக்கன் தலைமைகுரு, புத்தமதத்தின் தல்லை லாமா, ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மெட்ரோபோலிட்டன், டோக்கியோவின் ஷிண்டோ ஆலய கூட்டமைப்பின் தலைவர், ஆப்பிரிக்க ஆன்மவாதிகள், பறவையிறகுகளின் தொகுதியைத் தலையலங்காரமாக கொண்ட இரண்டு அமெரிக்க இந்தியர்கள் போன்ற பிரதிநிதிகளைக் கொண்ட 12 “மதக் குடும்பங்கள்” கூடிவந்தன. குறைவாகச் சொன்னால், தொலைக்காட்சி விளம்பர ஆற்றலெல்லைப் பார்வையாளர்களுக்கு அது வண்ணக்கலவையான குழுவாகவாவது இருந்தது. ஒருசமயத்தில், ஒரு குழுவினர் இடைவிடாமல் 12 மணிநேரங்கள் ஜெபித்தனர். (லூக்கா 20:45-47-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆனால், அந்த ஜெபங்களில் ஏதேனும் அங்கே கூடிவந்திருந்தவர்களுக்கு மேலாக இருந்த மழை மேகத்தை ஊடுருவிச் சென்றனவா? இல்லை, பின்வரும் காரணங்களின் நிமித்தமே:

12. என்ன காரணங்களுக்காக உலக மதத் தலைவர்களின் சமாதானத்திற்கான ஜெபங்களுக்கு கடவுள் பதிலளிக்கவில்லை?

12 ‘யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக் கொண்டு நடப்பவர்களுக்கு’ நேர் எதிர்மாறாக, பைபிளில் மூலவாக்கியத்தில் ஏறக்குறைய 7,000 தடவைகள் காணப்படும் யெகோவா என்ற பெயர்கொண்ட ஜீவனுள்ள தேவனிடம் ஒரு மதத்தினர்கூட ஜெபிக்கவில்லை. (மீகா 4:5, NW; ஏசாயா 42:8, 12) d ஒரு குழுவாக, அவர்கள் இயேசுவின் நாமத்தில் கடவுளை அணுகவில்லை, அவர்களில் பெரும்பாலர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதுகூட இல்லை. (யோவான் 14:13; 15:16) ஐநா-வை அல்ல, ஆனால் கடவுளுடைய வரவிருக்கும் ராஜ்யமே மனிதவர்க்கத்துக்கு மெய்யான நம்பிக்கை என்பதை உலகமுழுவதும் அறிவிப்பதாகிய நம்முடைய நாளுக்கான கடவுளுடைய சித்தத்தை அவர்களில் எவரும் செய்வதில்லை. (மத்தேயு 7:21-23; 24:14; மாற்கு 13:10) 20-ம் நூற்றாண்டின் இரண்டு உலக யுத்தங்கள் உட்பட பெரும் பகுதியான அவர்களுடைய மத அமைப்புகள் சரித்திரத்தில் இரத்தக் கறைபடிந்த யுத்தங்களில் ஈடுபட்டிருந்தன. இப்படிப்பட்டவர்களிடம் கடவுள் பின்வருமாறு சொல்கிறார்: “நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.”—ஏசாயா 1:15; 59:1-3.

13. (அ) சமாதானத்திற்கான அழைப்பில் ஐநா-வுடன் உலகத்தின் மதத் தலைவர்கள் சேர்ந்துகொள்வார்கள் என்பது ஏன் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது? (ஆ) தெய்வீகமாக முன்னறிவிக்கப்பட்ட எந்த உச்சக்கட்டத்தில் சமாதானத்திற்கான கூக்குரல் முடிவடையும்?

13 மேலுமாக, இந்தச் சமயத்தில் உலகத்தின் மதத் தலைவர்கள் ஐக்கிய நாட்டுச் சங்கத்துடன் சேர்ந்துகொண்டு சமாதானத்திற்காக அழைப்புக் கொடுப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. முக்கியமாக அவர்களின் அநேக ஆட்கள் மதத்தை விட்டுச் செல்லும் இந்த நவீன யுகத்தில் தங்களுடைய சொந்த நலனுக்காகவே ஐநா-வின் மீது தங்கள் செல்வாக்கைச் செலுத்த விரும்புவார்கள். பூர்வ இஸ்ரவேலிலிருந்த உண்மையற்ற தலைவர்களைப் போலவே அவர்கள் “சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம்,” என்று சொல்கின்றனர். (எரேமியா 6:14) உச்சக்கட்டத்தை ஆதரிக்கும்விதமாக சமாதானத்திற்கான அவர்களுடைய கூக்குரல் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் சம்பந்தமாக அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு தீர்க்கதரிசனமுரைத்தார்: “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாள் வரு[ம்] . . . சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.”—1 தெசலோனிக்கேயர் 5:2, 3.

14. எந்த விதத்தில் ‘சமாதானம் பாதுகாப்பிற்கான’ கூக்குரல் எழும்பக்கூடும், ஒருவர் அதால் தவறாக வழிநடத்தப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம்?

14 சமீப வருடங்களில் மனிதர்களின் பல்வேறு திட்டங்களை விவரிக்க, ‘சமாதானம், பாதுகாப்பு’ என்ற சொற்றொடரை அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். உலகத் தலைவர்களால் செய்யப்படும் அத்தகைய முயற்சிகள், 1 தெசலோனிக்கேயர் 5:3-ல் சொல்லப்பட்டிருப்பது நிறைவேற ஆரம்பித்துவிட்டதைக் குறிக்கிறதா? அல்லது, உலகளவில் கவனத்தைக் கவரும் வகையில் சம்பவிக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டும் பவுல் குறிப்பிட்டுக் காட்டினாரா? பொதுவாக பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின பின்னர் அல்லது நிறைவேறி வரும்போதுதான் அவை முழுவதுமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. எனவே நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயத்தில், தேசங்கள் என்னதான் சமாதானம் பாதுகாப்பை நிலைநாட்டியதாகத் தோன்றினாலும், அடிப்படையில் எதுவும் மாறியிருக்காது என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். தன்னலம், பகை, குற்றச்செயல், குடும்பப் பிளவுகள், ஒழுக்கக்கேடு, வியாதி, துன்பம், மரணம் ஆகியவை இன்னும் இருக்கவே செய்யும். எனவேதான் உலக சம்பவங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதற்கு நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருந்து, கடவுளுடைய வார்த்தையிலுள்ள தீர்க்கதரிசன எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்த்து வந்தால், ‘சமாதானம் பாதுகாப்பு’ சம்பந்தமான எந்த அறிவிப்பும் உங்களை தவறாக வழிநடத்த வேண்டியதில்லை.—மாற்கு 13:32-37; லூக்கா 21:34-36.

[அடிக்குறிப்புகள்]

a J. F. ரதர்ஃபர்டு ஜனவரி 8, 1942-ல் மரித்தார்; N. H. நார் அவருக்குப் பின் உவாட்ச்டவர் சொஸைட்டியின் பிரெஸிடென்ட்டாக ஆனார்.

b நவம்பர் 20, 1940-ல் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஹங்கேரி ‘புதிய சர்வதேச சங்கத்திற்காக’ கையொப்பமிட்டன, அதைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பின், மத சமாதானத்திற்காகவும் புதிய ஒழுங்குக்காகவும் வாடிகன் பூசையையும் ஜெபத்தையும் ஒலிபரப்பியது. அந்தப் “புதிய சர்வதேச சங்கம்” ஒருபோதும் நிறுவப்படவில்லை.

c இந்தத் திரித்துவக் கோட்பாடு சூரியக்கடவுளாகிய ஷமாஷ், சந்திரக் கடவுளாகிய சின், நட்சத்திரக் கடவுளாகிய இஸ்தார் மூன்றும் சேர்ந்து மும்மைக் கடவுளாக வணங்கப்பட்ட பூர்வ பாபிலோனிலிருந்து வந்தது. எகிப்து ஒசிரிஸ், இஸ்ஸிஸ், ஹோரஸ் என்ற அதே மாதிரியைப் பின்பற்றினது. அசீரியாவின் பிரதான கடவுளாகிய அஷூருக்கு மூன்று தலைகள் உள்ளதாக வருணிக்கப்படுகிறது. அதே மாதிரியைப் பின்பற்றுவதாக, கத்தோலிக்க சர்ச்சுகளில் கடவுள் மூன்று தலைகளைக் கொண்ட சிலைகளில் காண்பிக்கப்படுகிறார்.

d யெகோவா தேவன் “ஒப்புயர்வற்ற கடவுளாக அறியப்பட்டு யெகோவாவின் சாட்சிகளால் வணங்கப்பட்டு வரும் ஒரே கடவுளாக” இருக்கிறார் என 1993-ன் வெப்ஸ்டரின் மூன்றாவது புதிய சர்வதேச அகராதி (ஆங்கிலம்) சொற்பொருள் விளக்கமளிக்கிறது.

[கேள்விகள்]

[பக்கம் 250-ன் பெட்டி]

“சமாதான” முரணுரை

ஐநா-வினால் 1986 சர்வதேச சமாதான ஆண்டாக அறிவிக்கப்பட்டபோதிலும், அதிக ஆபத்தான படைக்கலப் போட்டியின் வேகம் அதிகரித்தது. உலக இராணுவம் மற்றும் சமூக செலவு 1986 என்ற ஆங்கிலப் புத்தகம் பின்வரும் விளக்கத்தை மிகைப்படுத்தாமல் கொடுக்கிறது:

1986-ல் உலக இராணுவ செலவுகள் 90 கோடி டாலரை எட்டின.

ஒரு மணிநேர உலக இராணுவ செலவு, தடுக்க முடிந்த தொற்று நோயால் வருடத்திற்கு 35 லட்சம் என மரித்த ஆட்களுக்குத் தொற்றுநோய்களிலிருந்து தடைகாப்பு அளிக்க போதுமானதாக இருந்திருக்கும்.

உலகம் முழுவதிலும், ஐந்தில் ஒருவர் கொடுமையான வறுமையில் வாழ்ந்தார். உலகம் படைக்கலங்களுக்காக இரண்டு நாட்களுக்குச் செய்த செலவைக்கொண்டு பசியில் துன்பப்படும் எல்லா மக்களையும் ஒரு வருடத்திற்கு போஷிக்க முடிந்திருக்கும்.

உலகின் அணுஆயுதங்களின் மொத்த சேமிப்பிலுள்ள வெடிக்கும் ஆற்றல் செர்நோபிள் வெடிப்பின் ஆற்றலைக் காட்டிலும் 16,00,00,000 மடங்கு மிக அதிகமாக இருந்தது.

வெடிக்கும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டானது 1945-ல் ஹிரோஷிமாவில் விழுந்த குண்டைக் காட்டிலும் 500 மடங்கு அதிக ஆற்றல் வாய்ந்ததாக இருந்திருக்கக்கூடும்.

அணு படைக்கலச் சாலை பத்து லட்சம் ஹிரோஷிமாக்களுக்கு இணையானதைக் காட்டிலும் அதிகத்தைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் 3 கோடியே 80 லட்சம் ஆட்கள் மரித்தபோது வெளிப்படுத்தப்பட்ட வெடிக்கும் ஆற்றலைக் காட்டிலும் 2,700 மடங்கை அவை பிரதிநிதித்துவம் செய்தன.

யுத்தங்கள் அதிக அடிக்கடி நிகழ்வதாயும் அதிக சாவுக்கேதுவானதாகவும் ஆகியிருந்தன. யுத்த மரண எண்ணிக்கைகள் 18-ம் நூற்றாண்டில் 44 லட்சமாகவும், 19-ம் நூற்றாண்டில் 83 லட்சமாகவும், 20-ம் நூற்றாண்டின் முதல் 86 வருடங்களில் 9 கோடியே 88 லட்சமாகவும் இருந்தன. 18-ம் நூற்றாண்டு முதற்கொண்டு, யுத்த மரணங்கள் உலக ஜனத்தொகையைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிக வேகமாக அதிகரித்திருக்கின்றன. 19-ம் நூற்றாண்டுடன் ஒப்பிடும்போது 20-ம் நூற்றாண்டில் இந்த ஒவ்வொரு யுத்தத்திலும் பத்து மடங்குக்கும் மேலாக மரணங்கள் நிகழ்ந்தன.

[பக்கம் 247-ன் படம்]

சிவப்புநிற மூர்க்க மிருகத்தைக் குறித்து தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டது போல இரண்டாம் உலக யுத்தத்தின்போது சர்வதேச சங்கம் அபிஸ்ஸில் தள்ளப்பட்டது, ஆனால் ஐக்கிய நாட்டுச் சங்கமாக மீண்டெழுந்தது

[பக்கம் 249-ன் படம்]

ஐநா-வின் ‘சமாதான ஆண்டை’ ஆதரிக்கும்விதமாக உலக மதங்களின் பிரதிநிதிகள் இத்தாலியிலுள்ள அஸிஸியில் குழப்பமான ஜெபங்களை ஏறெடுத்தனர், ஆனால் அவர்களில் ஒருவர்கூட ஜீவனுள்ள தேவனாகிய யெகோவாவிடம் ஜெபிக்கவில்லை